ஸ்பெயின் நீதிமன்றம் அதிரடி உத்தரவு- மெஸ்ஸிக்கு 21 மாதங்கள் சிறைத் தண்டனை
கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு 21 மாதங்கள் சிறைத் தண்டனையை ஸ்பெயின் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மெஸ்ஸீ
உலக புகழ்ப்பெற்ற கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்காக விளையாடி வருகிறார். உலகம் முழுவதும் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. இதனிடையே கடந்த ஆண்டு, மெஸ்ஸி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. 4 மில்லியன் யூரோ அளவில் இவர் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, ஸ்பெயின் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.