ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படும் MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடரின் அணிகள் தரப்படுத்தலில் GPS துடுப்பாட்டக் கழகம் முதல் இடத்திக்கு முன்னேறியது
ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படும் MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடரின் அணிகள் தரப்படுத்தலில் GPS துடுப்பாட்டக் கழகம் முதல் இடத்திக்கு முன்னேறியது
மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால மென்பந்து போட்டித்தொடரின் ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் சிறப்புமிக்கதும், பாரம்பரியதுமான MTCL Super League Challenge Trophy போட்டித்தொடரின் மூன்றாவது வாரச்சுற்றுப்போட்டிகள் கடந்த 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (July 2nd) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க் (IDEAL DEVELOPMENT PARK) மைதானத்தில் இடம்பெற்றது. இந்த வாரப்போட்டிகளை BlueBirds துடுப்பாட்ட அணியும், BNS துடுப்பாட்ட அணியும் பொறுப்பேற்று நடத்தினர். இந்த வாரப்போட்டிகள் உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், மழை காரணமாக சற்று தாமதித்தே முடிக்கப்பட்டது. போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க உதவிய இரு அணியினருக்கும் MTCL அமைப்பினர் தமது நன்றிகளை தெரிவிக்கின்றனர்.
MTCL Super League Challenge Trophy போட்டித்தொடரின் இரண்டாவது வார நிறைவில் அதிக ஓட்டங்களை பெற்று முன்னிலையில் இருந்த வீரரான BNS துடுப்பாட்ட அணியை சேர்ந்த நிஷாந்தன் இலங்கேஸ்வரன்(Nisanthan Ilangeswaran) அவர்களுக்கு செம்மஞ்சள் நிறத்(Orange Cap) தொப்பியும், அதிக ஆட்டமிழப்புக்களை எடுத்து, தொடர்ந்து இரண்டாம் வாரமும் முன்னிலையில் இருந்த வீரரான GPS துடுப்பாட்ட அணியை சேர்ந்த ஜூதர்ஷன் பரன்சோதி(Jutharsan Paransothy) அவர்களுக்கு ஊதா நிறத்(Purple Cap)தொப்பியும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை இந்த வார சிறப்பம்சங்களில் ஒன்றாகும். ஜூதர்ஷன் பரன்சோதி(Jutharsan Paransothy) அவர்கள் தமது அணியான GPS துடுப்பாட்ட கழகம், அணிகள் தரப்படுத்தலில் முதலாம் இடத்திற்கு முன்னேறியதில் பெரும்பங்காற்றிய வீரர் ஆவார். அவர் பந்துவீச்சில் மட்டுமல்லாது துடுப்பாட்டத்திலும் தனது பங்களிப்பை செய்து சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக திகழ்கின்றமை மேலும் பெருமைப்பட வேண்டிய விடயமாகும். இந்த வாரம், அணிகள் தரவரிசையில் முதலாம் இடம்பிடித்த GPS துடுப்பாட்ட அணியானது குறுகிய காலத்தில் பெருவளர்ச்சி கண்ட அணியாகும். 2013ல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு படியாக முன்னேறி, தற்பொழுது முதலாம் இடத்திற்க்கு முன்னேறியுள்ளமை அவ்வணியின் திறமையையும், விடாமுயற்சியையும் எடுத்துக்காட்டும் விடயமாகும். GPS துடுப்பாட்ட அணி தமது முதலாமிட இஸ்தானத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளுமா என்பதை இனிவரும் வாரங்களில் நாம் அறிந்துகொள்ளலாம்.
இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
1.பிரசன்னா பத்மநாதன்(Prashanna Pathmanathan) of B-Town Boys CC – 86 ஓட்டங்கள்(N.O) Vs Eelam Kings CC
2.ஜெய் முனியன்(Jey Muniyan) of Atlas-A CC – 60 ஓட்டங்கள் Vs Western CC
3.தனு கனகசுந்தரம்(Thanushanth Canakasundaram) of Eelam Kings CC – 54 ஓட்டங்கள் Vs Cougars CC
4.விமல் மாசிலாமணி(Vimal Masilamani) of Cougars CC – 53 ஓட்டங்கள் Vs Sauga Boyz CC
5.பரன்தாமன் செல்வரத்தினம்(Paran selvaratnam) of Cougars CC – 48 ஓட்டங்கள் Vs Toronto Blues CC
6.ஜூதர்ஷன் பரன்சோதி(Jutharsan Paransothy) of GPS CC – 45 ஓட்டங்கள் Vs Toronto Blues CC
7.ஜூட் டென்னிஸ்(Jude Denneiex) of Sauga Boyz CC – 43 ஓட்டங்கள் Vs Atlas CC
8.மது சங்க(madu Shanka) of Atlas CC – 41 ஓட்டங்கள் Vs Sauga Boyz CC
சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
1.ஆனந்த் மணிமாறன்(Ananth Manimaran) of Atlas CC – 6 ஆட்டமிழப்புக்கள் Vs Sauga Boyz CC (3-0-16-6)
2.மனோராஜ் தர்மராஜா(Manoraj Tharmarajah) of Inuvil Boyz CC – 5 ஆட்டமிழப்புக்கள் Vs Youngstars CC(3-0-4-5)
3.பல்கர் சிங்(Balkar Singh) of Western CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Inuvil Boyz CC (3-1-4-4)
4.ராஜா(Raja) of Western CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Inuvil Boyz CC (3-0-8-4)
5.ஜூதர்ஷன் பரன்சோதி(Jutharsan Paransothy) of GPS CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Toronto Blues CC (3-0-12-4)
6.ஜூட் டென்னிஸ்(Jude Denneiex) of Sauga Boyz CC of Sauga Boyz CC- 4 ஆட்டமிழப்புக்கள் Vs GPS CC(3-0-35-4)
சிறந்த பிடியெடுப்புக்கள்(BEST CATCHES)
1.சசிக்குமரன் சண்முகராஜா(Sasikumaran Shanmugarajah) of GPS CC Vs Toronto Blues CC
2.பிரதாபன் கேதீஸ்வரன்(Prathapan Ketheeswaran) of Young Stars CC Vs Toronto Blues CC
3.கோமேஸ்வரன் அன்னலிங்கம்(Komeswaran Annalingam) of Sauga Boyz CC Vs Inuvil Boyz CC
4.சியாம் சிங்(Shyam Singh) of nuvil Boyz CC Vs GPS CC