மிகப்பிரம்மாண்டமாக நடந்து முடிந்த MTCL அமைப்பின் JJREAL TEAM SUPER LEAGUE CHALLENGE TROPHY: வெற்றிக்கேடயத்தை தட்டிச்சென்றது TRIMOUNTAIN விளையாட்டுக்கழகம்

மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால மென்பந்து போட்டித்தொடரில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்ததும், JJREALTEAM முகவர் ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதுமான MTCL Super League Challenge Trophy தொடரின் PLAYOFF போட்டிகள் கடந்த சனி மற்றும் ஞாயிறு(August 31st & September 1st) ஆகிய இரு தினங்களில் மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக் பார்க்(MTCL Park) மைதானத்தில் இடம்பெற்றது. மொத்தமாக 18 அணிகள் இக்கேடயத்தை கைப்பற்றுவதற்காக போட்டிக்களத்தில் இறங்கின. இவற்றுள் முதல் எட்டு இடங்களை பிடித்த அணிகள் PLAYOFFஇல் விளையாட தகுதி பெற்றன. இவ்வெட்டு அணிகளும் தரவரிசையின் அடிப்படையில் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, அவற்றுக்கிடையில் போட்டிகள் நடாத்தப்பட்டு இருகுழுக்களிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப்போட்டிகளுக்கு நுழைந்ததோடு, அரையிறுதிப்போட்டிகளின் வெற்றியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதுடன், இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணி ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்பட்ட MTCL Super League Challenge Trophyயை கைப்பற்றும் விதமாக இத்தொடர் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இவ்வருட MTCL Super League Challenge Trophy தொடரின் அரையுறுதிப்போட்டிகளுக்கு Trimountain துடுப்பாட்ட அணி, Atlas-A துடுப்பாட்ட அணி, Toronto Blues துடுப்பாட்ட அணி, மற்றும் Blackcats துடுப்பாட்ட அணி ஆகிய நான்கு அணிகள் தகுதிபெற்றதுடன் Toronto Blues துடுப்பாட்ட அணிக்கும், Atlas-A துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய Toronto Blues துடுப்பாட்ட அணியும், Blackcats துடுப்பாட்ட அணிக்கும், Trimountain துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய Trimountain துடுப்பாட்ட அணியும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இறுதிப்போட்டியானது சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதுடன், போட்டி நிலவரங்கள் உடனுக்குடன் பதிவேற்றமும் செய்யப்பட்டது. Trimountain துடுப்பாட்ட அணியானது கடந்த இரண்டு வருடங்களாக MTCL அமைப்பில் பலம் வாய்ந்த அணியாகத் திகழ்வதோடு பல அனுபவம் வாய்ந்த வீரர்களைக் தன்னகத்தே கொண்டுள்ள அணியாகும். Toronto Blues துடுப்பாட்ட அணியானது MTCL அமைப்பின் முதுகெலும்பாக திகழ்வதோடு, பல வருடங்களாக MTCL அமைப்பில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகவும் வலம்வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கவேண்டிய விடயமாகும். மேலும் இவ்வருட முதலாமிட அணி தெரிவுப்போட்டியிலும் பலபரீட்சை நடாத்திவருகின்றனர்.

பல ரசிகர்கள் மைதானத்தில் குழுமியிருக்க ஞாயிற்றுக்கிழமை மதியம் இரண்டு மணியளவில் இறுதிப்போட்டி ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Toronto Blues அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தார். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Trimountain துடுப்பாட்ட அணி 14.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 80 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் Trimountain துடுப்பாட்ட அணியை சேர்ந்த டேமியன் மத்தியூஸ்(Damian Mathews) 28 ஓட்டங்களையும், பென்னி ஜான்(Benny John) 12 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் Toronto Blues துடுப்பாட்ட அணியை சேர்ந்த சபேசன் செல்வராஜா(Sabesan Selvarajah) 3 ஓவர்களில் 23 ஓட்டங்களை கொடுத்து 3 முக்கியமான விக்கெட்டுக்களை கைப்பற்றினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Toronto Blues துடுப்பாட்ட அணி 14.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 69 ஓட்டங்களைப் பெற்று 11 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவிக்கொண்டனர். துடுப்பாட்டத்தில் Toronto Blues துடுப்பாட்ட அணியை சேர்ந்த சயன் தம்பிராஜா(Sajanthan Thambirajah) 20 ஓட்டங்களையும், பிரணவன் அருள்ஜோதி(Pranavan Arutjothy) 17 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் Trimountain துடுப்பாட்ட அணியை சேர்ந்த செந்தூரன் தேவராசா(Senthuran Thevarasa) 3 ஓவர்களில் 14 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக சகலத்துறையிலும் தனது பங்களிப்பை செய்த Trimountain துடுப்பாட்ட அணியை சேர்ந்த டேமியன் மத்தியூஸ்(Damian Mathews) தெரிவுசெய்யப்பட்டார். மேலும் JJRealTeam MTCL Super League வெற்றிக்கேடயத்தை கைப்பற்றிய Trimountain துடுப்பாட்ட அணிக்கும் இரண்டாம் இடம் வந்த Toronto Blues துடுப்பாட்ட அணிக்கும் MTCL அமைப்பினர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.
பரிசளிப்பு நிகழ்வின் ஆரம்ப அம்சமாக இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த Toronto Blues துடுப்பாட்ட அணியினர் தமக்குரிய இரண்டாம் இடக்கேடயத்தை ஜெய்சுரேஷ் ஜெகநாத(Jeysuresh Jeganthan)னிடமிருந்து பெற்றுக்கொண்டனர். அடுத்ததாக Super League வெற்றிக்கேடயத்தை கைப்பற்றிய Trimountain துடுப்பாட்ட அணியினருக்கு வெற்றிக்கேடயம் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் வழங்கிக்கௌரவிக்கப்பட்டது. இறுதியாக போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்ட Trimountain துடுப்பாட்ட அணியை சேர்ந்த டேமியன் மத்தியூஸ்(Damian Mathews) அவர்களுக்கு கேடயம் வழங்கிக்கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து பலவருடங்களாக இச்சுற்றுத்தொடருக்கு அனுசரணை வழங்கிவரும் ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan) அவர்களுக்கு MTCL அமைப்பினர் தமது நன்றிகளை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றனர்.
இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
1.பரன் செல்வரத்தினம்(Paranthaman selvaratnam) of Cougars CC – 59 ஓட்டங்கள் vs Trimountain CC
2.மதி நாதன்(Mathivathanan Sithamparanathan) of Toronto Blues CC – 52 ஓட்டங்கள் vs Cougars CC
3.செந்தூரன் தேவராசா(Senthuran Thevarasa) of Trimountain CC – 44(N.O) ஓட்டங்கள் vs Cougars CC
3.தினுசன் பத்மராஜா(Thinushan Pathmarajah) of Blackcats CC – 44(N.O) ஓட்டங்கள் vs Atlas-A CC
4.தயூரன் செல்வராசா(Tharusan Selvarasa) of Youngstars CC – 43 ஓட்டங்கள் vs BlueBirds CC
5.குகதீபன் நேசன்(Kugatheepan Sathananthanesan) of BlueBirds CC – 40(N.O) ஓட்டங்கள் vs Youngstars CC
சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
1.டேமியன் மத்தியூஸ்(Damian Mathews) of Trimountain CC – 6 ஆட்டமிழப்புக்கள் vs GPS CC(3-0-08-6)
2.நேசன் அமிர்தலிங்கம்(Nesan Amirthalingam) of Toronto Blues CC – 5 ஆட்டமிழப்புக்கள் vs Atlas-A CC(3-0-20-5)
3.கோபிநாத் நவரத்தினம்(Gopinathah Navarathnam) of BlueBirds CC – 5 ஆட்டமிழப்புக்கள் vs Youngstars CC(3-0-25-5)
மேலதிக தொடர்புகளுக்கு www.mtcl.info