JJ Team ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் மதிப்புமிக்கதுமான MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடர் கடந்த வாரம் கோலாகலமாக ஆரம்பமாகியது

JJ Team ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் மதிப்புமிக்கதுமான MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடர் கடந்த வாரம் கோலாகலமாக ஆரம்பமாகியது

மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் 2018ம் ஆண்டின் கோடைகால மென்பந்து போட்டித்தொடரின் JJ Team ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் மதிப்புமிக்கதும், பாரம்பரியதுமான MTCL Super League Challenge Trophy தொடர் கடந்த 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை(May 27th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(IDEAL DEVELOPMENT PARK) மைதானத்தில் தொடங்கியது. ஆரம்ப நிகழ்வின் முதல் அம்சமாக 2017ம் ஆண்டு Super League போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரரான Atlas அணியை சேர்ந்த ஜதுர்ஷன் சந்நிதானந்தன்(Jathurshan Sanininathan) அவர்களுக்கு செம்மஞ்சள்(ORANGE)நிறத்தொப்பி(CAP)யும், அதிக ஆட்டமிழப்புகளைச் செய்த வீரரான Atlas-A அணியை சேர்ந்த ஜேய் முனியன்(Jey Muniyan) அவர்களுக்கு ஊதா(PURPLE)நிறத்தொப்பி(CAP)யும் ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan) அவர்களால் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. அடுத்ததாக சென்ற ஆண்டில் ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(JEYSURESH JEGANATHAN)னால் அனுசரணை செய்யப்பட்ட SUPER LEAGUE CHALLENGE TROPHYயை வெற்றி பெற்ற Sauga Boyz அணியின் தலைவர் திபாகரன் அன்னலிங்கம்(Thibaharan Annalingam) Super League Challenge கேடயத்தை ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan) அவர்களிடம் கையளித்து தமக்குரிய வெற்றிக்கேடயத்தை பெற்றுக்கொண்டார். அடுத்த நிகழ்வாக அனைத்து அணி வீரர்களும் SUPER LEAGUE CHALLENGE TROPHYயுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு நிகழ்வு நிறைவடைந்தது. இவ்வருடம் மொத்தமாக 16 அணிகள் இக்(SUPER LEAGUE CHALLENGE TROPHY)கேடயத்தை கைப்பற்றுவதற்காக போட்டிக்களத்தில் இறங்கியுள்ளன. அவ்வணிகளின் பெயர் விபரங்கள் கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.
Atlas துடுப்பாட்ட கழகம்
Atlas-A துடுப்பாட்ட கழகம்
Blackcats துடுப்பாட்ட கழகம்
Bluebirds விளையாட்டு கழகம்
B-Town Boyz துடுப்பாட்ட கழகம்
Cougars துடுப்பாட்ட கழகம்
Eelam Kings துடுப்பாட்ட கழகம்
GPS துடுப்பாட்ட கழகம்
Inuvil Boyz துடுப்பாட்ட கழகம்
NCC துடுப்பாட்ட கழகம்
Tamil Kings 11 Stars துடுப்பாட்ட கழகம்
Toronto Blues துடுப்பாட்ட கழகம்
Trimountain துடுப்பாட்ட கழகம்
United துடுப்பாட்ட கழகம்
Western துடுப்பாட்ட கழகம்
Young Stars துடுப்பாட்ட கழகம்
இந்த வாரப்போட்டிகளை B-Town Boyz துடுப்பாட்ட அணியும், Toronto Blues துடுப்பாட்ட அணியும் பொறுப்பேற்று நடத்தி முடித்தனர். இந்த வாரப்போட்டிகள் உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் நேர அட்டவணையை கடைப்பிடித்து உரிய நேரத்தில் முடிக்கப்பட்டது. போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க உதவிய இரு அணியினருக்கும் MTCL அமைப்பினர் தமது நன்றிகளை தெரிவிக்கின்றனர். இந்த வாரம் இன்னொரு சிறப்பம்சமாக Cougars அணியைச் சேர்ந்த விமல் மாசிலாமணி(Vimal Maasilamani) Atlas அணிக்கெதிரான போட்டியில் 6 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்களை தொடர்ச்சியாக விளாசி சாதனை படைத்தார்.
இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
1.மனோ தர்மராஜா(Manoraj Tharmarajah) of Atlas-A CC – 59* ஓட்டங்கள் Vs Cougars CC
2.ஜதுர்ஷன் சந்நிதானந்தன்(Jathurshan Sanininathan) of Atlas CC – 57* ஓட்டங்கள் Vs United CC
3.மிரேஸ் ரத்னசபாபதி(Mirez Ratnasapapathy) of Cougars CC – 56 ஓட்டங்கள் Vs Atlas CC
4.தனு சுந்தரம்(Thanushanth Canagasundaram) of Cougars CC – 46* ஓட்டங்கள் Vs Atlas-A CC
5.அம்பி முரளிமனோகர்(Ampi Muralimanohar) of Trimountain CC – 40 ஓட்டங்கள் Vs Eelam Kings CC
சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
1.சசி சண்முகராஜா(Sasiskumaran Shanmugarajah) of GPS CC – 5 ஆட்டமிழப்புக்கள் Vs Atlas CC(3-0-19-5)
சிறந்த பிடியெடுப்புக்கள்(BEST CATCHES)
1.கார்த்திக் முத்துராசா(Chandrasekar Muthurasa) of Blackcats CC Vs Trimountain CC
2.கமல் பரமானந்தம்(Kamal Paramanantham) of NCC Vs GPS CC
3.ஆனந்த் மணிமாறன்(Ananth Manimaran) of Atlas CC Vs Inuvil Boyz CC
4.அம்பி முரளிமனோகர்(Ampi Muralimanohar) of Trimountain CC Vs Western CC
5.சங்கர்(Shankar) of NCC Vs Cougars CC
6.தினேசன் வைத்தீஸ்வரன்(Thinesan Vaitheeswaran) of Blackcats CC Vs Trimountain CC
7.உமா சுந்தர்(Uma Sundar) of Trimountain CC Vs Blackcats CC
8.லவன் செல்வரத்தினம்(Lavaneethan Selvaratnam) of GPS CC Vs Atlas CC
9.கபில் மூர்த்தி(Kapilaraj Sivalingamoorthy) of Inuvil Boyz CC Vs Eelam Kings CC
10.தயூரன் செல்வராஜா(Thayuran Selvarasa) of Youngstars CC Vs GPS CC
மேலதிக விபரங்களுக்கு: www.mtcl.info
Facebook: https://wwwfacebook.com/mtcl.cricket