MTCL அமைப்பின் 23வது வருட கோடை கால மென்பந்து துடுப்பாட்ட போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு
மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்த மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் 23வது வருட கோடை கால மென்பந்து துடுப்பாட்ட போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு
மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் 23வது வருட கோடை கால மென்பந்து துடுப்பாட்ட போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு கடந்த 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (May 21st) அன்று ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(IDEAL DEVELOPMENT PARK )மைதானத்தில் மிகவும் விமர்சையாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சிக்கு மெகா பைனான்சியல் காப்புறுதி முகவர்(Mega Financial Insurance Broker) ஜெய் நடராஜா(JAY NADARAJAH) பிரதான அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த நிகழ்ச்சியானது கனடா நாட்டின் கொடியேற்றல் மற்றும் கனடா நாட்டு தேசியகீதம் இசைத்தலுடன் ஆரம்பமானது.
அடுத்த நிகழ்வாக MTCL அமைப்பின் கொடி ஏற்றல் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு Toronto City Councillor நீதன் ஷான்(Nethan Shan), Member of Provincial Parliament Scarborough-Rouge River டாக்டர் ரேமண்ட் சோ(Dr. Raymond Cho), மற்றும் Scarborough-Rouge Park Ontario Progressive Conservative Party Candidate விஜய் தணிகாசலம்(Vijay Thanigasalam) ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக வருகைதந்ததுடன் MTCL அமைப்புக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து சிறப்புரையும் ஆற்றினார்கள். மேலும் சிறப்பம்சமாக MTCL அமைப்பின் 23 வருடகால வளர்ச்சியை கௌரவப்படுத்தி Toronto City Councillor நீதன் ஷான்(Nethan Shan)னால் சிறப்புமடலும் வழங்கப்பட்டது.
அடுத்த நிகழ்வாக 2016 ஆண்டின் MOST VALUABLE PLAYER(MVP)ரான Youngstars அணியை சேர்ந்த அரவிந்தன் சுந்தரலிங்கம்(Aravinthan Suntharalingam)க்கு மெகா பைனான்சியல் காப்புறுதி முகவர்(Mega Financial Insurance Broker), மற்றும் MVP JACKETன் அனுசரணையாளருமான ஜெய் நடராஜா(Jay Nadarajah)னால் MVP Jacket அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அதன் பின்பு 2016ம் ஆண்டில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரரான Cougars அணியை சேர்ந்த தர்ஷன் ரத்னசபாபதி(Tharshan Ratnasapabathy)க்கு செம்மஞ்சள்(ORANGE)நிறத்தொப்பி(CAP)யும், அதிக ஆட்டமிழப்புகளைச் செய்த வீரரான கல்வியன்காடு ஞானபாஸ்கரோதய சங்கம்(GPS) அணியை சேர்ந்த சசிக்குமரன் சண்முகராஜா(Sasikumaran Shanmugarajah)க்கு ஊதா(PURPLE)நிறத்தொப்பி(CAP)யும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அடுத்ததாக சென்ற ஆண்டின் ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(JEYSURESH JEGANATHAN)னால் அனுசரணை செய்யப்பட்ட SUPER LEAGUE CHALLENGE TROPHY, மற்றும் ரீமஸ்(Re/Max Ace Realty Inc.) நிறுவன முகவர்களாக சுரேஷ் பரமலிங்கம்(Suresh Paramalingam) மற்றும் ரதீஸ் பரமலிங்கம்(Rathees Paramalingam) னால் அனுசரணை செய்யப்பட்ட முதலாம் இட அணி ஆகிய இரு கேடயங்களையும் வெற்றிபெற்ற Cougars அணியின் தலைவர் தர்ஷன் ரத்னசபாபதி(Tharshan Ratnasapabathy) அவர்கள் தமது கேடயங்களையும் MTCL அமைப்பிடம் வழங்கியதோடு தமக்குரிய கேடயங்களையும் பெற்றுச்சென்றார். இந்நிகழ்வின் இறுதி அம்சமாக ஒவ்வொரு அணியினரின் குழு புகைப்படம் எடுக்கபட்டது. இந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெற உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் MTCL அமைப்பினர் தமது நன்றியை தெரிவிக்கின்றனர்.