காலா படத்து போஸ்டர் குறியீடுகள்

2,171




‘காலா’ படத்து போஸ்டர்ல குறியீடு கண்டுபிடிச்சு சொல்றதுதான் இப்ப ட்ரெண்டிங்க்ல இருக்குது. நம்ம கணக்குக்கு நாமளும் சில குறியீடுகளைப் பார்ப்போமேன்னு தேடும்போது கவனிக்கப்பட்டவைதான் இவை.

போஸ்டரில் நிறைய குறியீடுகள் இருந்தாலும் இதுவரை அவர் எடுத்த படங்களின் பாணி திரைமொழியை மட்டும் உள்வாங்கி சில குறியீடுகளை மட்டும் இங்கே பார்ப்போம்

* ‘கபாலி’ என்கிற டைட்டிலில் இருந்து கபாலி க்ளைமாக்ஸ் வரைக்கும் சிவனை தனது படத்தில் ஆங்காங்கே குறியீடுகளாய் காட்டி இருப்பவர் ரஞ்சித். இங்கே காலா போஸ்டரிலும் அதை காட்டி இருக்கிறார். அதாவது போஸ்டரில் ரஜினி இடது காலைத்தூக்கி உட்கார்ந்து இருக்கும் போஸிங்கும் அவரைச்சுற்றி பெரிய வட்டம்போல் இருக்கும் பின்னணியும் அப்படியே நடராஜரின் உருவத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது.

கபாலி நடராஜர்

* அடுத்து காரில் இருக்கும் அந்த ‘MH 01 BR 1956’ நம்பர் பிளேட். ‘BR’ என்பதை பீமாராவ் ராம்ஜியாகவும் ‘MH’ என்பதை அவர் பிறந்த மஹாராஷ்ட்ராவாகவும் ‘1956’ என்பதனை அவர் இறந்த வருடமான 1956ஐக் குறிப்பதாகவும் குறியீடாக எடுத்துக்கொள்ளலாம். அவர் பெரும்கூட்டத்துடன் பெளத்த மதத்துக்கு மாறியதும் அந்த 1956ம் வருடத்தில்தான்.

* எப்போதும் ஒரே விசயத்துடன் மட்டும் அணுகாதவர் என்பதால் அந்த1956க்குப் பின்னால் இன்னும் சில விசயங்களையும் கூடுதலாகச் சொல்ல வரலாம். போஸ்டரைத்தலைகீழாக பார்த்தால் அதில் கீழே தனித்துவிடப்பட்ட ஒரு பெண், குழந்தையோடு உட்கார்ந்திருப்பார். நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்தும் அதை சொல்லவந்திருக்கலாம்.

சரி அதற்கும் அந்த 1956க்கும் என்ன சம்பந்தம் என்றால் சம்பந்தம் இருக்கிறது. சர்வதேச அளவில் தொழில்செய்து வரும் பல தொழில் அதிபர்களின் டாப் மோஸ்ட் சட்ட ஆலோசகரும் பெண் வழக்கறிஞரும் ‘போர்ப்ஸ்’ வெளியிட்ட சக்தி வாய்ந்த பிஸினஸ் பெண்கள் பட்டியலில் இடம்பெற்று பல பெண்களுக்கு முன்மாதிரியாக இருந்துவருபவர் ஜியா மோடி, “பெண்கள் இல்லாத அலுவலகம் என்பது தண்ணீர் இல்லாத செடியையும் சிறகில்லாத ஒரு பறவையையும் போன்றது” என்பதைக் கொள்கையாகக்கொண்டவரான ஜியா மோடி பிறந்ததும் இந்த 1956ல்தான். அதையும்கூட குறியீடாகச் சொல்லவந்திருக்கலாம். (அப்போ அந்த 56ங்கிறது நரேந்திரமோடி சொன்ன ’56 இஞ்ச்’ மார்பளவு குறித்தது இல்லையா என சிலர் கேட்டுக்கொண்டிருப்பது தனிக்கதை)

ஜியா மோடி

* இந்தியாவையே திருப்பிப்போட்ட பல நிகழ்வுகளும் அந்த 1956ல் நிகழ்ந்திருக்கிறது. குறிப்பாக இந்திய பாராளுமன்றம் மாநில மறுசீரமைப்புச் சட்டம் கொண்டுவந்தது. நம்பர் பிளேட்டில் இருக்கும் அந்த பம்பாய் உட்பட மதராஸ் ஆந்திரப்பிரதேசம், அஸ்ஸாம், பீகார், ஜம்மு-காஷ்மீர், கேரளம், மத்தியப்பிரதேசம்,மைசூர், ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம் என்னும் 14 மாநிலங்களும்; அந்தமான் நிகோபர், டெல்லி, இலட்சத்தீவுகள், இமாச்சலப்பிரதேசம், மணிப்பூர், திரிபுரா எனும் ஆறு மத்திய ஆட்சிப் பகுதிகளும் உருவாக்கப்பட்டதும் இந்த வருடத்தில்தான். மொழிவாரி மாநிலங்களாக தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா பிரிக்கப்பட்டபின் திராவிட அரசியலில் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட்ட ஆண்டுகளுள் இந்த 1956ம் ஒன்று.

* ரஜினியின் பக்கத்தில் இருக்கும் நாயும், அவர் கையில் கட்டி இருக்கும் கைக்கடிகாரமும் ‘திஸ் இஸ் மை டர்ன்…’ என வேட்டைக்கு தயாராகிற ஒரு மொமென்டை குறியீடாகச் சொல்லவருவது போலவே இருக்கிறது.

காலா

* எல்லாமே ஹிஸ்டரியில இருந்துதான் இருக்கணுமா என்ன? சமகாலக்குறியீடுலாம் ஒண்ணுமே இல்லையான்னு கேட்டா அதுவும் இருக்குதுங்க. வெளியாகி இருக்குற இன்னொரு போஸ்டர்ல ரஜினியோட மூக்கு சிவந்து போயி ரத்தத்தோட வேற இருக்கும் இன்னொரு போஸ்டர்ல சேரி ஏரியாவுல வாழும் பொருளாதாரத்தில் அடித்தட்டு நிலையில் இருக்கும் பசங்களைக்காட்டி இருப்பாங்க. ஆக்சுவலா போஸ்டர் வெளியான மே 25ல தான் சமூகத்தில் அடித்தட்டு நிலையில் இருக்கும் மக்களுக்கு நிதி திரட்டி கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘ரெட் நோஸ் டே’ தினம் கொண்டாடப்படுது. ‘ரெட் நோஸ் டே’ன்னு சொல்லும்போதெல்லாம் மூக்கு சிவந்த அந்த ரஜினி போஸ்டர்தான் ஞாபகத்துக்கு வருது.

* ‘காலா’ டைட்டிலுக்கு அருகில் இருக்கும் ரஜினியின் லோகோவை தலைகீழாகப் பார்த்தால் வரைபடத்தில் இருக்கும் இலங்கையைக் குறியீடாகக் காட்டுவது போன்ற சாயலில் இருக்கும். சோழர்கால வரலாற்றுடன் இணைத்துப்பார்க்கும்போது இலங்கைக்கும் அதிலே சம்பந்தம் இருக்கிறது.

இலங்கை

* இலங்கை என வந்தவுடன் இன்னொரு விசயமும் கவனிக்கத்தக்கது. அதாவது டைட்டிலில் இருக்கும் ‘கரிகாலன்’ என்னும் பெயர், சிறிய வயதில் விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனுடைய பெயர் எனவும் வரலாறு சொல்கிறது. இதை வச்சுப் பார்க்கும்போது இலங்கை அரசியல் குறித்தும் படம் பேசும்னு எதிர்பார்க்கலாம்.

* ‘காலா’ என்கிற பெயரிலும் கீழே இருக்கும் ‘கரிகாலன்’ என்கிற பெயரிலும் பல குறியீடுகள் இருக்கின்றன. ‘காலா’ என்றால் இந்தியில் ‘கறுப்பு’ என்றொரு அர்த்தம் இருப்பதால் மும்பை வாழ் கருப்பினத்தவர்களின் குறியீடாக இருக்கலாம் என சொல்லப்பட்டாலும், ‘கரிகாலன்’ என்கிற பெயர் இருப்பதால் அதை வேறுகோணத்தில் இணைத்தும் பார்க்கலாம். அதாவது இன்னும் ஒரு முடிவுக்கு வராத தெளிவுபடுத்தப்படாத சோழ மன்னர்களினுடைய வரலாற்றைப் புனைவுகளாகச் சொல்லவருகின்ற ஒரு குறியீடாகவும்கூட கண்டிப்பாக இது இருக்கலாம்.

Comments
Loading...