விஜய் நடித்து வரும் 61வது படத்தின் பெயர் இன்று வெளியானது. படத்திற்கு மெர்சல் என்று பெயரிட்டுள்ளனர்.
விஜய் நடித்து வரும் 61வது படத்தின் பெயர் இன்று வெளியானது. படத்திற்கு மெர்சல் என்று பெயரிட்டுள்ளனர்.
விஜய் நடித்து வரும் 61வது படத்தின் பெயர் இன்று வெளியானது. படத்திற்கு மெர்சல் என்று பெயரிட்டுள்ளனர்.
விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிக்க, நித்யா மேனன், காஜல், சமந்தா ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர்.
அட்லி – விஜய் – ரகுமான்
ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பெயர் வெளியாகியுள்ளது. படத்திற்கு மெர்சல் என்று பெயர் வைத்துள்ளனர். நிஜமாகவே இந்த காம்பினேசன் மெர்சல்தான்
கலக்கல் போஸ்
கலக்கல் போஸ்
காளைமாடு பின்னணியில் இருக்க கலக்கலான போஸ் கொடுத்துள்ளார் விஜய். படத்தின் பெயர் கூட மாட்டின் வால் போல டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதில் விஜய் காளையை அடக்கும் வீரராக நடித்திருக்கலாம்.
பிறந்தநாள் பரிசு
பிறந்தநாள் பரிசு
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இது அவரது ரசிகர்களுக்க பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது.
மெர்சலாக்குமா?
மெர்சலாக்குமா?
ஏற்கனவே அட்லி – விஜய் காம்பினேசனில் தெறி வெளியாகி ரசிகர்களை தெறிக்க விட்டது. இப்போது மெர்சல் தமிழ் சினிமாவை மெர்சலாக்குமா பார்க்கலாம்