MTCL அமைப்பினரால் சிறப்பாக நடாத்தப்பட்ட முதலாவது கேப்டன் இசையரசன் நினைவகத்தொடர்-2016

MTCL அமைப்பினரால் சிறப்பாக நடாத்தப்பட்ட முதலாவது கேப்டன் இசையரசன் நினைவகத்தொடர்

482




மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால துடுப்பாட்ட போட்டிகளின் மூன்றாவது நொக் அவுட்(KNOCKOUT) துடுப்பாட்டப்போட்டிகள் கடந்த 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (July 17th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த நொக் அவுட்(KNOCKOUT) தொடரானது கேப்டன் இசையரசன்(In Memory of Jeyharan Tharmalingam‬)அவர்களின் நினைவாக இந்த ஆண்டு முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இத்தொடரை ஜார்விஸ்(Jarvis Sport Club) விளையாட்டுக் கழகமும், MTCL அமைப்பினரும் பொறுப்பேற்று சிறந்த முறையில் நடத்தி முடித்தனர்.

அமரர் கேப்டன் இசையரசன்(Jeyharan Tharmalingam) அவர்கள் தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தின் ஈடுபட்ட சிறந்த மாவீரர்களில் ஒருவராவார்.

அன்னார் 1996ம் ஆண்டு இடம்பெற்ற முல்லைத்தீவு தாக்குதலில் வேவுபுலியாக கடமையாற்றி தன்மக்களின் உரிமைப்போராட்டத்திற்காக வீரமரணம் அடைந்தார்.

அன்னாரின் நினைவுகளை சுமந்து வரும் தர்மலிங்கம் குடும்பத்தினர், MTCL அமைப்பினருடன் சேர்ந்து இத்தொடரை புதிதாக இந்த வருடம் ஆரம்பித்ததுடன், ஒவ்வொரு வருடமும் இத்தொடரை தொடர்ந்து நடத்தவுள்ளமையும் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.

இந்த வாரத்தின் பிரதான (PREMIUM GAME) போட்டிக்கு மோர்கேச் முகவர் ரகு புவனகாந்தன்(Ragu Bhuwanakanthan) அவர்கள் பிரதான அனுசரணை வழங்கியிருந்ததுடன், REMAX வீடு விற்பனை முகவரான திரு நாகராஜா(Thiru Nagarajah) அவர்கள் Platinum அனுசரணையாளராக திகழ்ந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த வாரத்தின் பிரதான(PREMIUM GAME) போட்டியாக GPS துடுப்பாட்ட அணியும், B-Town Boyz துடுப்பாட்ட அணியும் மோதிக்கொண்ட போட்டி தெரிவு செய்யப்பட்டு சமூக

வலைத்தளங்களில் நேரடி போட்டிநிலவரங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் பார்த்து மகிழக்கூடிய சர்ந்தர்ப்பத்தையும் MTCL அமைப்பினர் ஏற்படுத்திக்கொடுத்தனர்.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற GPS அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய B-Town Boyz அணி தமது 12 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்றனர்.

துடுப்பாட்டத்தில் B-Town Boyz அணியை சேர்ந்த பேரின்பநாதன் கார்த்திகேசு(Perinbanathan Karthikesu) 17 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் GPS அணியை சேர்ந்த நிரஞ்சன் பஞ்சலிங்கம்(Niranjan Panchalingam) சிறந்த முறையில் பந்து வீசி 3 ஓவர்களில் வெறும் 07 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய GPS அணி 11.2 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து 59 ஓட்டங்களை பெற்று 4 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றனர். பந்துவீச்சில் B-Town Boyz அணியை சேர்ந்த பிரசன்னா பத்மநாதன்(Prashanna Pathmanathan) 3 ஓவர்கள் பந்து வீசி 18 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக பந்துவீச்சில் தனது பங்களிப்பை செய்த GPS அணியை சேர்ந்த நிரஞ்சன் பஞ்சலிங்கம்(Niranjan Panchalingam) தெரிவுசெய்யப்பட்டதுடன் 75 டொலர்கள் பணப்பரிசினையும் பெற்றுக்கொண்டார்.

முதலாவது கேப்டன் இசையரசன் நினைவகத்(1ST CAPTAIN ISAIYARASAN MEMORIAL CHALLENGE TROPHY) தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு Cheetahs CC, Cougars CC, BNS CC மற்றும் Toronto Blues CC ஆகிய நான்கு அணிகள் தகுதிபெற்றதுடன் Toronto Blues CC அணிக்கும் Cougars CC அணிக்கும் இடையிலான போட்டியில் Toronto Blues CC அணியும், BNS CC அணிக்கும் Cheetahs CC அணிக்கும் இடையிலான போட்டியில் BNS CC அணியும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இறுதிப்போட்டியானது சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டமை அனைவரது பாராட்டுக்களை பெற்றதுடன் பலநூற்றுக்கணக்கான ரசிகர்களும் பார்த்து மகிழ்ந்தனர்.

இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற BNS CC அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Toronto Blues CC அணி 11.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் Toronto Blues CC அணியை சேர்ந்த ரஜித் சரச்சந்திரா(Rajith Sarathchandra) 24 ஓட்டங்களையும் சுதாகரன் பரமலிங்கம்(Suthakaran Paramalingam) 22 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் BNS CC அணியை சேர்ந்த ஹரிகரன் ஜெயக்குமார்(Hariharan Jeyakumar) மிகவும் சிறந்த முறையில் பந்து வீசி 2.5 ஓவர்களில் 20 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய BNS CC அணி 11.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுக்களால் வெற்றியை தாமதாக்கிக் கேடயத்தைக் கைப்பற்றினர்.

துடுப்பாட்டத்தில் BNS CC அணியை சேர்ந்த ஜெயஹரன் ஜெயக்குமார்(Jeyaharan Jeyakumar) 37 ஓட்டங்களை துரிதகதியில் விளாசி அணியின் வெற்றிக்கு பெரும் உறுதுணையாக இருந்தார். பந்துவீச்சில் Toronto Blues CC அணியை சேர்ந்த பிரணவன் அருட்ஜோதி(Pranavan Arutjothy) சிறந்த முறையில் பந்து வீசி 2.2 ஓவர்களில் 11 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக சகலதுறையிலும் தனது பங்களிப்பை செய்த BNS CC அணியை சேர்ந்த ஜெயஹரன் ஜெயக்குமார்(Jeyaharan Jeyakumar) தெரிவுசெய்யப்பட்டார்.

இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற BNS துடுப்பாட்ட அணியினருக்கு வெற்றிக்(Winners) கேடயம் வழங்கப்பட்டதுடன், இரண்டாம் இடம் வந்த Toronto Blues துடுப்பாட்ட அணியினருக்கு இரண்டாம்(Runners-Up) இடக்கேடயம் வழங்கப்பட்டதுடன், தொடரில் சிறந்த முறையில் தமது ஒத்துழைப்பை வழங்கியமைக்காக GPS துடுப்பாட்ட அணியினருக்கு விசேட பரிசில்களும் வழங்கப்பட்டமை விசேட அம்சங்களில் சிலவாகும்.

இத்தொடரின் சிறந்த துடுப்பாட்டவீரராக இரண்டு போட்டிகளில் 72 ஓட்டங்களைப் பெற்ற SaugaBoyz CC அணியை சேர்ந்த ஜினோஷன் நாகேந்திரன்(Jinoshan Nagenthiran) தெரிவுசெய்யப்பட்டதுடன் சிறந்த பந்துவீச்சாளராக 4 போட்டிகளில் 12 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய BNS CC அணியை சேர்ந்த ஹரிகரன் ஜெயக்குமார்(Hariharan Jeyakumar) தெரிவுசெய்யப்பட்டார்.

தொடரின் சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக 4 போட்டிகளில் மொத்தமாக 62 ஓட்டங்களையும், 9 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய BNS CC அணியை சேர்ந்த ஜெயஹரன் ஜெயக்குமார்(Jeyaharan Jeyakumar) தெரிவுசெய்யப்பட்டார்.

இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
  • திவியன் ரட்ணசிங்கம்(Thiviyan Ratnasingham) of Chola CC- 39 ஓட்டங்கள்(N.O) VS Youngstars CC
  • ஜினோஷன் நாகேந்திரன்(Jinoshan Nagenthiran) of SaugaBoyz CC – 39 ஓட்டங்கள்(N.O) VS Western CC
  • மனோராஜ் தர்மராஜா(Manoraj Tharmarajah) of Atlas A CC – 39 ஓட்டங்கள் VS Cougars CC
  • ஜெயஹரன் ஜெயக்குமார்(Jeyaharan Jeyakumar) of BNS CC – 37 ஓட்டங்கள் VS Toronto Blues CC
  • பரன்தாமன் செல்வரத்தினம்(Paranthaman selvaratnam) of Cougars CC – 37 ஓட்டங்கள் VS SaugaBoyz CC
  • கண்ணா சாந்தகுமார்(Kanna Shanthakumar) of Eelam Kings CC – 34 ஓட்டங்கள் VS Toronto Blues CC
சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
  • டியூடன் பெர்னாண்டோ(Duton Fernando) of BlueBirds CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS NCC (3-0-12-5)
  • திவியன் ரட்ணசிங்கம்(Thiviyan Ratnasingham) of Chola CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS Youngstars CC (3-0-14-5)
  • அமுதன் திரு(Amuthan Thiru) of Warriors CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS BNS CC (3-0-15-5)
சிறந்த பிடியெடுப்புக்கள்(BEST CATCHES)
  • சுதர்மன் பாலகுமாரன்(Sutharman Balakumaran) of CC VS B-Town Boyz CC
  • நிஷாந்தன் இலங்கேஸ்வரன்(Nisanthan Ilangeswaran) of BNS CC VS BlueBirds CC
  • பிரமிலன் கணேஷ்(Piramilan Ganesh) of GPS CC VS Toronto Blues CC
  • ராம் அமிர்தலிங்கம்( Ram Amirthalingam) of BNS CC VS Cheetahs CC

மேலதிக தொடர்புகளுக்கு www.mtcl.info

Comments
Loading...