மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக் (MTCL) அமைப்பின் கோடைகால மென்பந்து போட்டித்தொடரில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்ததும், ஜெய்சுரேஷ் ஜெகநாதன் (Jeysuresh Jeganthan) அனுசரணை செய்யப்படுவதுமான MTCL Super League Challenge Trophy தொடரின் PLAYOFF போட்டிகள் கடந்த சனி மற்றும் ஞாயிறு (September 3rd & 4th) ஆகிய இரு தினங்களில் ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க் (Ideal Development Park) மைதானத்தில் இடம்பெற்றது.
மொத்தமாக 16 அணிகள் இக்கேடயத்தை கைப்பற்றுவதற்காக களத்தில் இறங்கின. இவற்றுள் முதல் எட்டு இடங்களை பிடித்த அணிகள் PLAYOFF-ல் விளையாட தகுதி பெற்றன.
இவ்வெட்டு அணிகளும் தரவரிசையின் அடிப்படையில் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, அவற்றுக்கிடையில் போட்டிகள் நடாத்தப்பட்டு இருகுழுக்களிலும் முதல் இரு இடங்களை பெற்ற அணிகள்
அரையிறுதிப் போட்டிகளுக்கு நுழைந்ததோடு, அரையிறுதிப்போட்டிகளின் வெற்றியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றதுடன், இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற அணி ஜெய்சுரேஷ் ஜெகநாதன் (Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்பட்ட MTCL Super League Challenge Trophyயை கைப்பற்றியது.
இவ்வருட MTCL Super League Challenge Trophy தொடரின் அரையுறுதிப்போட்டிகளுக்கு கல்வியன்காடு GPS துடுப்பாட்ட அணி, BlueBirds துடுப்பாட்ட அணி, Youngstars துடுப்பாட்ட அணி, மற்றும் Cougars துடுப்பாட்ட அணி ஆகிய நான்கு அணிகள் தகுதிபெற்றதுடன் Youngstars துடுப்பாட்ட அணிக்கும், BlueBirds துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய Youngstars துடுப்பாட்ட அணியும், Cougars துடுப்பாட்ட அணிக்கும், கல்வியன்காடு GPS துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய Cougars துடுப்பாட்ட அணியும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இறுதிப்போட்டியானது MTCL Youtube TVயில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதுடன், சமூக வலைத்தளங்களில் போட்டி நிலவரங்கள் உடனுக்குடன் பதிவேற்றமும் செய்யப்பட்டது.
Youngstars துடுப்பாட்ட அணியானது இவ்வருடம் இடம்பெற்ற ஆறு Knock-Out சுற்றுக்கிண்ண தொடர்களில் மூன்று தொடர்களில் வெற்றிக்கேடயத்தை கைப்பற்றிய பெருமையைத் தமதாக்கிக் கொண்டதோடு, MTCL அமைப்பின் இந்த வருட துடுப்பாட்ட பருவகாலத்தின் முதலாமிட அணி தெரிவு பலப்பரீட்சையிலும் போட்டியிட்டுக்கொண்டிருக்கிறது.
Cougars துடுப்பாட்ட அணியானது கடந்த வருடத்திலிருந்து MTCL அமைப்பின் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக வலம்வருவதோடு, கடந்த வருடம் இடம்பெற்ற Super League வெற்றிக்கேடயத்தை வெற்றிகொண்ட பெருமையை தம்வசம் வைத்துள்ளதோடு, இவ்வருடம் முதலாமிட அணி போட்டியிலும் பலபரீட்சை நடத்திவருகின்றனர்.
நூற்றுக்கும் மேற்றப்பட்ட ரசிகர்கள் மைதானத்தில் குழுமியிருக்க ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணியளவில் இறுதிப்போட்டி ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Cougars அணித்தலைவர் தர்ஷன் ரத்னசபாபதி (Tharshan Ratnasapapathy) முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Youngstars துடுப்பாட்ட அணி 15 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 84 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் Youngstars துடுப்பாட்ட அணியை சேர்ந்த ரகு ஞானசௌந்தரநாயகம் (Ragu Gnanasountharanayakam) 18 ஓட்டங்களையும், சுகந்தன் தணியாசலம் (Suganthan Thaniyasalam) 17 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் Cougars துடுப்பாட்ட அணியை சேர்ந்த ஸ்ரீதர்ஷன் ஸ்ரீகாந்தன் (Sridharshan Srikanthan) 3 ஓவர்களில் 24 ஓட்டங்களை கொடுத்து 4 முக்கியமான விக்கெட்டுக்களை கைப்பற்றினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Cougars துடுப்பாட்ட அணி 13.4 ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 87 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றனர். துடுப்பாட்டத்தில் Cougars துடுப்பாட்ட அணியை சேர்ந்த விதுசன் அழகையா (Vithusan Alakaiah) 29 ஓட்டங்களையும், பரன்தாமன் செல்வரத்தினம் (Paranthaman selvaratnam) 21 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
பந்துவீச்சில் Youngstars துடுப்பாட்ட அணியை சேர்ந்த நிரோஷன் ராஜேந்திரன் (Niroshan Rajandiran) 2 ஓவர்களில் 19 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக சகலத்துறையிலும் தனது பங்களிப்பை செய்த Cougars துடுப்பாட்ட அணியை சேர்ந்த விதுசன் அழகையா (Vithusan Alakaiah) தெரிவுசெய்யப்பட்டார்.
Cougars துடுப்பாட்ட அணியானது தொடர்ந்து இரண்டாவது முறையாக Super League சுற்றுக்கிண்ணத்தை கைப்பற்றியமை அனைத்து MTCL ரசிகர்களும் பெருமைப்பட வேண்டிய விடயமாகும். மேலும் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டி வரை முன்னேறி மயிரிழையில் கேடயத்தை வெல்லும் வாய்ப்பைத் தவற விட்ட Youngstars துடுப்பாட்ட அணியையும் ரசிகர்கள் பாராட்டாமல் இருக்கமுடியாது.
அத்தோடு Super League வெற்றிக்கேடயத்தை கைப்பற்றிய Cougars துடுப்பாட்ட அணிக்கும் இரண்டாம் இடம் வந்த Youngstars துடுப்பாட்ட அணிக்கும் MTCL அமைப்பினர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.
பரிசளிப்பு நிகழ்வின் ஆரம்ப அம்சமாக இத்தொடரை சிறந்த முறையில் நடாத்திமுடிக்க உதவிய அனைத்து MTCL நலன்விரும்பிகளும் ஜெய்சுரேஷ் ஜெகநாதன் (Jeysuresh Jeganthan)னால் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். அடுத்த அம்சமாக இவ்வருடம் நடந்த Super League சுற்றுத்தொடரில் 19 போட்டிகளில் 40 ஆட்டமிழப்புக்களை கைப்பற்றிய கல்வியன்காடு GPS துடுப்பாட்ட அணியைச் சேர்ந்த சசிக்குமரன் சண்முகராஜா (Sasikumaran Shanmugarajah) அவர்களுக்கு ஊதா நிறத் (Purple Cap) தொப்பியும், 17 போட்டிகளில் 325 ஓட்டங்களை விளாசிய Cougars துடுப்பாட்ட
அணியைச் சேர்ந்த தர்ஷன் ரத்னசபாபதி (Tharshan Ratnasapapathy) அவர்களுக்கு செம்மஞ்சள் நிறத் (ORANGE CAP) தொப்பியும் ஜெய்சுரேஷ் ஜெகநாதன் (Jeysuresh Jeganthan)னால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அடுத்ததாக இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த Youngstars துடுப்பாட்ட அணியினர் தமக்குரிய இரண்டாம் இடக்கேடயத்தை ஜெய்சுரேஷ் ஜெகநாத (Jeysuresh Jeganthan)னிடமிருந்து பெற்றுக்கொண்டனர். இறுதியாக Super League வெற்றிக்கேடயத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்த Cougars துடுப்பாட்ட அணியினருக்கு வெற்றிக்கேடயம் ஜெகநாதன் (Jeysuresh Jeganthan)னால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இச்சுற்றுத்தொடருக்கு அனுசரணை வழங்கிய ஜெய்சுரேஷ் ஜெகநாதன் (Jeysuresh Jeganthan) அவர்களுக்கு MTCL அமைப்பினர் தமது நன்றிகளை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றனர்.
இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள் (Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிறந்த துடுப்பாட்டம் (BEST BATTING)
- தர்ஷன் ரத்னசபாபதி (Tharshan Ratnasapapathy) of Cougars CC – 51 ஓட்டங்கள் VS GPS CC
- அன்றிவ் ஜோர்ஜ் (Andrew George) of B-Town Boyz CC – 50 (N.O) ஓட்டங்கள் VS BlueBirds CC
சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
- மனோராஜ் தர்மராஜா(Manoraj Tharmarajah) of Atlas-A CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS Chola CC(3-0-08-4)
- செழி கோ (Cheli K) of Youngstars CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS Atlas A CC(3-0-10-4)
- ஸ்ரீதர்ஷன் ஸ்ரீகாந்தன்(Sridharshan Srikanthan) of Cougars CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS Youngstars CC(3-0-14-4)
சிறந்த பிடியெடுப்புக்கள்(BEST CATCHES)
- தயூரன் செல்வராசா (Thayuran Selvarasa) of Youngstars CC VS Atlas A CC
- ஹரிகரன் செல்வரத்தினம்(Harikaran Selvaratnam) of Cougars CC VS Chola CC
- பிரசாந்த் சிவநாதன்(Prashanth Sivathasan) of BlueBirds CC VS B-Town Boyz CC
- டிலோஜன் மதிவர்ணன்(Dilojan Mathivarnan) of GPS CC VS Cougars CC