மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக் (MTCL) அமைப்பின் கோடைகால துடுப்பாட்ட போட்டிகளின் நான்காவது நொக் அவுட் (Knockout) துடுப்பாட்டப்போட்டிகள் கடந்த 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (August 7th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க் (Ideal Development Park) மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த நொக் அவுட் (Knockout) தொடரானது நான்காவது ஆண்டாக இந்தமுறை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இத்தொடரை CMR FM நிர்வாகத்தினரும், MTCL அமைப்பினரும் பொறுப்பேற்று சிறந்த முறையில் நடத்தினர்.
இந்த வாரத்தின் பிரதான (Premium Game) போட்டிக்கு NJ TRANSPORT நிறுவனத்தினர் பிரதான அனுசரணை வழங்கி இருந்தனர். NJ TRANSPORT ஆனது களஞ்சியம் (Storage) மற்றும் சரக்குந்து(Trucking) சேவைகளை வழங்குவதில் முன்னோடியாக திகழும் நிறுவனமாகும்.
இந்த வாரத்தின் பிரதான(Premium Game)போட்டியாக Chola துடுப்பாட்ட அணியும், Inuvil Boys Toronto துடுப்பாட்ட அணியும் மோதிக்கொண்ட போட்டி தெரிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் நேரடி போட்டிநிலவரங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் பார்த்து மகிழக்கூடிய சர்ந்தர்ப்பத்தையும் MTCL அமைப்பினர் ஏற்படுத்திக்கொடுத்தனர்.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Inuvil Boys Toronto CC அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Inuvil Boys Toronto CC அணி தமது 12 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 86 ஓட்டங்களைப் பெற்றனர்.
துடுப்பாட்டத்தில் Inuvil Boys Toronto CC அணியை சேர்ந்த சிந்துஜன் சின்னராசா (Sinthujan Sinnarasa) 36 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் Chola CC அணியை சேர்ந்த ரஜீப்குமார் நாகராஜா (Rajeefkumar Nagarajah) 3 ஓவர்கள் பந்து வீசி ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 05 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பெற்றினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Chola CC அணி 9.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 76 ஓட்டங்களை பெற்று 10 ஓட்டங்களினால் தோல்வியடைந்தனர். துடுப்பாட்டத்தில் Chola CC அணியை சேர்ந்த சிவரூபரஞ்சன் சிவபாதசுந்தரம் (Sivarubaranjan Sivapathasundaram) 17 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் Inuvil Boys Toronto CC அணியை சேர்ந்த சிந்துஜன் சின்னராசா (Sinthujan Sinnarasa) சிறந்த முறையில் பந்து வீசி 3 ஓவர்களில் வெறும் 10 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக சகலதுறைகளிலும் தனது பங்களிப்பை செய்த Inuvil Boys Toronto CC அணியை சேர்ந்த சிந்துஜன் சின்னராசா (Sinthujan Sinnarasa) தெரிவு செய்யப்பட்டார்.
நான்காவது CMR சுற்றுக்கிண்ண (4TH ANNUAL CMR CHALLENGE TROPHY) தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு Youngstars CC, Cougars CC, கல்வியங்காடு GPS CC மற்றும் Eelam Kings CC ஆகிய நான்கு அணிகள் தகுதிபெற்றதுடன் Eelam Kings CC அணிக்கும் Youngstars CC அணிக்கும் இடையிலான போட்டியில் Youngstars CC அணியும், கல்வியங்காடு GPS CC அணிக்கும் Cougars CC அணிக்கும் இடையிலான போட்டியில் கல்வியங்காடு GPS CC அணியும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. Youngstars CC அணியானது இரண்டாவது முறையாக இவ்வருடம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததோடு தமது ஐந்து வருட வரலாற்றில் முதலாவது கேடயத்தை கடந்த மாதம் வெற்றி பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும், கல்வியங்காடு GPS CC அணியினர் தமது நான்கு வருட வரலாற்றில் முதன்முதலாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததோடு அனைத்து கல்வியங்காட்டு மக்களின் பாராட்டுக்களையும் பெற்றனர். இறுதிப்போட்டியானது சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டமை அனைவரது பாராட்டுக்களை பெற்றதுடன் பலநூற்றுக்கணக்கான ரசிகர்களும் பார்த்து மகிழ்ந்தனர்.
இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கல்வியங்காடு GPS CC அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Youngstars CC அணி 12 ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 89 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் Youngstars CC அணியை சேர்ந்த செழி கே (Cheli K) 22 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் கல்வியங்காடு GPS CC அணியை சேர்ந்த சிவரூபன் ரத்னம்(Sivaruban Ratnam) 3 ஓவர்களில் 20 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பெற்றினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கல்வியங்காடு GPS CC அணி 11.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 68 ஓட்டங்களைப் பெற்று 21 ஓட்டங்களால் தோல்வியடைந்தனர். துடுப்பாட்டத்தில் கல்வியங்காடு GPS CC அணியை சேர்ந்த சசிக்குமரன் சண்முகராஜா (Sasikumaran Shanmugarajah) மற்றும் லோரன்ஸ் ஸ்ரீகாந்தன் (Lorans Srikanthan) ஆகியோர் தலா 21 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் Youngstars CC அணியை சேர்ந்த செழி கே(Cheli K) சிறந்த முறையில் பந்து வீசி 3 ஓவர்களில் 09 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக சகலத்துறையிலும் தனது பங்களிப்பை செய்த Youngstars CC அணியை சேர்ந்த செழி கே (Cheli K) தெரிவுசெய்யப்பட்டார். வெற்றிக்கேடயத்தை கைப்பற்றிய Youngstars CC அணிக்கும் இரண்டாம் இடம் வந்த கல்வியங்காடு GPS CC அணிக்கும் MTCL அமைப்பினர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.
இத்தொடரின் சிறந்த துடுப்பாட்டவீரர், சிறந்த பந்துவீச்சாளர், தொடரின் சிறந்த சகலதுறை ஆட்டக்காரர், இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் வெற்றிக்கேடயம், இரண்டாமிட கேடயம் ஆகிய அனைத்து விருதுகளும் புரட்டாசி மாதம்(September 3rd) 3ம் திகதி இடம்பெறவுள்ள STAR FEST நிகழ்வில் பின்நேரம்(Evening) 6.45 மணிக்கு மேடையில் வைத்து வழங்கி கௌரவிக்கப்படும். இவ்நிகழ்வில் அனைத்து MTCL கிரிக்கெட் ரசிகர்களையும் வந்து கலந்துகொண்டு தமது அணி வீரர்களை உட்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள் (Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிறந்த துடுப்பாட்டம் (BEST BATTING)
- ஷியாம் ஜெயந்தன் (Shyam Jeyanthan) of Eelam Kings CC – 64(N.O) ஓட்டங்கள் VS NCC
- நிரஞ்சன் கதிர்காமநாதன் (Niranjan Kathirgamanathan) of Western CC – 40 ஓட்டங்கள் VS B-Town Boyz CC
- திருமாறன் அழகரட்ணம் (Thirumaran Alagaratnam) of Sauga Boyz CC- 37 ஓட்டங்கள் VS Blue Birds CC
- வசி குணரட்ணம் (Vasee Kunaratnam) of NCC – 37 ஓட்டங்கள் VS Eelam Kings CC
சிறந்த பந்துவீச்சு (BEST BOWLING)
- அரவிந்தன் சுந்தரலிங்கம் (Aravinthan Suntharalingam) of Youngstars CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS Toronto Blues CC (3-1-02-4)
- செழி கே (Cheli K) of Youngstars CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS GPS CC (3-0-09-4)
- ரஞ்சித் ஸ்ரீதரன் (Ranjith Sritharan) of GPS CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS Cougars CC (3-0-10-4)
- கிஷாந்தன் மாதவகுமாரன் (Kishanthan Mathavakumaran) of Atlas-A CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS Cheetahs CC (3-0-10-4)
- ஸ்ரீதர்ஷன் ஸ்ரீகாந்தன் (Sridharshan Srikanthan) of Cougars – 4 ஆட்டமிழப்புக்கள் VS Warriors CC (3-0-14-4)
சிறந்த பிடியெடுப்புக்கள் (BEST CATCHES)
- கிளின்டன் ரவீந்திரன் (Kilinton Ravindran) of Inuvil Boys CC VS Chola CC
- ரகு விக்னேஸ்வரன் (Ragu Vigneswaran) of Eelam Kings CC VS Inuvil Boys CC
- துவாகரன் ரத்னேஸ்வரன் (Thuvakaran Ratneswaran) of Inuvil Boys CC VS Chola CC
- ஆதில் சனீர் (Aadhil Zaneer) of Atlas-A CC VS Cheetahs CC
- தனேஷ் தெய்வேந்திரன் (Thanesh Theivendran) of Eelam Kings CC VS Inuvil Boys CC
- தயூரன் செல்வராசா (Thayuran Selvarasa) of Youngstars CC VS Toronto Blues CC
இந்நிகழ்வுக்கு லங்காசிறி ஊடக அனுசரனை வழங்குகிறது. உங்களுடைய படைப்புகளுக்கும் ஊடக அனுசரணை வேண்டும் என்றால் pr@lankasri.com மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.