MTCL-ன் 2016 கோடைகால மென்பந்து போட்டித்தொடர்- நான்காவது வார நிலவரம்

515




மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக் (MTCL) அமைப்பின் கோடைகால மென்பந்து போட்டித்தொடரின் ஜெய்சுரேஷ் ஜெகநாதனால் (Jeysuresh Jeganthan) அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் சிறப்புமிக்கதும், பாரம்பரியதுமான MTCL Super League Challenge Trophy போட்டித்தொடரின் நான்காவது வார சுற்றுப்போட்டிகள் கடந்த 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (June 26th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க் (Ideal Development Park) மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த வாரப்போட்டிகளை ரொறொன்டோ புலுஸ் துடுப்பாட்ட (Toronto Blues CC) அணியும், யங்ஸ்டார்ஸ் துடுப்பாட்ட (Youngstars CC) அணியும் பொறுப்பேற்று நடத்தினர்.

இந்த வாரப்போட்டிகள் உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் நேர அட்டவணையை கடைப்பிடித்து உரிய நேரத்தில் முடிக்கப்பட்டது. போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க உதவிய இரு அணியினருக்கும் MTCL அமைப்பினர் தமது நன்றிகளை தெரிவிக்கின்றனர்.

MTCL Super League Challenge Trophy போட்டித்தொடரின் மூன்றாவது வார நிறைவில் அதிக ஓட்டங்களை பெற்று முன்னிலையில் இருந்த வீரரான Cougars துடுப்பாட்ட அணியை சேர்ந்த தர்ஷன் ரத்னசபாபதி(Tharshan Ratnasapapathy) அவர்களுக்கு செம்மஞ்சள் நிறத்(ORANGE CAP) தொப்பி வழங்கப்பட்டதுடன், அதிக ஆட்டமிழப்புக்களை எடுத்து சென்றவாரம் முன்னிலையில் இருந்த வீரரான CHEETAHS துடுப்பாட்ட அணியை சேர்ந்த ஆனந்த் மணிமாறன் (Ananth Manimaran) அவர்கள் இந்தவாரமும் ஊதா நிறத் (PURPLE CAP) தொப்பியினை தன்வசம் தக்கவைத்துக்கொண்டமை இந்த வார சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

நான்காவது வாரத்தின் பிரதான (PREMIUM GAME) போட்டிக்கு தாயகத்துக்கு பரிசில்களை குறைந்த கட்டணத்திலும், துரித கதியிலும் அனுப்பிவைப்பதில் முன்னோடியாக திகழும் SS Yaal நிறுவனத்தினர் பிரதான அனுசரணை வழங்கி இருந்தனர்.

இந்த வாரத்தின் பிரதான(PREMIUM GAME) போட்டியாக B -Town Boyz துடுப்பாட்ட அணியும், Warriors துடுப்பாட்ட அணியும் மோதிக்கொண்ட போட்டி தெரிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் நேரடி போட்டிநிலவரங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் பார்த்து மகிழக்கூடிய சர்ந்தர்ப்பத்தையும் MTCL அமைப்பினர் ஏற்படுத்திக்கொடுத்தனர்.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Warriors அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய B -Town Boyz அணி தமது 15 ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 101 ஓட்டங்களைப் பெற்றனர்.

துடுப்பாட்டத்தில் B -Town Boyz அணியை சேர்ந்த ஜெயதீபன் ஜெயரட்னம்(Jeyatheepan Jeyaratnam) 24 ஓட்டங்களையும் பிரதீசன் சபாரத்தினம்(Pratheesan Sabaratnam) ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் Warriors அணியை சேர்ந்த அமுதன் திரு(Amuthan Thiru) 3 ஓவர்களில் 10 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பெற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Warriors அணி 14.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 75 ஓட்டங்களைப் பெற்று 26 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவினர். துடுப்பாட்டத்தில் warriors அணியை சேர்ந்த சஞ்சய் மாயாண்டி(Sanjey Mayandi) 23 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் B -Town Boyz அணியை சேர்ந்த பிரசன்னா பத்மநாதன் (Prashanna Pathmanathan) சிறந்த முறையில் பந்து வீசி 2.2 ஓவர்களில் வெறும் 08 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக சகலதுறைகளிலும் தனது பங்களிப்பை செய்த B -Town Boyz அணியை சேர்ந்த பிரசன்னா பத்மநாதன்(Prashanna Pathmanathan) தெரிவுசெய்யப்பட்டார்.

இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள் (Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிறந்த துடுப்பாட்டம் (BEST BATTING)
  1. ஜெய் முனியன்(Jey Muniyan) of Atlas-A CC – 46 ஓட்டங்கள் VS GPS CC
  2. லோரன்ஸ் ஸ்ரீகாந்தன்(Lorans Srikanthan) of GPS CC – 37 ஓட்டங்கள்(N .O) VS Sauga Boyz CC
  3. ஜெய் முனியன்(Jey Muniyan) of Atlas-A CC – 37 ஓட்டங்கள் VS Chola CC
  4. சசிக்குமரன் சண்முகராஜா (Sasikumaran Shanmugarajah) of GPS CC – 36 ஓட்டங்கள் VS Atlas-A CC
  5. ஜெயகாந்த் முருகன் (Jeyakanth Murugan) of NCC – 36 ஓட்டங்கள் VS Chola CC
சிறந்த பந்துவீச்சு (BEST BOWLING)
  1. திருமாறன் அழகரட்ணம்(Thirumaran Alagaratnam) of Sauga Boyz CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS Cougars CC (3-2-2-5)
  2. சசிக்குமரன் சண்முகராஜா(Sasikumaran Shanmugarajah) of GPS CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS Warriors CC (3-0-4-5)
  3. பிரசன்னா பத்மநாதன்(Prashanna Pathmanathan) of B -Town Boyz CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS Inuvil Boyz CC (2-0-11-5)
  4. சயந்தன் தம்பிராஜா(Sajanthan Thambirajah) of Chola CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS NCC (3-0-22-5)
சிறந்த பிடியெடுப்புக்கள் (BEST CATCHES)
  1. பரத் திருச்செல்வன்(Barath Thiruchelvan) of Cheetahs CC VS Eelam Kings CC
  2. ரகுரூபன் யோகராஜா(Raguruban Yogarajah) of Atlas-A CC VS GPS CC
  3. சயந்தன் தம்பிராஜா(Sajanthan Thambirajah) of Chola CC CC VS Atlas-A CC
  4. சசிக்குமரன் சண்முகராஜா(Sasikumaran Shanmugarajah) of GPS CC VS Atlas-A CC
  5. நிஷாந்தன் இலங்கேஸ்வரன்(Nisanthan Ilangeswaran) of BNS CC VS NCC
  6. பரந்தாமன் செல்வரத்தினம்(Paranthaman selvaratnam) of Cougars CC VS Sauga Boyz CC
  7. பிரசன்னா பத்மநாதன்(Prashanna Pathmanathan) of B -Town Boyz CC VS Inuvil Boyz CC
  8. கமல் பரமானந்தம்(Kamal Paramanantham) of BNS CC VS NCC
  9. ஷியாம் ஜெயந்தன்(Shyam Jeyanthan) of Eelam Kings CC VS BNS CC

மேலதிக தொடர்புகளுக்கு, www.mtcl.info

Comments
Loading...