30வது சதமடித்த கோஹ்லிக்கு வின்னிங் ஷாட் அடிக்கும் வாய்ப்பை கொடுத்தார் டோணி

30வது சதமடித்த கோஹ்லிக்கு வின்னிங் ஷாட் அடிக்கும் வாய்ப்பை கொடுத்தார் டோணி

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான ஒரு தினத் தொடர், பெரும்பாலான இந்திய வீரர்களுக்கு மிகவும் சிறப்பாகவே அமைந்தது.
கேப்டன் விராட் கோஹ்லி, கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணி புதிய சாதனைகளைப் படைத்தனர்.
ஒயிட்வாஷ் போட்டியில் டோணி செஞ்ச காரியம்தான் தற்போது பரவலாக பேசப்படுகிறது. பயப்பட வேண்டாம். அவர் ஒன்றும் தப்பாக செய்யவில்லை. மற்றவர்கள் சந்தோஷத்தில் சந்தோஷப்படும் தல, அவ்வாறு செய்வதற்கும் வாய்ப்பில்லை.

களம் இறங்கிய டோணி

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருதினப்போட்டியில், கேப்டன் விராட் கோஹ்லியும் கேதார் ஜாதவும் அபரமாக விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். கடைசி ஓவரில் கேதார் ஜாதவ் அவுட்டாக, மைதானத்தில் இறங்கினார் டோணி.

சாதனை போட்டி
இந்த போட்டி இருவருக்குமே புதிய சாதனையை தொட்ட போட்டியாகும். 30வது சதம் அடித்த கோஹ்லி ஒருபுறம், 100 ஸ்டம்பிங் செய்த டோணி ஒருபுறம்.
2 ரன் எடுத்தால் வெற்றி

2 ரன் எடுத்தால் வெற்றி
கிரேட் பினிஷர் என்றழைக்கப்படும் டோணி ஆடுவதற்கு தயாராக இருக்கிறார். 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. வின்னிங் ஷாட் அடிக்க வாய்ப்பிருந்தும், பந்தை தட்டிவிட்டு ஒரு ரன் எடுத்தார் டோணி.
மறுபுறம் சென்ற பிறகு, கோஹ்லியை பார்த்து புன்னகைத்தார்.
புன்னகையாலேயே நன்றி

புன்னகையாலேயே நன்றி
பதிலுக்கு கோஹ்லியும் புன்னகையாலேயே நன்றி கூறினார். இந்த புன்னகைக்கு பின், ஆயிரமாயிரம் அர்த்தங்கள் உண்டு. 30வது சதமடித்த கோஹ்லிக்கு வின்னிங் ஷாட் அடிக்கும் வாய்ப்பை கொடுத்தார் டோணி. அதுதாங்க தல.