MTCL அமைப்பினரால் சிறப்பாக நடாத்தப்பட்ட இரண்டாவது கேப்டன் இசையரசன் நினைவகத்தொடரின் வெற்றிகிண்ணத்தை தட்டிச்சென்றது யங்ஸ்டார்ஸ் துடுப்பாட்டக் கழகம்

1,485




MTCL அமைப்பினரால் சிறப்பாக நடாத்தப்பட்ட இரண்டாவது கேப்டன் இசையரசன் நினைவகத்தொடரின் வெற்றிகிண்ணத்தை தட்டிச்சென்றது யங்ஸ்டார்ஸ் துடுப்பாட்டக் கழகம்

மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால துடுப்பாட்ட போட்டிகளின் மூன்றாவது சவால் கிண்ணத்(KNOCKOUT) துடுப்பாட்டப்போட்டிகள் கடந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (July 16th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் இடம்பெற்றது. இந்த சவால் கிண்ணத்(KNOCKOUT) தொடரானது கேப்டன் இசையரசன்(In Memory of Jeyharan Tharmalingam‬)அவர்களின் நினைவாக இந்த ஆண்டு இரண்டாவது வருடமாக மிகச்சிறந்த முறையில், சீரற்ற காலநிலையும் தாண்டி வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இத்தொடரை ஜார்விஸ்(Jarvis Sport Club) விளையாட்டுக் கழக உறுப்பினர் மகிந்தன்(Mahinthan Tharmalingam) அவர்களும் , MTCL அமைப்பினரும் பொறுப்பேற்று சிறந்த முறையில் நடத்தி முடித்தனர்.

அமரர் கேப்டன் இசையரசன்(Jeyharan Tharmalingam) அவர்கள் தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட சிறந்த மாவீரர்களில் ஒருவராவார். அன்னார் 1996ம் ஆண்டு இடம்பெற்ற முல்லைத்தீவு தாக்குதலில் வேவுபுலியாக கடமையாற்றி தன்மக்களின் உரிமைப்போராட்டத்திற்காக வீரமரணம் அடைந்தார். அன்னாரின் நினைவுகளை சுமந்து வரும் தர்மலிங்கம் குடும்பத்தினர், MTCL அமைப்பினருடன் சேர்ந்து இத்தொடரை இரண்டாவது வருடமாக இந்த வருடம் நடாத்தியமை மிகச்சிறப்பம்சமாகும்.

இரண்டாவது கேப்டன் இசையரசன் நினைவகத்(2nd Annual Captain ISAIYARASAN Memorial Challenge Trophy) தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு B-Town Boyz CC, GPS CC, BlueBirds SC மற்றும் Youngstars CC ஆகிய நான்கு அணிகள் தகுதிபெற்றதுடன் B-Town Boyz CC அணிக்கும் GPS CC அணிக்கும் இடையிலான போட்டியில் B-Town Boyz CC அணியும், BlueBirds SC அணிக்கும் Youngstars CC அணிக்கும் இடையிலான போட்டியில் Youngstars CC அணியும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இறுதிப்போட்டியானது சமூக வலைத்தளங்களிலும், KVM தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டமை அனைவரது பாராட்டுக்களை பெற்றதுடன் பலநூற்றுக்கணக்கான ரசிகர்களும் பார்த்து மகிழ்ந்தனர்.

இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Youngstars CC அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய B-Town Boyz CC அணி 11.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 66 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் B-Town Boyz CC அணியை சேர்ந்த ஜூட் மாசிலாமணி(Jude Masilamani) 21 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் Youngstars CC அணியை சேர்ந்த சுகந்தன் தணிகாசலம்(Suganthan Thaniyasalam) மிகவும் சிறந்த முறையில் பந்து வீசி 2.1 ஓவர்களில் 11 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Youngstars CC அணி 11.1 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 67 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கெட்டுக்களால் வெற்றியை தாமதாக்கிக் கேடயத்தைக் கைப்பற்றினர். துடுப்பாட்டத்தில் Youngstars CC அணியை சேர்ந்த கிஷோக் விஜேயரட்ணம்(Kishok Vijeyaratnam) மிகவும் நிதானமாக விளையாடி ஆட்டமிழக்காது 18 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு பெரும் உறுதுணையாக இருந்தார்.. பந்துவீச்சில் B-Town Boyz CC அணியை சேர்ந்த சனா பத்மநாதன்(Prashanna Pathmanathan) சிறந்த முறையில் பந்து வீசி 3 ஓவர்களில் 20 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டதில் தனது பங்களிப்பை செய்த Youngstars CC அணியை சேர்ந்த கிஷோக் விஜேயரட்ணம்(Kishok Vijeyaratnam) தெரிவுசெய்யப்பட்டார். இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற Youngstars CC துடுப்பாட்ட அணியினருக்கு வெற்றிக்(Winners)கேடயம் வழங்கப்பட்டதுடன், இரண்டாம் இடம் வந்த B-Town Boyz CC துடுப்பாட்ட அணியினருக்கு இரண்டாம்(Runners-Up)இடக்கேடயமும் வழங்கப்பட்டமை விசேட அம்சங்களில் சிலவாகும்.

இத்தொடரின் சிறந்த துடுப்பாட்டவீரராக இரண்டு போட்டிகளில் 56 ஓட்டங்களைப் பெற்ற Cougars CC அணியை சேர்ந்த பரன்தாமன் செல்வரத்தினம்(Paranthaman Selvaratnam) தெரிவுசெய்யப்பட்டதுடன் சிறந்த பந்துவீச்சாளராக 4 போட்டிகளில் 12 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய Youngstars CC அணியை சேர்ந்த நிரோஷான் ராஜேந்திரன்(Niroshan Rajandiran) தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக 4 போட்டிகளில் மொத்தமாக 69 ஓட்டங்களையும், 7 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய Youngstars CC அணியை சேர்ந்த ரகு ஞானசௌந்தரநாயகம்(Ragu Gnanasountharanayakam) தெரிவுசெய்யப்பட்டார்.

இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
1.பரன்தாமன் செல்வரத்தினம்(Paranthaman Selvaratnam) of Cougars CC- 52 ஓட்டங்கள் VS BNS CC
2.ரகு நாயகம்(Ragu Gnanasountharanayakam) of Youngstars CC – 32 ஓட்டங்கள்(N.O) VS Inuvil Boyz CC

சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
1குகதீபன் சதானந்தனேசன்(Theepan Sathananthanesan) of BlueBirds SC – 5 ஆட்டமிழப்புக்கள் VS Saugaboyz CC(3-0-10-5)
2.நிரோஷான் ராஜேந்திரன்(Niroshan Rajandiran) of Youngstars CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS Inuvil Boyz CC(3-0-15-5)
3.கோபி கிருஷ்ணா(Gobi Krishna) of B-Town Boyz CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS Atlas-A CC(3-0-17-5)

சிறந்த பிடியெடுப்புக்கள்(BEST CATCHES)
1.செழி கோபாலபிள்ளை(Cheli Kopalapillai) of Youngstars CC VS B-Town Boyz CC
2.கிரிஷாந்த் மாதவகுமாரன்(Kishanthan Mathavakumaran) of Inuvil Boyz CC VS Inuvil Boyz Toronto CC
3.சுதர்ஷன் தேவராசா(Sutharsan Thevarasa) of Inuvil Boyz Toronto CC VS Inuvil Boyz CC
4.அமுதன் திரு(Amuthan Thiru)) of Atlas-A CC VS Western CC
5.சசிக்குமரன் சண்முகராஜா(Sasikumaran Shanmugarajah) of GPS CC VS Cougars CC
6.ஹரிசன்(Harishan) of GPS CC VS B-Town Boyz CC

மேலதிக தொடர்புகளுக்கு www.mtcl.info

Author: SASEEPAN NAGARAJAN

Comments
Loading...