ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படும் MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடரின் அணிகள் தரப்படுத்தலில் மூன்றாம் வார நிறைவில் Cougars துடுப்பாட்டக் கழகம் முதல் இடத்திக்கு முன்னேறியது

2,005

மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால மென்பந்து போட்டித்தொடரின் ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் சிறப்புமிக்கதும், பாரம்பரியதுமான MTCL Super League Challenge Trophy போட்டித்தொடரின் மூன்றாவது வாரச்சுற்றுப்போட்டிகள் கடந்த 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (June 10th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க் (IDEAL DEVELOPMENT PARK) மைதானத்தில் இடம்பெற்றது. இந்த வாரப்போட்டிகளை Atlas-A துடுப்பாட்ட அணியும், Blackcats துடுப்பாட்ட அணியும் பொறுப்பேற்று நடத்தினர். இந்த வாரப்போட்டிகள் உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு உரிய நேரத்தில் முடிக்கப்பட்டது. போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க உதவிய இரு அணியினருக்கும் MTCL அமைப்பினர் தமது நன்றிகளை தெரிவிக்கின்றனர்.

MTCL Super League Challenge Trophy போட்டித்தொடரின் இரண்டாவது வார நிறைவில் அதிக ஓட்டங்களை பெற்று முன்னிலையில் இருந்த வீரரான Atlas துடுப்பாட்ட அணியை சேர்ந்த ஜதுர்ஷன் சந்நிதானந்தன்(Jathurshan Sanininathan) அவர்களுக்கு செம்மஞ்சள் நிறத்(Orange Cap) தொப்பியும், அதிக ஆட்டமிழப்புக்களை எடுத்து முன்னிலையில் இருந்த வீரரான Cougars துடுப்பாட்ட அணியை சேர்ந்த கபிலாஷ் அழகையா(kapilash Alakaiah) அவர்களுக்கு ஊதா நிறத்(Purple Cap)தொப்பியும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை இந்த வார சிறப்பம்சங்களில் ஒன்றாகும். மேலும் அணிகள் தரப்படுத்தலில் Cougars அணி 8 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகள் ஒரு தோல்வி அடங்கலாக முதலாம் இடத்திற்கு முன்னேறியது. சென்ற வாரம் முதலாம் இடத்திலிருந்த Inuvil Boys அணி இந்த வார போட்டிகளின் அடிப்படையில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. அத்துடன் GPS அணி சிறந்த முறையில் விளையாடி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது. Cougars துடுப்பாட்ட அணி தமது முதலாமிட இஸ்தானத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளுமா அல்லது GPS, Inuvil Boys அணிகள் முதலாம் இடத்திற்கு முன்னேறுமா என்பதை இனிவரும் வாரங்களில் நாம் அறிந்துகொள்ளலாம். கடந்த வாரம் TamilKings அணியை சேர்ந்த மதிராஜ் திருச்செல்வம்(Mathiraj Thiruchelvam), Eelam Kings அணியை சேர்ந்த நந்திராஜன் நந்தி(Nandirajan Nandi) மற்றும் Youngstars அணியை சேர்ந்த தீபன் மகேஷ்(Theepan Mahesh) ஆகிய மூவரும் தொடர்ந்து மூன்று பந்துகளில் மூன்று ஆட்டமிழப்புக்களை(Hat trick) எடுத்தமை அனைவராலும் பாராட்டப்படவேண்டிய விடயமாகும். மறுமொரு சிறப்பம்சமாக Cougars அணியை சேர்ந்த விதுஷன் அழகையா(Vithusan Alakaiah) தொடர்ந்து இரு போட்டிகளில் அரைச்சதம் விளாசி தனது துடுப்பாட்டத்திறமையை வெளிப்படுத்தினார்.

இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)

1.ஜதுர்ஷன் சந்நிதானந்தன்(Jathurshan Sanininathan) of Atlas CC – 74* ஓட்டங்கள் Vs NCC
2.விதுஷன் அழகையா(Vithusan Alakaiah) of Cougars CC – 67 ஓட்டங்கள் Vs Eelam Kings CC
3.விதுஷன் அழகையா(Vithusan Alakaiah) of Cougars CC – 65 ஓட்டங்கள் Vs Western CC
4.பரன்தாமன் செல்வரத்தினம்(Paranthaman Selvaratnam) of Cougars CC – 52 ஓட்டங்கள் VS Eelam Kings CC
5.நிஷாந்தன் இலங்கேஸ்வரன்(Nisanthan Ilangeswaran) of BlueBirds CC – 50* ஓட்டங்கள் Vs United CC
6.நிதின்(Nithen) of Tamil Kings CC – 49 ஓட்டங்கள் Vs Cougars CC
7.ஜெரோம் அந்தோனி(Jerome Anthony) of NCC – 49 ஓட்டங்கள் Vs B-Town Boys CC
8.நந்தன் கந்தையா(Nanthan Kandiah) of BlueBirds CC – 48 ஓட்டங்கள் Vs United CC
9.சிவதர்சன் நாதன்(Sivatharshan Shanmuganathan) of GPS CC – 48 ஓட்டங்கள் Vs B-Town Boys CC
10.ஜூட் மாசிலாமணி(Jude Masilamani) of B-Town Boys CC – 43 ஓட்டங்கள் Vs NCC
11.நவதீப் சிங்(Navdeep Singh) of United CC – 43 ஓட்டங்கள் Vs Western CC
12.சஞ்சீவ் மாயாண்டி(Sanjeev Mayandi) of Eelam Kings CC – 42 ஓட்டங்கள் Vs Cougars CC
13.சனா நாதன்(Sana Nathan) of B-Town Boys CC – 41 ஓட்டங்கள் Vs GPS CC

சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
1.பிரேரக் கஜ்ஜர்(Prerak Gajjar) of BlueBirds SC – 6 ஆட்டமிழப்புக்கள் Vs Tamil Kings CC(3-1-14-6)
2.ரஞ்சித் ஸ்ரீதரன்(Ranjith Sritharan) of GPS CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Tamil Kings CC(3-1-5-4)
3.தீபன் மகேஷ்(Theepan Mahesh) of Youngstars CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Inuvil Boys CC(1-0-6-4)
4.மதிராஜ் திருச்செல்வம்(Mathiraj Thiruchelvam) of Tamil Kings CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs BlueBirds CC(3-0-17-4)
5.செந்தூரன் ஸ்ரீபதி(Senthuran Sripathy) of Eelam Kings CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs B-Town Boys CC(3-0-21-4)
6.கிஷாந்தன் குமாரன்(Kishanthan Mathavakumaran) of Inuvil Boyz CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Trimountain CC(2-0-25-4)
7.கிஷாந்தன் குமாரன்(Kishanthan Mathavakumaran) of Inuvil Boyz CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs GPS CC(3-0-26-4)

சிறந்த பிடியெடுப்புக்கள்(BEST CATCHES)
1.சசிதரன் குலசேகரம்(Sasitharan Kulasegaram) of United CC Vs Inuvil Boys CC
2.லஹிஷன் சத்தியநாதன்(Laheesan Saththiyanathan) of Inuvil Boys CC Vs United CC
3.குகதீபன் சதானந்தனேசன்(Theepan Sathananthanesan) of BlueBirds CC Vs Tamil Kings CC
4.பிரசாத் ரத்னகோபால்(Prasath Ratnagopal) of Eelam Kings CC Vs Cougars CC
5.நிதர்சன நிதன்(Nitharsan Nithan) of Atlas CC Vs NCC
6.வசி குணரட்ணம்(Vasee Kunaratnam) of NCC Vs Atlas CC
7.ஜெயகாந்த் முருகன்(Jeyakanth Murugan) of NCC Vs Trimountain CC
8.லவன் & ரஞ்சித்(Lavan & Ranjith) of GPS CC Vs Inuvil Boyz CC
9.நகீவ்(Nageev) of Tamil Kings CC Vs Trimountain CC
10.கபிலாஷ் அழகையா(kapilash Alakaiah)) of Cougars CC Vs Eelam Kings CC
11.ஜனா சந்திரன்(Jana Chandran) of Cougars CC Vs Eelam Kings CC
12.தர்சன் ரத்னசபாபதி(Tharsan Ratnasapapathy) of Cougars CC Vs Western CC
13.நந்திராஜன் நந்தி(Nandirajan Nandi) of Eelam Kings CC Vs Atlas CC
14.கிஷோத் விஜேயரட்ணம்(Kishoth Vijeyaratnam) of Youngstars CC Vs Atlas CC

மேலதிக தொடர்புகளுக்கு www.mtcl.info
Facebook: https://wwwfacebook.com/mtcl.cricket

Comments
Loading...