MTCL அமைப்பினரால் சிறப்பாக நடாத்தப்பட்ட நான்காவது கேப்டன் இசையரசன் நினைவகத்தொடரின் வெற்றிகிண்ணத்தை தட்டிச்சென்றது Youngstars துடுப்பாட்டக் கழகம்

2,005

MTCL அமைப்பினரால் சிறப்பாக நடாத்தப்பட்ட நான்காவது கேப்டன் இசையரசன் நினைவகத்தொடரின் வெற்றிகிண்ணத்தை தட்டிச்சென்றது Youngstars துடுப்பாட்டக் கழகம்

மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால துடுப்பாட்ட போட்டிகளின் மூன்றாவது சவால் கிண்ணத்(KNOCKOUT) துடுப்பாட்டப்போட்டிகள் கடந்த 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை(July 28th) MTCL(MTCL Park) மைதானத்தில் இடம்பெற்றது. இந்த சவால் கிண்ணத்(KNOCKOUT) தொடரானது கேப்டன் இசையரசன்(In Memory of Jeyharan Tharmalingam‬)அவர்களின் நினைவாக இந்த ஆண்டு நான்காவது வருடமாக மிகச்சிறந்த முறையில் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இத்தொடரை ஜார்விஸ்(Jarvis Sport Club) விளையாட்டுக் கழக உறுப்பினர் மகிந்தன்(Mahinthan Tharmalingam) அவர்களும் , MTCL அமைப்பினரும் பொறுப்பேற்று சிறந்த முறையில் நடத்தி முடித்தனர்.

அமரர் கேப்டன் இசையரசன்(Jeyharan Tharmalingam) அவர்கள் தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட சிறந்த மாவீரர்களில் ஒருவராவார். அன்னார் 1996ம் ஆண்டு இடம்பெற்ற முல்லைத்தீவு தாக்குதலில் வேவுபுலியாக கடமையாற்றி தன்மக்களின் உரிமைப்போராட்டத்திற்காக வீரமரணம் அடைந்தார். அன்னாரின் நினைவுகளை சுமந்து வரும் தர்மலிங்கம் குடும்பத்தினர், MTCL அமைப்பினருடன் சேர்ந்து இத்தொடரை மூன்றாவது வருடமாக இந்த வருடம் நடாத்தியமை இங்கு குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும்.

நான்காவது கேப்டன் இசையரசன் நினைவகத்(4th Annual Captain ISAIYARASAN Memorial Challenge Trophy)தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு Cougars, Eelam Kings, Trimountain மற்றும் Youngstars ஆகிய நான்கு அணிகள் தகுதிபெற்றதுடன் Cougars அணிக்கும் Trimountain அணிக்கும் இடையிலான போட்டியில் Cougars அணியும், Youngstars அணிக்கும் EelamKings அணிக்கும் இடையிலான போட்டியில் Youngstars அணியும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இறுதிப்போட்டியானது சமூக வலைத்தளங்களிலும், KVM தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டமை அனைவரது பாராட்டுக்களை பெற்றதுடன் பலநூற்றுக்கணக்கான ரசிகர்களும் பார்த்து மகிழ்ந்தனர்.

இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Cougars அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Youngstars அணி 10 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து 91 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் Youngstars அணியை சேர்ந்த அரவிந்தன் சுந்தரலிங்கம்(Aravinthan Suntharalingam) மிகச்சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடி 40 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் Cougars அணியை சேர்ந்த கிருபா தம்பிரத்னம்(Kirupa Thambiratnam) 2 ஓவர்கள் பந்து வீசி 13 ஓட்டங்களைக் கொடுத்து 1 விக்கெட்டினை கைப்பற்றினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Cougars அணி 9.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 65 ஓட்டங்களைப் பெற்று 26 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவினார்கள். துடுப்பாட்டத்தில் Cougars அணியை விதுஷன் அழகையா(Vithusan Alakaiah) 34 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் Youngstars அணியை சேர்ந்த அரவிந்தன் சுந்தரலிங்கம்(Aravinthan Suntharalingam) சிறந்த முறையில் பந்து வீசி 2 ஓவர்களில் 20 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு பெரும்பங்காற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக சகல துறைகளிலும் தனது பங்களிப்பை செய்த Youngstars அணியை சேர்ந்த அரவிந்தன் சுந்தரலிங்கம்(Aravinthan Suntharalingam) தெரிவுசெய்யப்பட்டார். இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற Youngstars துடுப்பாட்ட அணியினருக்கு வெற்றிக்(Winners)கேடயம் வழங்கப்பட்டதுடன், இரண்டாம் இடம் வந்த Cougars துடுப்பாட்ட அணியினருக்கு இரண்டாம்(Runners-Up)இடக்கேடயமும் வழங்கப்பட்டமை விசேட அம்சங்களில் சிலவாகும்.

இத்தொடரின் சிறந்த துடுப்பாட்டவீரராக Cougars அணியை விதுஷன் அழகையா(Vithusan Alakaiah) தெரிவுசெய்யப்பட்டதுடன், சிறந்த பந்துவீச்சாளராக Eelam Kings அணியை சேர்ந்த நிதுசன் சிவகுமார்(Nithushan Sivakumar) தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக Youngstars அணியை சேர்ந்த அரவிந்தன் சுந்தரலிங்கம்(Aravinthan Suntharalingam) தெரிவுசெய்யப்பட்டார்.

மேலதிக தொடர்புகளுக்கு: www.mtcl.info                
Facebook: https://wwwfacebook.com/mtcl.cricket

Comments
Loading...