MTCL அமைப்பினரால் சிறப்பாக நடாத்தப்பட்ட பதினான்காவது மாறன் நினைவகத்தொடரின் வெற்றிகிண்ணத்தை தட்டிச்சென்றது குகர்ஸ்(Cougars) துடுப்பாட்டக் கழகம்
மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால துடுப்பாட்ட போட்டிகளின் இரண்டாவது நொக் அவுட்(KNOCKOUT) துடுப்பாட்டப்போட்டிகள் கடந்த 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை(June 23rd) MTCL பார்க்(MTCL Park) மைதானத்தில் இடம்பெற்றது. இந்த நொக் அவுட்(KNOCKOUT) தொடரானது மாறனின்(In Memory of Maran) நினைவாக பதினான்காவது ஆண்டாக இந்தமுறை நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இத்தொடரை லெஜெண்ட்(legends CC) துடுப்பாட்ட அணியினரும், MTCL அமைப்பினரும் பொறுப்பேற்று சிறந்த முறையில் நடத்தி முடித்தனர்.
அமரர் மணிமாறன் சிவலிங்கம்(Manimaran Sivalingam) அவர்கள் லெஜெண்ட்(legends CC) துடுப்பாட்ட அணியில் 2003ம் ஆண்டில் தன்னை இணைத்துக்கொண்டு 2005ம் ஆண்டு இறைவன் திருவடி சேரும் வரை அவ்வணியில் விளையாடினார். அத்தருணத்தில் அவர் வளர்ந்து வரும் சிறந்த சகலதுறை(All Rounder) வீரராகத் திகழ்ந்தமை அவருடைய விளையாட்டுச் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். அவரின் நினைவுகளை சுமந்து வரும் லெஜெண்ட்(legends CC) துடுப்பாட்ட அணி மற்றும் MTCL அமைப்பினர் இத்தொடரை 2006ம் ஆண்டு முதல் அவரின் வாழ்க்கையைப் பெருமைப்படுத்தும் விதத்தில் நடாத்திவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்க வேண்டிய விடயமாகும்.
பதினான்காவது மாறன் நினைவகத்(14TH MARAN MEMORIAL CHALLENGE TROPHY) தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு GPS CC, Cougars CC, Eelam Kings CC மற்றும் Blackcats CC ஆகிய நான்கு அணிகள் தகுதிபெற்றதுடன் Cougars CC அணிக்கும் GPS CC அணிக்கும் இடையிலான போட்டியில் Cougars CC அணியும், Blackcats CC அணிக்கும் Eelam Kings CC அணிக்கும் இடையிலான போட்டியில் Blackcats CC அணியும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Blackcats CC அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Blackcats CC அணி 10 ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 46 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் Blackcats CC அணியை சேர்ந்த ஜினோஷன் நாகேந்திரன்(Jinoshan Nagenthiran) 11 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் Cougars CC அணியை சேர்ந்த காந்தன் தர்மராஜா(Kanthan Tharmarajah) 2 ஓவர்களில் வெறும் 5 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுக்களைக் கைப்பெற்றினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Cougars CC அணி 6 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 47 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுக்களால் வெற்றியை தாமதாக்கிக் கொண்டனர். துடுப்பாட்டத்தில் Cougars CC அணியை சேர்ந்த விமல் மாசிலாமணி(Vimal Masilamani) 16 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் Blackcats CC அணியை சேர்ந்த சிவரூபன் ரத்னம்(Sivaruban Ratnam) 2 ஓவர்களில் 8 ஓட்டங்களை கொடுத்து 1 விக்கெட்டினை கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக சகலதுறையிலும் தனது பங்களிப்பை செய்த Cougars CC அணியை சேர்ந்த ஸ்ரீதர்ஷன் ஸ்ரீகாந்தன்(Sritharshan Srikanthan) தெரிவுசெய்யப்பட்டார். இறுதிப்போட்டியானது சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டத்தோடு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் பார்த்து மகிழக்கூடிய சர்ந்தர்ப்பத்தையும் MTCL அமைப்பினர் ஏற்படுத்திக்கொடுத்தனர்.
இத்தொடரின் சிறந்த துடுப்பாட்டவீரராக Blackcats CC அணியை சேர்ந்த தினேஷன் வைத்தீஸ்வரன்(Thinesan Vaitheeswaran) தெரிவுசெய்யப்பட்டதுடன் சிறந்த பந்துவீச்சாளராக Cougars CC அணியை சேர்ந்த கபிலாஷ் அழகையா(kapilash Alakaiah) தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக Blackcats CC அணியை சேர்ந்த ஜினோஷன் நாகேந்திரன்(Jinoshan Nagenthiran) தெரிவுசெய்யப்பட்டார், மேலும் Rockets CC அணிக்கு எதிரான போட்டியில் Atlas CC அணியை சேர்ந்த ஜதுசன் சந்நிதிநாதன்(Jathurshan Sanininathan) 75 ஓட்டங்களைப் பெற்றதோடு, 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி தனது சகலதுறை ஆற்றலை வெளிப்படுத்தியதால் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தியமைக்கான(BEST ACHIEVEMENT) விருது வழங்கப்பட்டது.
இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
1.ஜதுசன் சந்நிதிநாதன்(Jathurshan Sanininathan) of Atlas CC – 75 ஓட்டங்கள் VS Rockets CC
2.ஜினோஷன் நாகேந்திரன்(Jinoshan Nagenthiran) of Blackcats CC – 66 ஓட்டங்கள்(N.O) VS SaugaBoys CC
3.பிரசாந்தன் குண்டுமணி(Prashanthan Kundumani) of Inuvil Boys CC – 50 ஓட்டங்கள் VS Cougars CC
சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
1.சாரங்கன் சிவபாஸ்கரன்(Sharangan Sivabaskaran) of GPS CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS Youngstars CC (2-0-2-4)
2.பிரசன்னா தவகுலரத்னம்(Prasanna kularatnam) of Eelam Kings CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS United CC (1,2-0-3-4)
3.கபிலாஷ் அழகையா(kapilash Alakaiah) of Cougars CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS Inuvil Boys CC (2-0-8-4)
4.லவன் செல்வரத்தினம்(Lavaneethan Selvaratnam) of GPS CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS B-Town Boys CC (2-0-17-4)
மேலதிக தொடர்புகளுக்கு www.mtcl.info