சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது பாகிஸ்தான்.

சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது பாகிஸ்தான்.

921

சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது பாகிஸ்தான்.

மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் பரபரப்புடன் மோதின. பரம வைரியான இரு அணிகள் இறுதிப்போட்டியில் மோதுவதால், உலகம் முழுவதும் யார் வெல்வார்கள் என எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. லண்டன் ஓவல் மைதானத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஓவர்களின் முடிவில் 338 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானில் ஃபகர் சமான் சதம் விளாசினார்.

இந்திய ஹாக்கி அணியின் வெற்றிக்கு காரணமான 3 சிங்கங்கள்!
இதையடுத்து 339 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய இந்தியா தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. தவான், ரோஹித், கோலி, யுவராஜ், தோனி என முன்னணி வீரர்கள் இந்திய அணி 50 ரன்கள் குவிப்பதற்குள் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிய, ஹார்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். இதில் 4 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியில் இந்திய அணி 30.3 ஓவர்கள் முடிவில் 158 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது பாகிஸ்தான்.

Comments
Loading...