இந்தியா உடனான தோல்வி, ஒரு நாள் கிரிக்கெட்டில் நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை எங்களுக்கு உணர்த்தியுள்ளது

2,062




சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில், முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி.
போட்டிக்கு முன் இந்திய அணிக்கு சவால் விடுவோம் என்று கூறி வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் விரர்கள், தற்போது பாகிஸ்தான் வீரர்களை சாடி வருகின்றனர். இந்தியா சைலென்டாக அடுத்தப் போட்டிக்கு தயாராகி வரும் நேரத்தில், பாகிஸ்தான் அணி இந்தியாவுடனான தோல்வியில் இருந்தே மீளவில்லை.

 
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தோல்வி குறித்து, “இந்தியா உடனான தோல்வி, ஒரு நாள் கிரிக்கெட்டில் நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை எங்களுக்கு உணர்த்தியுள்ளது. ஆனால், பேஸிக்கான விஷயங்களில் தவறு செய்ததுதான் எனக்கு வருத்தமளிக்கிறது.
சின்ன சின்ன விஷயங்களில் எல்லாம் தவறு செய்தோம். பல ஈஸி கேட்ச்களை கோட்டை விட்டோம். சரியாக ரன் எடுக்கவில்லை. சரியாக த்ரோ வீசவில்லை. எந்த சமயத்தில் எந்த பந்து வீச வேண்டும் என்பது தெரியவில்லை.  ஒரு ஓவரை நன்றாக வீசி வரும் நேரத்தில், சம்மந்தமில்லாமல் ஒரு கெட்ட பாலால், பந்து பவுண்டரிக்கு விளாசப்பட்டது. இது போன்ற விஷயங்கள்தான் என்னை காயப்படுத்தியுள்ளது” என்று கூறினார்.

Comments
Loading...