நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்




லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அதன்படி சற்று முன்னர் இந்த படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்துள்ளது.
 

இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் நயன்தாரா நடுவிலும் இடது புறம் அனுராக் காஷ்யப் மற்றும் வலது புறம் அதர்வா நின்று கொண்டு, ஒருவர், மற்றொருவரின் முகமூடியை கையில் வைத்துள்ளனர். வித்தியாசமான சிந்தனையில் உருவாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட்லுக்கே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலைத்தூண்டும் வகையில் உள்ளது. மேலும் நாளை இதே நேரத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதர்வா, நயன்தாரா, ராஷிகண்ணா, அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை அஜய்ஞானமுத்து இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே அருள்நிதியின் ‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.