மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால துடுப்பாட்ட போட்டிகளின் முதலாவது நொக் அவுட்(KNOCKOUT) துடுப்பாட்டப்போட்டிகள் கடந்த 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை(May 28th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் இடம்பெற்றது. REALTOR KAVI CHALLENGE TROPHY தொடரானது இரண்டாவது வருடமாக நடாத்தப்பட்டமை சிறப்பம்சமாகும். இத்தொடருக்கு வீடு விற்பனை முகவர் கவி நாகராஜா(Kavi Nagarajah) பிரதான அனுசரணை வழங்கியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். இத்தொடரை MTCL அமைப்பினரும், கவி நாகராஜா(Kavi Nagarajah)வும் பொறுப்பேற்றுச் சிறந்த முறையில் நடத்தி முடித்தனர்.
இரண்டாவது REALTOR KAVI CHALLENGE TROPHY தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு Youngstars CC, Cougars CC, BlueBirds SC மற்றும் Toronto Blues CC ஆகிய நான்கு அணிகள் தகுதிபெற்றதுடன் Toronto Blues CC அணிக்கும் Youngstars CC அணிக்கும் இடையிலான போட்டியில் Toronto Blues CC அணியும், BlueBirds SC அணிக்கும் Cougars CC அணிக்கும் இடையிலான போட்டியில் Cougars CC அணியும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Toronto Blues CC அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Cougars CC அணி 12 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட்டுக்களை இழந்து 59 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் cougars CC அணியை சேர்ந்த பரன்தாமன் செல்வரத்தினம்(Paranthaman selvaratnam) 19 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் Toronto Blues CC அணியை சேர்ந்த ஜெயகிருஷ்ணா நித்தியானந்தன்(Jeyakrishna Nithiyananthan) 3 ஓவர்களில் வெறும் 06 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பெற்றினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Toronto Blues CC அணி 11.5 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களைப் பெற்று ஒரு விக்கெட்டினால் வெற்றி பெற்று கேடயத்தை தாமதாக்கிக் கொண்டனர். துடுப்பாட்டத்தில் Toronto Blues CC அணியை சேர்ந்த ரஜித் சரத்சந்திரா(Rajith Sarathchandra) 17 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். பந்துவீச்சில் cougars CC அணியை சேர்ந்த கிருபா தம்பிரத்னம்(Kirupa Thambiratnam) சிறந்த முறையில் பந்து வீசி 3 ஓவர்களில் 12 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டத்தில் தனது பங்களிப்பை செய்த Toronto Blues CC அணியை சேர்ந்த ரஜித் சரத்சந்திரா(Rajith Sarathchandra) தெரிவுசெய்யப்பட்டார்.
இறுதிப்போட்டியானது சமூகவலைத்தளங்களிலும், KVM TVயிலும் நேரடி ஒளிபரப்புச்செய்யப்பட்டமை மேலுமொரு சிறப்பம்சமாகும். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற Toronto Blues CC அணிக்கும், இரண்டாம் இடம் வந்த Cougars CC அணிக்கும் MTCL அமைப்பினர் தமது பாராட்டுக்களைத் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றனர்.
இத்தொடரின் சிறந்த துடுப்பாட்டவீரராக Toronto Blues CC அணியை சேர்ந்த சயந்தன் தம்பிராஜா(Sajanthan Thambirajah) தெரிவுசெய்யப்பட்டதுடன் சிறந்த பந்துவீச்சாளராக Toronto Blues CC அணியை சேர்ந்த ஜெயகிருஷ்ணா நித்தியானந்தன்(Jeyakrishna Nithiyananthan) தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக Cougars CC அணியை சேர்ந்த கபிலாஷ் அழகையா(kapilash Alakaiah) தெரிவுசெய்யப்பட்டார்.
இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
1.ஜேய் முனியன்( Jey Muniyan) of Atlas-A CC – 51(N.O) ஓட்டங்கள் VS Western CC
2.கபிலாஷ் அழகையா(kapilash Alakaiah) of Cougars CC – 45 ஓட்டங்கள் VS Inuvil Boyz CC
3.சந்திரகாந்தன் மைலு(Chandrakanthan Mylu) of NCC – 41 ஓட்டங்கள் VS Cougars CC
4.லவநீதன் செல்வரத்தினம்(Lavaneethan Selvaratnam) of GPS CC – 33(N.O) ஓட்டங்கள் VS Toronto Blues CC
5.சயந்தன் தம்பிராஜா(Sajanthan Thambirajah) of Toronto Blues CC – 30 ஓட்டங்கள் VS GPS CC
சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
1.சுகந்தன் தணிகாசலம்(Suganthan Thaniyasalam) of Youngstars CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS B-Town Boyz CC(3-1-06-5)
2.அசாம் மொஹமட்(Azzam Mohamed) of Atlas-A CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS Western CC(3-0-08-5)
3.கபிலாஷ் அழகையா(kapilash Alakaiah) of Cougars CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS NCC(3-0-08-4)
4.ஜெயகாந்த் பொன்னம்பலம்(Jayakanth Ponnampalam) of Sauga Boyz CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS Atlas CC(3-0-08-4)
5.நிதர்ஷன் நிதன்(Nitharshan Nithan) of Atlas CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS Sauga Boyz CC(3-0-15-4)
6.ஜெயகிருஷ்ணா நித்தியானந்தன்(Jeyakrishna Nithiyananthan) of Toronto Blues CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS GPS CC(3-0-18-4)
7.அருண் பரம்சோதி(Arun Paramsothy) of NCC – 4 ஆட்டமிழப்புக்கள் VS Toronto Blues CC(3-0-25-4)
சிறந்த பிடியெடுப்புக்கள்(BEST CATCHES)
1.மில்ரன் மைக்கேல்(Milton Michael) of BlueBirds SC VS Inuvil Boyz Toronto CC
2.குகதீபன் சதானந்தனேசன்(Kugatheepan Sathananthanesan) of BlueBirds SC VS Inuvil Boyz Toronto CC
3.ஜெயராஜா நீதிராஜா(Jayaraja Neethiraja) of Atlas CC VS Sauga Boyz CC
4.மிதுலன் பஞ்சலிங்கம்(Mithulan Panchalingam) of GPS CC VS Toronto Blues CC
மேலதிக விபரங்களுக்கு: www.mtcl.info