JJ REAL TEAM ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் மதிப்புமிக்கதுமான MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடரின் ஆறாவது வார நிலவரம்
மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால மென்பந்து போட்டித்தொடரின் JJ REAL TEAM ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் மதிப்புமிக்கதுமான MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடரின் ஆறாவது வாரச்சுற்றுப்போட்டிகள் கடந்த 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (July 7th) அன்று MTCL மைதானத்தில் இடம்பெற்றது. இந்த வாரப்போட்டிகளை BlueBirds CC துடுப்பாட்ட அணியும், Trimountain CC துடுப்பாட்ட அணியும் பொறுப்பேற்று சிறந்த முறையில் நடாத்தி முடித்தனர். இந்த வாரப்போட்டிகள் உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் நேர அட்டவணையை கடைப்பிடித்து உரிய நேரத்தில் முடிக்கப்பட்டது. போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க உதவிய இரு அணியினருக்கும் MTCL அமைப்பினர் தமது நன்றிகளை தெரிவிக்கின்றனர்.
MTCL Super League Challenge Trophy போட்டித்தொடரின் ஐந்தாவது வார நிறைவில் Cougars CC அணியை சேர்ந்த விதுஷன் அழகையா(Vithusan Alakaiah) அதிக ஓட்டங்களைப் பெற்று முன்னிலைக்கு முன்னேறியதுடன் செம்மஞ்சள் நிறத்(Orange Cap) தொப்பியையும் தன்வசமாக்கிக் கொண்டார் அத்துடன் ஐந்து வாரங்கள் நிறைவில் தொடர்ந்து அதிக ஆட்டமிழப்புக்களை எடுத்து Youngstars CC அணியை சேர்ந்த நிலக்சன் சிவநாதன்(Nilaksan Sivanathan) தொடர்ந்து இந்த வாரமும் முதலாம் இடத்தில் இருந்ததோடு ஊதா நிறத்(Purple Cap)தொப்பியை தன்வசம் தக்கவைத்துக் கொண்டமையும் இந்த வார சிறப்பம்சங்களில் சிலவாகும்.
இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
1.கோகுலன் சின்னையா(Kokulan Sinniyah) of Rockets CC – 64 ஓட்டங்கள் vs GPS CC
2.துஸ்யந்தன் திரவியம்(Thushyanthan Thiraviyam) of Knights CC – 55 ஓட்டங்கள் vs B-Town Boys CC
3.மிரேஸ் ரத்னசபாபதி(Mirez Ratnasapapathy) of Cougars CC – 51 ஓட்டங்கள் vs United CC
சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
1.ஜெயராஜா நீதிராஜா(Jeyaraja Neethiraja) of United CC – 5 ஆட்டமிழப்புக்கள் Vs Atlas CC(2-0-15-5)
2.ஷங்கர் கோபால்(Shankar Gopal) of Blackcats CC – 5 ஆட்டமிழப்புக்கள் vs Cougars CC(3-0-15-5)
3.மிதுசாந்த் ஜோசெப்(Mithushanth Joseph) of Rockets CC – 5 ஆட்டமிழப்புக்கள் vs NCC(3-0-20-5)
மேலதிக தொடர்புகளுக்கு www.mtcl.info
Facebook: https://wwwfacebook.com/mtcl.cricket