மாறனின் (In Memory of Maran‬) நினைவாக பதினொன்றாவது ஆண்டாக சிறந்த முறையில் நடத்தி முடித்தனர்




மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக் (MTCL) அமைப்பின் கோடைகால துடுப்பாட்ட போட்டிகளின் இரண்டாவது நொக் அவுட் (KNOCKOUT) துடுப்பாட்டப்போட்டிகள் கடந்த 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க் (Ideal Development Park) மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த நொக் அவுட் (KNOCKOUT) தொடரானது மாறனின் (In Memory of Maran‬) நினைவாக பதினொன்றாவது ஆண்டாக இந்தமுறை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இத்தொடரை லெஜெண்ட் (legends CC) துடுப்பாட்ட அணியினரும், MTCL அமைப்பினரும் பொறுப்பேற்று சிறந்த முறையில் நடத்தி முடித்தனர்.

அமரர் மணிமாறன் சிவலிங்கம் (Manimaran Sivalingam) அவர்கள் லெஜெண்ட் (legends CC) துடுப்பாட்ட அணியில் 2003ம் ஆண்டில் தன்னை இணைத்துக்கொண்டு 2005ம் ஆண்டு இறைவன் திருவடி சேரும் வரை அவ்வணியில் விளையாடினார்.

அத்தருணத்தில் அவர் வளர்ந்து வரும் சிறந்த சகலதுறை (All Rounder) வீரராகத் திகழ்ந்தமை அவருடைய விளையாட்டுச் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

அவரின் நினைவுகளை சுமந்து வரும் லெஜெண்ட் (legends CC) துடுப்பாட்ட அணி மற்றும் MTCL அமைப்பினர் இத்தொடரை 2006ம் ஆண்டு முதல் அவரின் வாழ்க்கையைப் பெருமைப்படுத்தும் விதத்தில் நடத்திவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்க வேண்டிய விடயமாகும்.

இந்த வாரத்தின் பிரதான (PREMIUM GAME) போட்டிக்கு ZENPLUS FINANCIAL உரிமையாளர் ஜெலன் ஆறுமுகநாதன் (Jelan Arumuganathan) மற்றும் DOTO MEDIA உரிமையாளர் செந்து வேல்நாயகம் (Senthu Velnayagam) ஆகிய இருவரும் பிரதான அனுசரணை வழங்கி இருந்தனர்.

இந்த வாரத்தின் பிரதான (PREMIUM GAME) போட்டியாக Youngstars துடுப்பாட்ட அணியும், Eelam Kings துடுப்பாட்ட அணியும் மோதிக்கொண்ட போட்டி தெரிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் நேரடி போட்டிநிலவரங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் பார்த்து மகிழக்கூடிய சந்தர்ப்பத்தையும் MTCL அமைப்பினர் ஏற்படுத்திக்கொடுத்தனர்.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Youngstars அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Youngstars அணி தமது 12 ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றனர்.

துடுப்பாட்டத்தில் Youngstars அணியை சேர்ந்த அரவிந்தன் சுந்தரலிங்கம் (Aravinthan Suntharalingam) 41 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் Eelam Kings அணியை சேர்ந்த பிரசாத் (Prashath) 1 ஓவர் பந்து வீசி 08 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Eelam Kings அணி 6 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 19 ஓட்டங்களை மட்டும் பெற்று 121 ஓட்டங்களினால் படுதோல்வியடைந்தனர்.

பந்துவீச்சில் Youngstars அணியை சேர்ந்த அரவிந்தன் சுந்தரலிங்கம் (Aravinthan Suntharalingam) சிறந்த முறையில் பந்து வீசி 3 ஓவர்களில் வெறும் 05 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக சகலதுறைகளிலும் தனது பங்களிப்பை செய்த Youngstars அணியை சேர்ந்த அரவிந்தன் சுந்தரலிங்கம் (Aravinthan Suntharalingam) தெரிவுசெய்யப்பட்டார்.

பதினொன்றாவது மாறன் நினைவகத் (11TH MARAN MEMORIAL CHALLENGE TROPHY) தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு Youngstars CC, Cougars CC, BNS CC மற்றும் B-Town Boyz CC ஆகிய நான்கு அணிகள் தகுதிபெற்றதுடன் B-Town Boyz CC அணிக்கும் Youngstars CC அணிக்கும் இடையிலான போட்டியில் Youngstars CC அணியும், BNS CC அணிக்கும் Cougars CC அணிக்கும் இடையிலான போட்டியில் Cougars CC அணியும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Youngstars CC அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Cougars CC அணி 10.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 68 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் cougars CC அணியை சேர்ந்த ஸ்ரீதர்ஷன்

ஸ்ரீகாந்தன் (Sridharshan Srikanthan) மற்றும் விதுசன் அழகையா (Vithusan Alakaiah) ஆகியோர் தலா 19 ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் Youngstars CC அணியை சேர்ந்த பிரதாபன் காந்தீஸ்வரன் (Prathapan Kentheeswaran) 3 ஓவர்களில் 12 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பெற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Youngstars CC அணி 11.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 70 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கெட்டுக்களால் வெற்றியை தாமதாக்கிக் கொண்டனர். துடுப்பாட்டத்தில் Youngstars CC அணியை சேர்ந்த தயூரன் செல்வராசா (Thayuran Selvarasa) 22 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் cougars CC அணியை சேர்ந்த கிருபா தம்பிரத்னம் (Kirupa Thambiratnam) சிறந்த முறையில் பந்து வீசி 3 ஓவர்களில் 21 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டத்தில் தனது பங்களிப்பை செய்த Youngstars CC அணியை சேர்ந்த தயூரன் செல்வராசா (Thayuran Selvarasa) தெரிவுசெய்யப்பட்டார்.

இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற Youngstars துடுப்பாட்ட அணியினருக்கு வெற்றிக்கேடயமும், பணப்பரிசில்களும் வழங்கப்பட்டதுடன், இரண்டாம் இடம் வந்த Cougars துடுப்பாட்ட அணியினருக்கு இரண்டாம் இடக் கேடயமும், பணப்பரிசில்களும் வழங்கப்பட்டமை விசேட அம்சங்களில் ஒன்றாகும்.

இத்தொடரின் சிறந்த துடுப்பாட்டவீரராக BNS CC அணியை சேர்ந்த நிஷாந்தன் இலங்கேஸ்வரன் (Nisanthan Ilangeswaran) தெரிவு செய்யப்பட்டதுடன் சிறந்த பந்துவீச்சாளராக Youngstars CC அணியை சேர்ந்த நிரோஷான் ராஜேந்திரன் (Niroshan Rajandiran) தெரிவுசெய்யப்பட்டார்.

தொடரின் சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக Youngstars CC அணியை சேர்ந்த அரவிந்தன் சுந்தரலிங்கம் (Aravinthan Suntharalingam) தெரிவுசெய்யப்பட்டார், மேலும் இத்தொடரில் 51 ஓட்டங்களையும், 5 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி தனது சகலதுறை ஆற்றலை வெளிப்படுத்திய CHOLA CC அணியை சேர்ந்த ராஜீப்குமார் நாகராஜா (Rajeefkumar Nagarajah) அவர்களுக்கு சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தியமைக்கான (BEST ACHIEVEMENT) விருது வழங்கப்பட்டது.

இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள் (Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிறந்த துடுப்பாட்டம் (BEST BATTING)

  • 1. விமல் மாசிலாமணி (Vimal Masilamani) of Cougars CC – 66 (N.O) ஓட்டங்கள் VS BNS CC
  • 2. ராஜீப்குமார் நாகராஜா (Rajeefkumar Nagarajah) of Chola CC – 51 ஓட்டங்கள் VS Cougars CC
  • 3.லோரன்ஸ் ஸ்ரீகாந்தன் (Lorans Srikanthan) of GPS CC – 44 ஓட்டங்கள் VS Cougars CC
  • 4.அரவிந்தன் சுந்தரலிங்கம் (Aravinthan Suntharalingam) of Youngstars CC – 41 ஓட்டங்கள் VS Eelam Kings CC
  • 5. நிஷாந்தன் இலங்கேஸ்வரன் (Nisanthan Ilangeswaran) of BNS CC – 40 ஓட்டங்கள் VS Cougars CC

சிறந்த பந்துவீச்சு (BEST BOWLING)

  • 1. ராஜீப்குமார் நாகராஜா (Rajeefkumar Nagarajah) of Chola CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS Toronto Blues CC (3-0-15-5)
  • 2. லஹீதன் சத்தியநாதன் (Laheethan Saththiyanathan) of Chola CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS Toronto Blues CC (3-0-13-5)

சிறந்த பிடியெடுப்புக்கள் (BEST CATCHES)

  • 1. சிவசிரோன் சதானந்தலிங்கம் (Sivasiron Sathananthalingam) of Youngstars CC VS B-Town Boyz CC
  • 2. ரகு ஞானசௌந்தரநாயகம் (Ragu Gnanasountharanayakam) of Youngstars CC VS Cheetahs CC
  • 3. ராம் அமிர்தலிங்கம் (Ram Amirthalingam) of BNS CC VS Atlas-A CC
  • 4. கஜென் ஏரம்பமூர்த்தி (Kajan Erampamoorthy) of Atlas-A CC VS BNS CC
  • 5. முகுந்தன் நவரத்தினம் (Mugunthan Navaratnam) of BNS CC VS Cougars CC
  • 6. தயாபரன் யோகசந்திரன் (Thayaparan Yogachandran) of Toronto Blues CC VS Chola CC

மேலதிக தொடர்புகளுக்கு www.mtcl.info