ஆறாவது CMR சவால் சுற்றுக்கிண்ணத்தொடர்: Toronto Blues அணியை வீழ்த்தி வெற்றிக்கேடயத்தை தட்டிச்சென்றது Atlas-A அணி

1,417

ஆறாவது CMR சவால் சுற்றுக்கிண்ணத்தொடர்: Toronto Blues அணியை வீழ்த்தி வெற்றிக்கேடயத்தை தட்டிச்சென்றது Atlas-A அணி

மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால துடுப்பாட்ட போட்டிகளின் ஐந்தாவது சவால் சுற்றுக்கிண்ண(Knockout) துடுப்பாட்டப்போட்டிகள் கடந்த 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (August 12th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் இடம்பெற்றது. இந்த நொக் அவுட்(Knockout) தொடரானது ஆறாவது ஆண்டாக இந்தமுறை நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இத்தொடரை CMR FM நிர்வாகத்தினரும், MTCL அமைப்பினரும் பொறுப்பேற்று சிறந்த முறையில் நடத்தி முடித்தனர்.

ஆறாவது CMR சவால் சுற்றுக்கிண்ண(6th Annual CMR Challenge Trophy)தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு Youngstars துடுப்பாட்ட அணி, Atlas-A துடுப்பாட்ட அணி, கல்வியங்காடு GPS துடுப்பாட்ட அணி மற்றும் Toronto Blues துடுப்பாட்ட அணி ஆகிய நான்கு அணிகள் தகுதிபெற்றதுடன் Atlas-A துடுப்பாட்ட அணிக்கும் Youngstars துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான போட்டியில் Atlas-A துடுப்பாட்ட அணியும், கல்வியங்காடு GPS துடுப்பாட்ட அணிக்கும் Toronto Blues துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான போட்டியில் Toronto Blues துடுப்பாட்ட அணியும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இறுதிப்போட்டியானது சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டதோடு CMR அலைவரிசையிலும் நேரடி ஓட்டவிபரங்கள் ஒலிபரப்புச் செய்யப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Atlas-A துடுப்பாட்ட அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Toronto Blues துடுப்பாட்ட அணி 12 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் Toronto Blues துடுப்பாட்ட அணியை சேர்ந்த சுத்த பரமலிங்கம்(Suthakaran Paramalingam) 19 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் Atlas-A துடுப்பாட்ட அணியை சேர்ந்த மனோராஜ் தர்மராஜா(Manoraj Tharmarajah) 3 ஓவர்களில் 20 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பெற்றினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Atlas-A துடுப்பாட்ட அணி 11 ஓவர்கள் நிறைவில் ஐந்து விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 82 ஓட்டங்களைப் பெற்று ஐந்து விக்கெட்டுக்களால் வெற்றியை தமதாக்கிக் கொண்டனர். துடுப்பாட்டத்தில் Atlas-A துடுப்பாட்ட அணியை சேர்ந்த ஆதில் சனீர்(Aadhil Zaneer) 32 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் Toronto Blues துடுப்பாட்ட அணியை சேர்ந்த சபேசன் செல்வராஜா(Sabesan Selvarajah) சிறந்த முறையில் பந்து வீசி 3 ஓவர்களில் 19 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டத்தில் தனது பங்களிப்பை செய்த Atlas-A துடுப்பாட்ட அணியை சேர்ந்த ஆதில் சனீர்(Aadhil Zaneer) தெரிவுசெய்யப்பட்டார். வெற்றிக்கேடயத்தை கைப்பற்றிய Atlas-A துடுப்பாட்ட அணிக்கும் இரண்டாம் இடம் வந்த Toronto Blues துடுப்பாட்ட அணிக்கும் MTCL அமைப்பினரும், CMR நிர்வாகத்தினரும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.

இத்தொடரின் சிறந்த துடுப்பாட்டவீரராக மூன்று போட்டிகளில் மொத்தமாக 98 ஓட்டங்களைப் பெற்ற Youngstars அணியை சேர்ந்த தயூரன் செல்வராசா(Thayuran Selvarasa) தெரிவுசெய்யப்பட்டதுடன் சிறந்த பந்துவீச்சாளராக 3 போட்டிகளில் 9 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய Toronto Blues அணியை சேர்ந்த சபேசன் செல்வராஜா(Sabesan Selvarajah) தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக 4 போட்டிகளில் மொத்தமாக 78 ஓட்டங்களையும், 7 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய Atlas-A அணியை சேர்ந்த மனோராஜ் தர்மராஜா(Manoraj Tharmarajah) தெரிவுசெய்யப்பட்டார்.

இத்தொடரின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
1.தயூரன் செல்வராசா(Thayuran Selvarasa) of Youngstars CC – 49* ஓட்டங்கள் VS United CC
2.ஜெய் முனியன்(Jey Muniyan) of Atlas-A CC – 46 ஓட்டங்கள் VS NCC
3.அன்றிவ் ஜார்ஜ்(Andrew George) of B-Town Boys CC – 45* ஓட்டங்கள் VS Youngstars CC
3.மனோராஜ் தர்மராஜா(Manoraj Tharmarajah) of Atlas-A CC – 44* ஓட்டங்கள் VS Eelam Kings CC
4.கிஷோக் விஜேயரட்ணம்(Kishok Vijeyaratnam) of Youngstars CC- 42* ஓட்டங்கள் VS B-Town Boys CC
5.கண்ணா சாந்தகுமார்(Kanna Shanthakumar) of Eelam Kings CC – 42* ஓட்டங்கள் VS Atlas-A CC
6.மிராஜ் தேவானந்தன்(Mirajh Devanandan) of Inuvil Boys CC- 42 ஓட்டங்கள் VS GPS CC
7.திபாகரன் தேவராசா(Thibakaran Thevarasa) of Inuvil Boys CC- 41 ஓட்டங்கள் VS GPS CC

சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
1.கார்த்திக் முத்துராசா(Karthik Muthurasa) of BlackCats CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS Atlas CC (3-0-06-4)
2.சபேசன் செல்வராஜா(Sabesan Selvarajah) of Toronto Blues CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS BlackCats CC (3-0-11-4)
3.நந்திராஜன் நந்தி(Nandirajan Nandi) of Eelam Kings CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS Cougars CC (3-0-17-4)
4.நந்திராஜன் நந்தி(Vishnuvarthan Ratnam) of Trimountain CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS Inuvil Boys CC (3-0-21-4)
5.ஜூதர்ஷன் பரன்சோதி(Jutharsan Paransothy) of GPS CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS Inuvil Boys CC (3-0-31-4)
6.கார்த்திக் மணிமாறன்(Karthik Manimaran) of Atlas CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS BlackCats CC (3-0-31-4)

சிறந்த பிடியெடுப்புக்கள்(BEST CATCHES)
1.பிரஷாந்த் சந்திரன்(Prashanth Chandiran of GPS CC VS Toronto Blues CC
2.மிராஜ் தேவானந்தன்(Mirajh Devanandan) of Inuvil Boys CC VS Trimountain CC
3.ஜூட் மாசிலாமணி(Jude Denneiex Masilamani) of Inuvil Boys Toronto CC VS GPS CC
4.பென்னி(Benny) of Trimountain CC VS Inuvil Boys CC
5.திவ்யன் ரட்ணசிங்கம்(Thivyan Ratnasingam) of Youngstars CC VS Atlas-A CC
6.அரவிந்தன் சுந்தரலிங்கம்(Aravinthan Suntharalingam) of Youngstars CC VS Atlas-A CC

மேலதிக தொடர்புகளுக்கு www.mtcl.info

Comments
Loading...