தான் நல்ல ஃபார்மில் இருப்பதை உணர்த்தியுள்ளார் விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக்

357




தினேஷ் கார்த்திக்

நாளை ஆரம்பிக்கிறது கிரிக்கெட்டின் ‘மினி உலகக் கோப்பையான’ சாம்பியன்ஸ் ட்ராஃபி. கோப்பையைத் தக்க வைக்கும் கனவில் நடப்பு சாம்பியன் இந்தியா. கோப்பை வெல்லும் முனைப்போடு களமிறங்குகிறது உலகின் முன்னணி கிரிக்கெட் அணிகள். இந்நிலையில்தான் வங்காள தேசத்துடன் நடந்த பயிற்சி போட்டியில் அரை சதம் அடித்து, தான் நல்ல ஃபார்மில் இருப்பதை உணர்த்தியுள்ளார் விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக்.

கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்திருக்கும் தினேஷ் கார்த்திக், இம்முறை தனக்குக் கிடைத்த வாய்ப்பைக் கண்டிப்பாக நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும் முனைப்போடு ஆர்வமாக உள்ளார். இது குறித்து அவர், ‘வங்காள தேசத்துடனான போட்டியை என் திறமையைக் காட்டுவதற்கு பயன்படுத்திக் கொண்டேன். தற்போது, நான் சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்குத் தயாராக இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை என் பயிற்சியாளர் முன்னிலையிலும் என் கேப்டன் மற்றும் அணியினர் முன்னிலையிலும் என்னால் என்ன முடியும் என்பதைக் காண்பிப்பதற்கான முக்கிய சந்தர்ப்பமாகத்தான் வங்காள தேசத்துக்கு எதிரான ஆட்டத்தை எதிர்கொண்டேன்.

Comments
Loading...