நான்காவது மேயர் அகல்நெஞ்சன் சுற்றுக்கிண்ணத்தொடர்: மிகவும் விறுவிறுப்பாக நடந்த இறுதிப்போட்டியில் சாகாபாய்ஸ்(Sauga Boyz CC) அணியை வீழ்த்தி வெற்றிக்கேடயத்தை தட்டிச்சென்றது கூகர்ஸ் அணி

நான்காவது மேயர் அகல்நெஞ்சன் சுற்றுக்கிண்ணத்தொடர்: மிகவும் விறுவிறுப்பாக நடந்த இறுதிப்போட்டியில் சாகாபாய்ஸ்(Sauga Boyz CC) அணியை வீழ்த்தி வெற்றிக்கேடயத்தை தட்டிச்சென்றது கூகர்ஸ்(Cougars CC) துடுப்பாட்ட அணி




மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் இந்த வருட கோடைகால துடுப்பாட்ட போட்டிகளின் நான்காவது சவால் கிண்ணத்(KNOCKOUT) துடுப்பாட்டப்போட்டிகள் கடந்த 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (July 30th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் இடம்பெற்றது. இந்த சவால் கிண்ணத்(KNOCKOUT) தொடரானது மேஜர் அகல்நெஞ்சனின் நினைவாக நடாத்தப்படடமை இங்கு குறிப்பிடத்தக்க வேண்டிய விடயமாகும். மேஜர் அகல்நெஞ்சன் சுற்றுக்கிண்ணத்(4th Major Ahalnenjan Memorial Challenge Trophy)தொடரை MTCL அமைப்பினரும், அகல்நெஞ்சனின் குடும்பத்தினரும் பொறுப்பேற்று சிறந்த முறையில் நடாத்தி முடித்தனர்.

மாவீரர் மேஜர் அகல்நெஞ்சன்(Dileeshan Sakariyas)அவர்கள் தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தின் ஈடுபட்ட சிறந்த மாவீரர்களில் ஒருவராவார். அன்னார் 2000ம் ஆண்டு ஆனையிறவில் இடம்பெற்ற இத்தாவில் தாக்குதலில் தன்மக்களின் உரிமைப்போராட்டத்திற்காக வீரமரணம் அடைந்தார். அன்னாரின் நினைவுகளை சுமந்து வரும் அவரது சகோதரர்கள் MTCL அமைப்புடன் இணைந்து 2014ம் ஆண்டிலிருந்து இச்சுற்றுத்தொடரை நடாத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்க வேண்டிய விடயமாகும்.

நான்காவது மேஜர் அகல்நெஞ்சன் சுற்றுக்கிண்ணத்(4th Major Ahalnenjan Memorial Challenge Trophy)தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு Atlas CC, Cougars CC, GPS CC மற்றும் Sauga Boyz CC ஆகிய நான்கு அணிகள் தகுதிபெற்றதுடன் Atlas CC அணிக்கும் Sauga Boyz CC அணிக்கும் இடையிலான போட்டியில் Sauga Boyz CC அணியும், GPS CC அணிக்கும் Cougars CC அணிக்கும் இடையிலான போட்டியில் Cougars CC அணியும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. Atlas CC அணிக்கும் Sauga Boyz CC அணிக்கும் இடையிலான போட்டியில் 35 ஓட்டங்களையும், இரண்டு ஆட்டமிழப்புக்களையும் எடுத்த Sauga Boyz வீரரான ஷங்கர் கோபாலசுந்தரம்(Shankar Gopalasuntharam) ஆட்டநாயனாகத் தெரிவுசெய்யப்பட்டார். அதேபோன்று GPS CC அணிக்கும் Cougars CC அணிக்கும் இடையிலான போட்டியில் GPS CC அணியை சேர்ந்த லவநீதன் செல்வரத்தினம்(Lavaneethan Selvaratnam) 32 ஓட்டங்களையும், ஒரு ஆட்டமிழப்பையும் எடுத்து போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார். மேலும் Sauga Boyz CC அணியானது தமது துடுப்பாட்ட வரலாற்றில் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தமையுடன், சென்ற ஆண்டு இச்சுற்றுக்கிண்ணத் தொடரிலேயே அவர்கள் முதலாவது தடவையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தமை இங்கு குறிப்பிடத்தக்க வேண்டிய விடயமாகும். மேலும், Cougars CC அணியினர் இந்த வருடத்தில் நுழையும் மூன்றாவது இறுதிப்போட்டி இதுவாகும். இறுதிப்போட்டியானது சமூக வலைத்தளங்களிலும், KVM தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டமை அனைவரது பாராட்டுக்களை பெற்றதுடன் பலநூற்றுக்கணக்கான ரசிகர்களும் பார்த்து மகிழ்ந்தனர்.

இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Cougars CC அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Cougars CC அணி 12 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 108 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் Cougars CC அணியை சேர்ந்த விதுஷன் அழகையாVithusan Alakaiah) ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் Sauga Boyz CC அணியை சேர்ந்த ஷங்கர் கோபாலசுந்தரம்(Shankar Gopalasuntharam) 3 ஓவர்களில் 29 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பெற்றினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Sauga Boyz CC அணி 11.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 102 ஓட்டங்களைப் பெற்று 6 ஓட்டங்களினால் மயிரிழையில் தோல்வியைத் தழுவினார்கள். துடுப்பாட்டத்தில் Sauga Boyz CC அணியை சேர்ந்த தினேசன் வைத்தீஸ்வரன்(Thinesan Vaitheeswaran) 39 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் Cougars CC அணியை சேர்ந்த காந்தன் தர்மராஜா(Kanthan tharmarajah) சிறந்த முறையில் பந்து வீசி 2.5 ஓவர்களில் 06 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு பெரும் பங்குவகித்துடன், போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார். வெற்றிக்கேடயத்தை கைப்பற்றிய Cougars CC அணிக்கும் இரண்டாம் இடம் வந்த Sauga Boyz CC அணிக்கும் MTCL அமைப்பினர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.

இத்தொடரின் சிறந்த துடுப்பாட்டவீரராக நான்கு போட்டிகளில் 87 ஓட்டங்களைப் பெற்ற Cougars CC அணியை சேர்ந்த விதுஷன் அழகையா(Vithusan Alakaiah) தெரிவுசெய்யப்பட்டதுடன் சிறந்த பந்துவீச்சாளராக நான்கு போட்டிகளில் 11 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய Cougars CC அணியை சேர்ந்த நரேஷ் சுந்தர்(Naresh Sunthar) தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக நான்கு போட்டிகளில் மொத்தமாக 73 ஓட்டங்களையும், 9 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய Sauga Boyz CC அணியை சேர்ந்த ஷங்கர் கோபாலசுந்தரம்(Shankar Gopalasuntharam) தெரிவுசெய்யப்பட்டார்.

இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
1.பிரஷாந்த் யோகன்(Prashanth Yogan) of Toronto Blues CC – 45 ஓட்டங்கள் VS BNS CC
2.ஆனந்த் மணிமாறன்(Ananth Manimaran) of Atlas CC – 43 ஓட்டங்கள் VS Atlas-A CC
3.பரன்தாமன் செல்வரத்தினம்(Paranthaman Selvaratnam) of Cougars CC – 40(N.O) ஓட்டங்கள் VS B-Town Boyz CC

சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
1.நரேஷ் சுந்தர்(Naresh Sunthar) of of Cougars CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS BlueBirds SC (3-1-04-5)
2.காந்தன் தர்மராஜா(Kanthan tharmarajah) of Cougars CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS Sauga Boyz CC(3-0-6-5)
3.ஜதுர்ஷன் சந்நிதானந்தன்(Jathurshan Sanininathan) of Atlas CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS Atlas-A CC (3-0-11-5)

சிறந்த பிடியெடுப்புக்கள்(BEST CATCHES)
1.ராம் அமிர்தலிங்கம்( Ram Amirthalingam) of BNS CC VS Toronto Blues CC
2.ஜதுர்ஷன் தமிழ்ச்செல்வன்(Jathurshan Thamilselvan) of Sauga Boyz CC VS Atlas CC
3.காலேஸ்வரன் மகேஸ்வரன்(Kaleswaran Maheswaran) of Sauga Boyz CC Vs Atlas CC

மேலதிக தொடர்புகளுக்கு: www.mtcl.info