JJ REAL TEAM ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் மதிப்புமிக்கதுமான MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடரின் நான்காவது வார நிலவரம்

1,335

JJ REAL TEAM ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் மதிப்புமிக்கதுமான MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடரின் நான்காவது வார நிலவரம்

மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால மென்பந்து போட்டித்தொடரின் JJ REAL TEAM ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் மதிப்புமிக்கதுமான MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடரின் நான்காவது வாரச்சுற்றுப்போட்டிகள் கடந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (June 16th) அன்று MTCL மைதானத்தில் இடம்பெற்றது. இந்த வாரப்போட்டிகளை Inuvil Boys துடுப்பாட்ட அணியும், Rockets துடுப்பாட்ட அணியும் பொறுப்பேற்று சிறந்த முறையில் நடாத்தி முடித்தனர். இந்த வாரப்போட்டிகள் உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் நேர அட்டவணையை கடைப்பிடித்து உரிய நேரத்தில் முடிக்கப்பட்டது. போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க உதவிய இரு அணியினருக்கும் MTCL அமைப்பினர் தமது நன்றிகளை தெரிவிக்கின்றனர்.

MTCL Super League Challenge Trophy போட்டித்தொடரின் மூன்றாவது வார நிறைவில் தொடர்ந்து மூன்று வாரங்களாக அதிக ஓட்டங்களைப் பெற்று முன்னிலையில் இருக்கும் வீரரான NCC துடுப்பாட்ட அணியை சேர்ந்த ஜெயகாந்த் முருகன்(Jeyakanth Murugan) அவர்கள் செம்மஞ்சள் நிறத்(Orange Cap) தொப்பியைத் தன்வசம் தக்கவைத்துக்கொண்டதுடன், மூன்று வாரங்கள் நிறைவில் அதிக ஆட்டமிழப்புக்களை எடுத்து Atlas CC அணியை சேர்ந்த ஆனந்த் மணிமாறன்(Ananth Manimaran) முதலாமிடத்திக்கு முன்னேறியதுடன் ஊதா நிறத்(Purple Cap)தொப்பியை தன்வசமாக்கி கொண்டமையும் இந்த வார சிறப்பம்சங்களில் சிலவாகும்.

இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
1.துஸ்யந்தன் திரவியம்(Thushyanthan Thiraviyam) of Knights CC – 59 ஓட்டங்கள் vs BlueBirds CC
2.சிவரூபன் ரத்னம்(Sivaruban Ratnam) of Blackcats CC – 55 ஓட்டங்கள் vs NCC
3.பிரகாஷ் புஷ்பராஜா(Prakash Pushparajah) of BlueBirds CC – 47 ஓட்டங்கள்(N.O) vs Knights CC
4.சயன் தம்பிராஜா(Sajanthan Thambirajah) of Toronto Blues CC – 45 ஓட்டங்கள் vs Knights CC
5.தயூரன் செல்வராஜா (Thayuran Selvarajah) of Youngstars CC – 42 ஓட்டங்கள் vs BlueBirds CC
6.லட்சுமண் ஜோசப்(Luxshman Joseph) of AtlasA CC – 41 ஓட்டங்கள் vs Sunsea CC

சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
1.நிதுசன் சிவகுமார்(Nithushan Sivakumar) of Eelam Kings CC – 4 ஆட்டமிழப்புக்கள் vs NCC(3-1-04-4)
2.தினுஷன் ராஜா(Thinushan Pathmarajah) of Blackcats CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs NCC (3-1-8-4)
3.கிஷோன் ஜீவராஜா(Kishon Jivarajah) of Blackcats CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs NCC (3-0-9-4)
4.நிரோஷன் ராஜேந்திரன்(Niroshan Rajandiran) of Sunsea CC – 4 ஆட்டமிழப்புக்கள் vs Cougars CC(3-0-09-4)
5.வினோத் தவராஜா(Vinoth Thavarajah ) of GPS CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs BlueBirds CC(2.3-0-9-4)
6.ரஞ்சித் சிறீதரன்(Ranjith Sritharan) of GPS CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs BlueBirds CC(3-1-10-4)
7.ஜெயகாந்த் பொன்னம்பலம்(Jayakanth Ponnampalam) of NCC – 4 ஆட்டமிழப்புக்கள் vs Eelam Kings CC(2.4-0-10-4)
8.முரளி பரமானந்தம்(Murali Paramanantham) of BlueBirds CC – 4 ஆட்டமிழப்புக்கள் vs GPS CC(3-0-11-4)
9.அருண் பரன்சோதி(Arun Paramsothy) of NCC – 4 ஆட்டமிழப்புக்கள் vs Eelam Kings CC(2-0-12-4)
10.சுகந்தன் தணிகாசலம்(Suganthan Thanikasalam) of Youngstars CC – 4 ஆட்டமிழப்புக்கள் vs Knights CC(3-1-12-4)
11.டிலோ ஜாண்(Dilo John) of Knights CC – 4 ஆட்டமிழப்புக்கள் vs Youngstars CC(3-0-13-4)
12.அஜித் பாலன்(Ajith Balan) of B-Town Boys CC – 4 ஆட்டமிழப்புக்கள் vs Atlas-A CC(3-1-13-4)
13.தினேஷ் குகன்(Dinesh Kugan) of United CC – 4 ஆட்டமிழப்புக்கள் vs NCC(3-0-15-4)
14.ஜெய் முனியன்(Jey Muniyan) of Atlas-A CC – 4 ஆட்டமிழப்புக்கள் vs B-Town Boys CC(3-0-24-4)

மேலதிக தொடர்புகளுக்கு www.mtcl.info
Facebook: https://wwwfacebook.com/mtcl.cricket

Comments
Loading...