மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்த மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் 24வது வருட கோடை கால மென்பந்து துடுப்பாட்ட போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு மற்றும் மூன்றாவது வருட வீடு விற்பனை முகவர் கவி(3RD ANNUAL REALTOR KAVI CHALLENGE TROPHY)சுற்றுக்கிண்ணப் போட்டிகள்!!!
மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் 24வது வருட கோடை கால மென்பந்து துடுப்பாட்ட போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு கடந்த 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (May 20th) அன்று ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(IDEAL DEVELOPMENT PARK )மைதானத்தில் மிகவும் விமர்சையாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சிக்கு ரீமஸ் வீடு விற்பனை முகவர்(Remax Sale Representative) ஜெய் நடராஜா(JAY NADARAJAH) பிரதான அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்
அன்றைய தினமே, மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால துடுப்பாட்ட போட்டிகளின் முதலாவது நொக் அவுட்(KNOCKOUT) துடுப்பாட்டப்போட்டிகளும் ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் இடம்பெற்றது. REALTOR KAVI CHALLENGE TROPHY தொடரானது மூன்றாவது வருடமாக அன்றைய தினம் நடாத்தப்பட்டமை சிறப்பம்சமாகும். இத்தொடருக்கு வீடு விற்பனை முகவர் கவி நாகராஜா(Kavi Nagarajah) பிரதான அனுசரணை வழங்கியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். இத்தொடரை MTCL அமைப்பினரும், கவி நாகராஜா(Kavi Nagarajah)வும் பொறுப்பேற்றுச் சிறந்த முறையில் நடத்தி முடித்தனர்.
மூன்றாவது REALTOR KAVI CHALLENGE TROPHY தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு Youngstars CC, Cougars CC, Atlas CC மற்றும் Toronto Blues CC ஆகிய நான்கு அணிகள் தகுதிபெற்றதுடன் Toronto Blues CC அணிக்கும் Youngstars CC அணிக்கும் இடையிலான போட்டியில் Youngstars CC அணியும், Atlas CC அணிக்கும் Cougars CC அணிக்கும் இடையிலான போட்டியில் Cougars CC அணியும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Youngstars CC அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Cougars CC அணி 12 ஓவர்கள் நிறைவில் மூன்று விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 137 ஓட்டங்களை விளாசினார்கள். துடுப்பாட்டத்தில் cougars CC அணியை சேர்ந்த விதுஷன் அழகையா(Vithusan Alakaiah) ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் Youngstars CC அணியை சேர்ந்த சுகந்தன் தணிகாசலம்(Suganthan Thaniyasalam) 3 ஓவர்களில் 16 ஓட்டங்களைக் கொடுத்தார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Youngstars CC அணி 12 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 87 ஓட்டங்களை மட்டும் பெற்று 50 ஓட்டங்களால் தோல்வியடைந்தனர். துடுப்பாட்டத்தில் Youngstars CC அணியை சேர்ந்த தாயூரன் செல்வா(Thayuran Selva) 21 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் cougars CC அணியை சேர்ந்த கோபிநாத் நவரத்தினம்(Gopinath Navaratnam) சிறந்த முறையில் பந்து வீசி 3 ஓவர்களில் 17 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டத்தில் தனது பங்களிப்பை செய்த Cougars CC அணியை சேர்ந்த விதுஷன் அழகையா(Vithusan Alakaiah) தெரிவுசெய்யப்பட்டார்.
இறுதிப்போட்டியின் போட்டி நிலவரங்கள் சமூகவலைத்தளங்களில் நேரடிப் பதிவேற்றம் செய்யப்பட்டமை மேலுமொரு சிறப்பம்சமாகும். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற Cougars CC அணிக்கும், இரண்டாம் இடம் வந்த Youngstars CC அணிக்கும் MTCL அமைப்பினர் தமது பாராட்டுக்களைத் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றனர்.
இத்தொடரின் சிறந்த துடுப்பாட்டவீரராக Cougars CC அணியை சேர்ந்த விதுஷன் அழகையா(Vithusan Alakaiah) தெரிவுசெய்யப்பட்டதுடன் சிறந்த பந்துவீச்சாளராக Cougars CC அணியை சேர்ந்த கோபிநாத் நவரத்தினம்(Gopinath Navaratnam) தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக Atlas CC அணியை சேர்ந்த ஆனந்த் மணிமாறன்(Ananth Manimaran) தெரிவுசெய்யப்பட்டார்.
இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
1.பரன்தாமன் செல்வரத்தினம்(Paranthaman selva) of Cougars CC – 56 ஓட்டங்கள் Vs Inuvil Boys CC
2.விதுஷன் அழகையா(Vithusan Alakaiah) of Cougars CC – 50* ஓட்டங்கள் Vs Youngstars CC
3.கிஷோக் விஜயரட்ணம்(Kishok Vijeyaratnam) of Youngstars CC – 48* ஓட்டங்கள் Vs Toronto Blues CC
4.தர்சன் ரத்னசபாபதி(Tharsan Ratnasapapathy) of Cougars CC – 47 ஓட்டங்கள் Vs Youngstars CC
5.ஆனந்த் மணிமாறன்(Ananth Manimaran) of Atlas CC – 42 ஓட்டங்கள் Vs Atlas-A CC
சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
1.சபேசன் செல்வராஜா(Sabesan Selvarajah) of Toronto Blues CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs NCC(3-1-05-4)
2.ஆனந்த் மணிமாறன்(Ananth Manimaran) of Atlas CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Blackcats CC(3-0-10-4)
3.அரவிந்தன் சுந்தரலிங்கம்(Aravinthan Suntharalingam) of Youngstars CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs GPS CC(3-0-14-4)
சிறந்த பிடியெடுப்புக்கள்(BEST CATCHES)
1.சிந்துகன் சண்முகலிங்கம்(Sinthughan Shanmugalingam) of Trimountain CC Vs Blackcats CC
2.அணு விக்னேஷ்(Anu Vignesh) of Tamil Kings CC Vs Youngstars CC
மேலதிக விபரங்களுக்கு: Facebook/mtclcricket, www.mtcl.info