அரையிறுதிக்கு தகுதி பெறப் போவது யார்? இந்தியா or தென் ஆப்ரிக்கா

அரையிறுதிக்கு தகுதி பெறப் போவது யார்? இந்தியா or தென் ஆப்ரிக்கா

659




சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர், களைகட்டத் தொடங்கியுள்ளது. ரேங்க்கிங்கில் டாப்பில் இருக்கும் அணிகளை, பெரிதும் எதிர்பார்க்காத அணிகள் அசைத்து பார்த்து வருகின்றன. குறிப்பாக, உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவே, குரூப் சுற்று போட்டிகளுடன் வெளியேறியுள்ளது. குரூப் – ஏ பிரிவில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள், அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி விட்டன!

India

இந்நிலையில், குரூப் – பி பிரிவில் தற்போது வரை, எந்த அணியும் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. நான்கு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி மற்றும் தோல்வியைப் பெற்றுள்ளதால், அடுத்து நடக்க உள்ள இரண்டு லீக் போட்டிகளும், காலிறுதிச் சுற்றாக மாறியுள்ளது. ஆகவே நாக் அவுட் ரீதியில் இந்தியா – தென் ஆப்ரிக்காவையும், பாகிஸ்தான் – இலங்கையையும் எதிர்கொள்கின்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.

இதனிடையே, இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகள், இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்ற அதே லண்டன் ஓவல் மைதானத்தில்தான் இந்தப் போட்டியும் நடக்கிறது. இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்குப் போட்டி தொடங்குகிறது. தொடரின் அரையிறுதிக்குச் செல்ல, இந்தப் போட்டி மிகவும் முக்கியம் என்பதால், இரு அணிகளும் கடுமையாகப் போராடும். தவிர டாஸும், அணிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய விஷயங்களுள் ஒன்றாக இருக்கும்.

குறிப்பாக, இலங்கையுடனான அதிர்ச்சித் தோல்வியால், இந்திய அணியில் இன்று மாற்றம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன! அதன்படி பார்த்தால், அஸ்வின் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இன்று ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டாலும், ரன் ரேட் அடிப்படையில் இந்தியா அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Comments
Loading...