நான்காவது வருட வீடு முகவர் கவி(4TH ANNUAL REALTOR KAVI CHALLENGE TROPHY)சுற்றுக்கிண்ணத்தை தட்டிச்சென்றது Toronto Blues அணி

1,382

நான்காவது வருட வீடு முகவர் கவி(4TH ANNUAL REALTOR KAVI CHALLENGE TROPHY)சுற்றுக்கிண்ணத்தை தட்டிச்சென்றது Toronto Blues அணி 

மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால துடுப்பாட்ட போட்டிகளின் முதலாவது நொக் அவுட்(KNOCKOUT) துடுப்பாட்டப்போட்டிகள் கடந்த 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை(May 19th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் இடம்பெற்றது. REALTOR KAVI CHALLENGE TROPHY தொடரானது தொடர்ந்து நான்காவது வருடமாக நடாத்தப்பட்டமை சிறப்பம்சமாகும். இத்தொடருக்கு வீடு விற்பனை முகவர் கவி நாகராஜா(Kavi Nagarajah) பிரதான அனுசரணை வழங்கியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். இத்தொடரை  MTCL அமைப்பினரும், கவி நாகராஜா(Kavi Nagarajah)வும் பொறுப்பேற்றுச் சிறந்த முறையில் நடத்தி முடித்தனர்.

நான்காவது REALTOR KAVI CHALLENGE TROPHY தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு Rockets CC, Cougars CC, GPS CC மற்றும் Toronto Blues CC ஆகிய நான்கு அணிகள் தகுதிபெற்றதுடன் Toronto Blues CC அணிக்கும் GPS CC அணிக்கும் இடையிலான போட்டியில் Toronto Blues CC அணியும், Rockets CC அணிக்கும் Cougars CC அணிக்கும் இடையிலான போட்டியில் Cougars CC அணியும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. 

இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Toronto Blues CC அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Cougars CC அணி 10 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் cougars CC அணியை சேர்ந்த கபிலாஷ் அழகையா(kapilash Alakaiah) ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் Toronto Blues CC அணியை சேர்ந்த நேசன் அமிர்தலிங்கம்(Nesan Amirthalingam) 2 ஓவர்களில் வெறும் 11 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பெற்றினார். 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Toronto Blues CC அணி 9.4 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்று ஒரு விக்கெட்டினால் வெற்றி பெற்று கேடயத்தை தாமதாக்கிக் கொண்டனர். துடுப்பாட்டத்தில் Toronto Blues CC அணியை சேர்ந்த நேசன் அமிர்தலிங்கம்(Nesan Amirthalingam) 38 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். பந்துவீச்சில் cougars CC அணியை சேர்ந்த கபிலாஷ் அழகையா(kapilash Alakaiah) சிறந்த முறையில் பந்து வீசி 2 ஓவர்களில் 16 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டத்தில் மற்றும் பந்துவீச்சில் தனது பங்களிப்பை செய்த Toronto Blues CC அணியை சேர்ந்த நேசன் அமிர்தலிங்கம்(Nesan Amirthalingam) தெரிவுசெய்யப்பட்டார். 

இறுதிப்போட்டியானது சமூகவலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்புச்செய்யப்பட்டமை மேலுமொரு சிறப்பம்சமாகும். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற Toronto Blues CC அணிக்கும், இரண்டாம் இடம் வந்த Cougars CC அணிக்கும் MTCL அமைப்பினர் தமது பாராட்டுக்களைத் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றனர்.  

இத்தொடரின் சிறந்த துடுப்பாட்டவீரராக Cougars CC அணியை சேர்ந்த பரன்தாமன் செல்வரத்தினம்(Paranthaman selvaratnam) தெரிவுசெய்யப்பட்டதுடன் சிறந்த பந்துவீச்சாளராக Toronto Blues CC அணியை சேர்ந்த நேசன் அமிர்தலிங்கம்(Nesan Amirthalingam) தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக Cougars CC அணியை சேர்ந்த கபிலாஷ் அழகையா(kapilash Alakaiah) தெரிவுசெய்யப்பட்டார்.

இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
1.பரன்தாமன் செல்வரத்தினம்(Paranthaman selvaratnam) of Cougars CC – 40 ஓட்டங்கள் VS Atlas-A CC

சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
1.தனுஷன் சுப்பிரமணி(Thanushan Subra) of Rockets CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS Sunsea CC(2-1-06-5)
2.நேசன் அமிர்தலிங்கம்(Nesan Amirthalingam) of Toronto Blues CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS Cougars CC(2-0-11-4)
3.ஷங்கர் கோபால்(Umashankar Gopalasundram) of Blackcats CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS Cougars CC(2-0-13-4)

மேலதிக விபரங்களுக்கு:  www.mtcl.info

Comments
Loading...