சீனன் நினைவகச் சுற்றுக்கிண்ணத் தொடரைக் கைப்பற்றியதுடன் முதலாமிட அணி என்ற பெருமையையும் தனதாக்கிக் கொண்டது Cougars துடுப்பாட்ட அணி

ஐந்தாவது சீனன் நினைவகச் சுற்றுக்கிண்ணத் தொடர்: வெற்றிக்கேடயத்தைக் கைப்பற்றியதுடன், தொடர்ந்து நான்காவது வருடமாகவும் தாமே மென்பந்து துடுப்பாட்ட போட்டிகளின் மிகச்சிறந்த அணி என்பதை தன்வசமாக்கிக்கொண்டனர் Cougars துடுப்பாட்ட அணியினர்.

சீனன் அவர்களின் நினைவாக ஐந்தாவது ஆண்டாக கடந்த 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை(September 8th) மார்க்கம் டொரோண்டோ கிரிக்கட் லீக் பார்க்(MTCL Park) மைதானத்தில் நடாத்தப்பட்ட சீனன் நினைவகச் சுற்றுக்கிண்ணத்(5th Annual Seenan Memorial Challenge Trophy)தொடரை MTCL அமைப்பினரும், சீனன் அவர்களின் சகோதரரும் அவரின் நண்பர்களும் பொறுப்பேற்று சிறந்த முறையில் நடாத்தி முடித்தனர். இச்சுற்றுத்தொடரின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக அனைத்து அணி வீரர்களுக்கும் மதியபோசனம் சீனன் அவர்களின் சகோதரரினால் வழங்கப்பட்டமையும் இங்கு பாராட்டப்படவேண்டிய விடயமாகும்.

ஐந்தாவது சீனன் நினைவகச் சுற்றுக்கிண்ணத்(5th Annual Seenan Memorial Challenge Trophy)தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு United CC, Cougars CC, Atlas A CC மற்றும் Toronto Blues CC ஆகிய நான்கு அணிகள் தகுதிபெற்றதுடன் Toronto Blues அணிக்கும் Atlas-A CC அணிக்கும் இடையிலான போட்டியில் Toronto Blues CC அணியும், United CC அணிக்கும் Cougars CC அணிக்கும் இடையிலான போட்டியில் Cougars CC அணியும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. Cougars CC அணியானது கடந்த மூன்று வருடங்களாக MTCL அமைப்பின் மிகச்சிறந்த அணியாக தெரிவு செய்யப்பட்டதோடு, இந்த வருடமும் தொடர்ந்து நான்காவது முறையாக முதலாமிட அணி என்ற பெருமையைப் பெறும் எண்ணத்தில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர். அதே போன்று Toronto Blues அணி கடந்த 10 ஆண்டுகளாக MTCL அமைப்பின் மிகச்சிறந்த அணிகளில் ஒன்றாகத் திகழ்வதோடு இவ்வருடம் முதலாம் இடத்தைக் கைப்பற்றும் எண்ணத்தில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர். இறுதிப்போட்டியின் ஓட்டவிபரங்கள் சமூக வலைத்தளங்களில் நேரடிப்பதிவேற்றம் செய்யப்பட்டமை அனைவரது பாராட்டுக்களை பெற்றதுடன் நூற்றுக்கணக்கான ரசிகர்களும் பார்த்து மகிழ்ந்தனர்.

இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Cougars CC அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Cougars CC அணி தமது 10 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 90 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் Cougars CC அணியை சேர்ந்த விதுஷன் அழகையா(Vithusan Alakaiah) 41 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் Toronto Blues CC அணியை சேர்ந்த நேசன் அமிர்தலிங்கம்(Nesan Amirthalingam) 2 ஓவர்களில் 11 ஓட்டங்களைக் கொடுத்து 1 விக்கெட்டுக்களைக் கைப்பெற்றினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Toronto Blues CC அணி 10 ஓவர்கள் நிறைவில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 74 ஓட்டங்களை மட்டும் பெற்று 16 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது. இந்த வெற்றியுடன் cougars துடுப்பாட்ட அணி இந்த வருடத்தின் முதலாமிட அணி என்ற பெருமையையும் தனதாக்கிக்கொண்டது. துடுப்பாட்டத்தில் Toronto Blues CC அணியை சேர்ந்த நிசாந்தன் இலங்கேஸ்வரன்(Nisanthan Ilangeswaran) 37 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் Cougars CC அணியை சேர்ந்த கபிலாஷ் அழகையா(Kapilash Alakaiah) 2 ஓவர்களில் 31 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டத்தில் தனது பங்களிப்பை செய்த Cougars CC அணியை சேர்ந்த விதுஷன் அழகையா(Vithusan Alakaiah) தெரிவுசெய்யப்பட்டார். வெற்றிக்கேடயத்தை கைப்பற்றிய Cougars CC அணிக்கும் இரண்டாம் இடம் வந்த Toronto Blues CC அணிக்கும் MTCL அமைப்பினர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.

இக்கேடயத்தை கைப்பற்றியதோடு தொடர்ந்து நான்காவது வருடமாகவும் முதலாமிட அணி என்ற பெருமையைத் தமதாக்கிக்கொண்ட Cougars துடுப்பாட்ட அணியினருக்கு அனைத்து ரசிகர்களின் சார்பாக MTCL அமைப்பினர் தமது பாராட்டுக்களை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றனர். MTCL அமைப்பின் 25 வருட வரலாற்றில் தொடர்ந்து 4 முறை முதலாமிட அணி என்ற பெருமையை தமதாக்கிக் கொண்ட ஒரே ஒரு அணி Cougars துடுப்பாட்ட அணியாகும்.

இத்தொடரின் சிறந்த துடுப்பாட்டவீரராக Atlas A CC அணியை சேர்ந்த சொஹைல் வடிவாடா(Sohel Wadiwada) தெரிவுசெய்யப்பட்டதுடன் சிறந்த பந்துவீச்சாளராக Cougars CC அணியை சேர்ந்த நரேஷ் சுந்தர்(Naresh Sundar) தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் சிறப்பாட்டக்காரராக Cougars CC அணியை சேர்ந்த விதுஷன் அழகையா(Vithusan Alakaiah) தெரிவுசெய்யப்பட்டார்.

மேலதிக தொடர்புகளுக்கு www.mtcl.info