காரணம் இது தான் – தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால்
தமிழ் சினிமாவுக்கு கூடுதல் வரியை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சின்ன பட்ஜெட் படங்கள் பெரியளவில் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் இதற்காக வேலைநிறுத்தப் போராட்டத்தை மிகப்பெரியளவில் நடத்துவதாக தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் அறிவித்திருந்தார்.
தற்போது மே 30ம் தேதி நடக்கவிருந்த அந்த போராட்டத்தை கைவிடுதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து விஷால் கூறுகையில், தணிக்கை முடிந்து வரிச் சலுகை சான்றிதழ் வாங்கி ஜுனில் வெளியாக நிறைய படங்கள் தயாராக உள்ளது. ஜுலையில் வெளியிட்டால் ஜி.எஸ்.டி வரிச் சேர்ந்து வெளியிடும் சூழல் ஏற்படும் என்றார்கள். தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்வமணியும் இது தொடர்பாக பேசினார்கள். மேலும், செல்வமணி சாரும் எங்களுடைய வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு தருவதாக கூறினார் என்றார்.
மேலும், க்யூப் பிரச்சினை, கேபிள் டிவி ஓழுங்குமுறை, டிக்கெட் கட்டண நிர்ணயம் உள்ளிட்ட பலவிஷயங்களை பகிர்ந்து கொண்டார்.