MTCL அமைப்பினரால் சிறப்பாக நடாத்தப்பட்ட பதினான்காவது நிசான் நினைவகத்தொடரின் வெற்றிகிண்ணத்தை தட்டிச்சென்றது குகர்ஸ்(Cougars) துடுப்பாட்டக் கழகம்
MTCL அமைப்பினரால் சிறப்பாக நடாத்தப்பட்ட பதினான்காவது நிசான் நினைவகத்தொடரின் வெற்றிகிண்ணத்தை தட்டிச்சென்றது குகர்ஸ்(Cougars) துடுப்பாட்டக் கழகம்
மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் இந்த வருட நட்சத்திர வீரர்களின்(All Star Game)துடுப்பாட்டப்போட்டிகள் வரும் செப்டெம்பர் மாதம் 17ம்(September 17th) திகதி ஞாயிற்றுக்கிழமை ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் நடைபெறவுள்ளமை யாவரும் அறிந்ததே. அத்தொடருக்கான வீரர்கள் தெரிவு கடந்த திங்கள்கிழமை மாலை 6 மணியளவில் Scarborough Civic Centerஇல் நடைபெற்றது. இந்த வருடம் புதிதாக சுரேன் சுப்பர் சிக்ஸர்ஸ் அணி சுரேன் அவர்களின் நினைவாக ஆரம்பிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்க வேண்டிய விடயமாகும். இந்த வருடம் மொத்தமாக 28 நட்சத்திர வீரர்கள் 7 பேர் கொண்ட நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு 6 ஓவர்கள் கொண்ட தொடராக இப்போட்டிகள் இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த நான்கு அணிகளும் எம்மோடு விளையாடி, எம்மை விட்டு இறைவனடி சென்ற வீரர்களின் நினைவாக ஆரம்பிக்கப்பட்டமை விசேட அம்சமாகும். மாறன் அவர்களின் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட மாறன் மவெரிக்ஸ்(Maaran Mavericks) அணியின் உரிமையாளராக சாம் செல்வம்(Sam Selvam)மும், நிஷான் அவர்களின் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட நிஷான் நின்ஜாஸ்(Nishan Ninjas) அணியின் உரிமையாளராக கஜன் ஏரம்பமூர்த்தி(Kajan Erampamoorthy)யும், நாகு மற்றும் நேசன் ஆகிய இருவரின் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட N&N நைத்வாக்ஸ்(N&N Nighthawks) அணியின் உரிமையாளராக டியூட்டன் பெர்னாண்டோ(Duton Fernando)வும் செயல்பட்டு வருகின்றதோடு, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சுரேன் சுப்பர் சிக்ஸர்ஸ்(Suren Super Sixers) அணியின் உரிமையாளராக தர்ஷன் ரத்னசபாபதி(Tharshan Ratnasapapathy) அவர்கள் செயற்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடவேண்டிய முக்கிய அம்சமாகும்.
மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் இந்த வருட கோடைகால துடுப்பாட்ட போட்டிகளின் ஆறாவது சவால் கிண்ணத்(KNOCKOUT) துடுப்பாட்டப்போட்டிகள் கடந்த 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (August 27th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் இடம்பெற்றது. இந்த சவால் கிண்ணத்(KNOCKOUT) தொடரானது நிஷான்(In Memory of Nishan)அவர்களின் நினைவாக இந்த ஆண்டு பதினான்காவது வருடமாக மிகச்சிறந்த முறையில் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இத்தொடரை அட்லஸ்(Atlas Cricket Club)துடுப்பாட்ட கழகமும், MTCL அமைப்பினரும் பொறுப்பேற்று சிறந்த முறையில் நடத்தி முடித்தனர்.
அமரர் நிஷாந்தன(Nishanthan) அவர்கள் அட்லஸ்(Atlas CC) துடுப்பாட்ட அணிக்காக 2003ம் ஆண்டு இறைவன் திருவடி சேரும் வரை விளையாடிய வீரராவார். அத்தருணத்தில் அவர் சிறந்த சகலதுறை(All Rounder) வீரராகத் திகழ்ந்தமை அவருடைய விளையாட்டுச் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். நிஷான் அவர்கள் தனது இரு நண்பர்களின் உயிரை காக்கச்சென்று கடல்மாதவிடம் தன்னுயிரை பறிகொடுத்த உன்னத உள்ளம் கொண்ட புனிதனாவார். அவரின் நினைவுகளை சுமந்து வரும் அட்லஸ்(Atlas CC) துடுப்பாட்ட அணியில் விளையாடிய அவரது நண்பர்கள் மற்றும் MTCL அமைப்பினர் இத்தொடரை 2004ம் ஆண்டு முதல் அவரின் வாழ்க்கையைப் பெருமைப்படுத்தும் விதத்தில் நடாத்திவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்க வேண்டிய விடயமாகும்.
பதினான்காவது நிசான் நினைவகத்(14th Annual Nishan Memorial Challenge Trophy) தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு Atlas CC, GPS CC, Toronto Blues CC மற்றும் Cougars CC ஆகிய நான்கு அணிகள் தகுதிபெற்றதுடன் Cougars CC அணிக்கும் GPS CC அணிக்கும் இடையிலான போட்டியில் Cougars CC அணியும், Atlas CC அணிக்கும் Toronto Blues CC அணிக்கும் இடையிலான போட்டியில் Toronto Blues CC அணியும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இவ்வருடம் Cougars CC மற்றும் Toronto Blues CC ஆகிய இரு அணிகளும் மோதும் மூன்றாவது இறுதிப்போட்டி இதுவாகும். இறுதிப்போட்டியை நேரில் காண்பதக்காக நிஷான் அவர்களின் குடும்பத்தினர் வருகை தந்திருந்தமை மேலுமொரு சிறப்பம்சமாகும். இறுதிப்போட்டியானது சமூக வலைத்தளங்களிலும், KVM தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டமை அனைவரது பாராட்டுக்களை பெற்றதுடன் நூற்றுக்கணக்கான ரசிகர்களும் பார்த்து மகிழ்ந்தனர்.
இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Cougars CC அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Cougars CC அணி தமது 12 ஓவர்கள் நிறைவில் ஐந்து விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 101 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் Cougars CC அணியை சேர்ந்த கபிலாஷ் அழகையா(kapilash Alakaiah) ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் Toronto Blues CC அணியை சேர்ந்த ஜெயகிருஷ்ணா நித்தியானந்தன்(Jeyakrishna Nithiyananthan) மிகவும் சிறந்த முறையில் பந்து வீசி 3 ஓவர்களில் 25 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 102 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Toronto Blues CC அணி 11.2 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 73 ஓட்டங்களைப் பெற்று 28 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டனர். துடுப்பாட்டத்தில் Toronto Blues CC அணியை சேர்ந்த பிரணவன் அருள்ஜோதி(Pranavan Arutjothy) 16 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் Cougars CC அணியை சேர்ந்த நரேஷ் சுந்தர்(Naresh Sundar) சிறந்த முறையில் பந்து வீசி 2 ஓவர்களில் வெறும் 09 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக பந்துவீச்சில் தனது பங்களிப்பை செய்த Cougars CC அணியை சேர்ந்த நரேஷ் சுந்தர்(Naresh Sundar) தெரிவுசெய்யப்பட்டார். இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற Cougars CC துடுப்பாட்ட அணியினருக்கு வெற்றிக்(Winners)கேடயம் வழங்கப்பட்டதுடன், இரண்டாம் இடம் வந்த Toronto Blues CC துடுப்பாட்ட அணியினருக்கு இரண்டாம்(Runners-Up)இடக்கேடயமும் வழங்கப்பட்டமை விசேட அம்சங்களில் சிலவாகும்.
இத்தொடரின் சிறந்த துடுப்பாட்டவீரராக மூன்று போட்டிகளில் மொத்தமாக 130 ஓட்டங்களைப் பெற்ற Atlas CC அணியை சேர்ந்த ஆனந்த் மணிமாறன்(Ananth Manimaran) தெரிவுசெய்யப்பட்டதுடன் சிறந்த பந்துவீச்சாளராக 2 போட்டிகளில் 8 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய Cougars CC அணியை சேர்ந்த நரேஷ் சுந்தர்(Naresh Sundar) தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக 4 போட்டிகளில் மொத்தமாக 95 ஓட்டங்களையும், 9 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய Cougars CC அணியை சேர்ந்த கபிலாஷ் அழகையா(kapilash Alakaiah) தெரிவுசெய்யப்பட்டார்.
இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
1.ஆனந்த் மணிமாறன்(Ananth Manimaran) of Atlas CC- 49 ஓட்டங்கள்(N.O) VS BlueBirds SC
2.பிரேரக் கஜ்ஜர்(Prerak Gajjar) of BlueBirds SC- 45 ஓட்டங்கள் VS Atlas CC
3.விதுஷன் அழகையா(Vithusan Alakaiah) of Cougars CC- 43 ஓட்டங்கள் VS GPS CC
சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
1.ஜூதர்ஷன் பரன்சோதி(Jutharsan Paransothy) of GPS CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS Western CC(3-0-05-4)
2.ஆனந்த் மணிமாறன்(Ananth Manimaran) of Atlas CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS BNS CC(3-0-08-4)
3.பிரஷாந்த் யோகநாதன்(Prashanth Yoganathan) of Toronto Blues CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS Atlas CC(3-0-09-4)
4.நரேஷ் சுந்தர்(Naresh Sundar) of Cougars CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS Toronto Blues CC(2-0-09-4)
5.கபிலாஷ் அழகையா(kapilash Alakaiah) of Cougars CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS Atlas-A CC(3-0-12-4)
6.விவியன் கோர்டன்(Vivian Gordon) of NCC – 4 ஆட்டமிழப்புக்கள் VS Inuvil Boyz CC(2-0-15-4)
7.தரன் குகபாலன்(tharaneethan Kugapalan) of Atlas-A CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS Eelam Kings CC(3-0-22-4)
சிறந்த பிடியெடுப்புக்கள்(BEST CATCHES)
1.சசீபன் நாகராசன்(Saseepan Nagarajan) of Atlas CC VS BNS CC
2.கபிலாஷ் அழகையா(kapilash Alakaiah) of Cougars CC VS GPS CC
3.ரங்கன் சந்திரகாந்தன்(Rankan Santhirakanthan) of GPS CC VS Cougars CC
4.கண்ணா மணிமாறன்(Kanna Manimaran) of Atlas CC VS BlueBirds SC
மேலதிக தொடர்புகளுக்கு: www.mtcl.info