CMR Challenge trophy 2017 REVIEW

ஐந்தாவது CMR சவால் சுற்றுக்கிண்ணத்தொடர்: மிகவும் பலம் வாய்ந்த கூகர்ஸ்(Cougars CC) துடுப்பாட்ட அணி இரண்டாவது தடவையாக கேடயத்தை கைப்பற்றியது

மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால துடுப்பாட்ட போட்டிகளின் ஐந்தாவது சவால் சுற்றுக்கிண்ண(Knockout) துடுப்பாட்டப்போட்டிகள் கடந்த 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (August 13th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் இடம்பெற்றது. இந்த நொக் அவுட்(Knockout) தொடரானது ஐந்தாவது ஆண்டாக இந்தமுறை நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இத்தொடரை CMR FM நிர்வாகத்தினரும், MTCL அமைப்பினரும் பொறுப்பேற்று சிறந்த முறையில் நடத்தி முடித்தனர்.

ஐந்தாவது CMR சவால் சுற்றுக்கிண்ண(5TH ANNUAL CMR CHALLENGE TROPHY) தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு Youngstars துடுப்பாட்ட அணி, Cougars துடுப்பாட்ட அணி, கல்வியங்காடு GPS துடுப்பாட்ட அணி மற்றும் B-Town Boyz துடுப்பாட்ட அணி ஆகிய நான்கு அணிகள் தகுதிபெற்றதுடன் Cougars துடுப்பாட்ட அணிக்கும் Youngstars துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான போட்டியில் Cougars துடுப்பாட்ட அணியும், கல்வியங்காடு GPS துடுப்பாட்ட அணிக்கும் B-Town Boyz துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான போட்டியில் B-Town Boyz துடுப்பாட்ட அணியும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இறுதிப்போட்டியானது சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டதோடு CMR அலைவரிசையிலும் நேரடி ஓட்டவிபரங்கள் ஒலிபரப்புச் செய்யப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற B-Town Boyz துடுப்பாட்ட அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Cougars துடுப்பாட்ட அணி 12 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் Cougars துடுப்பாட்ட அணியை சேர்ந்த கிருபா தம்பிரத்னம்(Kirupa Thambiratnam) 21 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் B-Town Boyz துடுப்பாட்ட அணியை சேர்ந்த ஜெகதீபன் ஜெயரட்ணம்(Jeyatheepan Jeyaratnam) 3 ஓவர்களில் 21 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பெற்றினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய B-Town Boyz துடுப்பாட்ட அணி 9.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 56 ஓட்டங்களைப் பெற்று 44 ஓட்டங்களால் தோல்வியடைந்தனர். துடுப்பாட்டத்தில் B-Town Boyz துடுப்பாட்ட அணியை சேர்ந்த ஜெகதீபன் ஜெயரட்ணம்(Jeyatheepan Jeyaratnam) 26 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் Cougars துடுப்பாட்ட அணியை சேர்ந்த கபிலாஷ் அழகையா(kapilash Alakaiah) சிறந்த முறையில் பந்து வீசி 3 ஓவர்களில் 08 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக சகலத்துறையிலும் தனது பங்களிப்பை செய்த Cougars துடுப்பாட்ட அணியை சேர்ந்த கபிலாஷ் அழகையா(kapilash Alakaiah) தெரிவுசெய்யப்பட்டார். வெற்றிக்கேடயத்தை கைப்பற்றிய Cougars துடுப்பாட்ட அணிக்கும் இரண்டாம் இடம் வந்த B-Town Boyz துடுப்பாட்ட அணிக்கும் MTCL அமைப்பினரும், CMR நிர்வாகத்தினரும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.

இத்தொடரின் சிறந்த துடுப்பாட்டவீரர், சிறந்த பந்துவீச்சாளர், தொடரின் சிறந்த சகலதுறை ஆட்டக்காரர், இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் வெற்றிக்கேடயம், இரண்டாமிட கேடயம் ஆகிய அனைத்து விருதுகளும் புரட்டாசி மாதம்(September 2nd) 2ம் திகதி இடம்பெறவுள்ள STAR FEST நிகழ்வில் பின்நேரம்(Evening) 6.45 மணிக்கு மேடையில் வைத்து வழங்கி கௌரவிக்கப்படும். இவ்நிகழ்வில் அனைத்து MTCL கிரிக்கெட் ரசிகர்களையும் வந்து கலந்துகொண்டு தமது அணி வீரர்களை உட்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
1.பரன்தாமன் செல்வரத்தினம்(Paranthaman Selvaratnam) of Cougars CC – 49(N.O) ஓட்டங்கள் VS Western CC
2.மனோராஜ் தர்மராஜா(Manoraj Tharmarajah) of Inuvil Boyz CC – 45 ஓட்டங்கள் VS B-Town Boyz CC
3.விமல் மாசிலாமணி(Vimal Masilamani) of Cougars CC- 38 ஓட்டங்கள் VS Atlas-A CC
4.ஜூதர்ஷன் பரன்சோதி(Jutharsan Paransothy) of GPS CC – 36 ஓட்டங்கள் VS B-Town Boyz CC

சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
1.அலக்சன் ஜெகதீசன்(Alaxshan Jegatheesan) of Atlas-A CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS NCC (3-1-06-5)
2.ரகு சௌந்தரநாயகம்(Ragu Gnanasountharanayakam) of Youngstars CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS Cougars CC (3-0-12-5)
3.சுகந்தன் தணிகாசலம்(Suganthan Thaniyasalam) of Youngstars CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS Toronto Blues CC (3-0-14-5)

சிறந்த பிடியெடுப்புக்கள்(BEST CATCHES)
1.நிரஞ்சன் பஞ்சலிங்கம்(Niranjan Panchalingam) of GPS CC VS B-Town Boyz CC
2.விமல் மாசிலாமணி(Vimal Masilamani) of Cougars CC VS Atlas-A CC
3.நிலக்சன் ஸ்ரீசண்முகராஜா(Nilakshan SriShanmugaRaja) of Inuvil Boys Toronto CC VS B-Town Boyz CC
4.ஆதில் சனீர்(Aadhil Zaneer) of Atlas-A CC VS NCC
5.விவியன் கோர்டன்(Vivian Gordon) of NCC VS Atlas-A CC
6.தயூரன் செல்வராசா(Thayuran Selvarasa) of Youngstars CC VS Toronto Blues CC

மேலதிக தொடர்புகளுக்கு www.mtcl.info