MTCL-ன் 2016 கோடைகால மென்பந்து போட்டித்தொடர் – இரண்டாம் வார நிலவரம்

MTCL-ன் 2016 கோடைகால மென்பந்து போட்டித்தொடர் - இரண்டாம் வார நிலவரம்




மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(Mtcl) அமைப்பின் கோடைகால மென்பந்து போட்டித்தொடரின் ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் மதிப்புமிக்கதும், பாரம்பரியதுமான Mtcl Super League Challenge Trophy போட்டித்தொடரின் இரண்டாவது வார சுற்றுப்போட்டிகள் கடந்த12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க் (Ideal Development Park) மைதானத்தில் இடம்பெற்றது.

இரண்டாவது வார போட்டிகளை கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கம் (Gps Cc) அணியும், ப்ளுபேர்ட்ஸ் (Bluebirds Sc) அணியும் பொறுப்பேற்று நடத்தினர். இரண்டாவது வார போட்டிகள் உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் நேர அட்டவணையை கடைப்பிடித்து உரிய நேரத்தில் முடிக்கப்பட்டது. போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க உதவிய இரு அணியினருக்கும் Mtcl அமைப்பினர் தமது நன்றிகளை தெரிவிக்கின்றனர்.

முதல் வார முடிவில் அதிக ஓட்டங்களை பெற்று முன்னிலையில் இருந்த வீரரான அட்லஸ்-A(Altas-A) அணியை சேர்ந்த மனோதர்மராஜா(Mano Tharmarah)க்கு ஆரஞ்சு(Orange) Capம், அதிக ஆட்டமிழப்புக்களை எடுத்து முன்னிலையில் இருந்த வீரரான அட்லஸ்-A (Altas-A) அணியை சேர்ந்த ஜேய் முனியன்(Jey Muniyan)க்கு பெர்பில்(Purple) Capம் ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் வழங்கப்பட்டமையும் விசேட நிகழ்வுகளில் ஒன்றாகும்.

இரண்டாவது வாரத்தின் பிரதான (Premium Game) போட்டிக்கு Zenplus Financial உரிமையாளர் ஜெலன் ஆறுமுகநாதன் (JelanArumuganathan) பிரதான அனுசரணை வழங்கி இருந்தார். நேற்றைய தினம் பிரதான (Premium Game) போட்டியாக சென்ற ஆண்டின் Mtcl Super League Challenge Trophyயை வெற்றிகொண்ட குகர்ஸ் (Cougars Cc) அணியும், சென்ற ஆண்டின் முதலாம் இடத்தை தட்டிச்சென்ற ரொறொன்டோ ப்ளுஸ் (Toronto Blues Cc) அணியும் மோதிக்கொண்ட போட்டி தெரிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் நேரடி போட்டி நிலவரங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் பார்த்து மகிழக்கூடிய சந்தர்ப்பத்தையும் Mtcl அமைப்பினர் ஏற்படுத்திக்கொடுத்தனர். இப்போட்டியில் Cougars Cc மிகவும் அபார முறையில் விளையாடி 08 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றனர்.

இப்போட்டியில் Cougars Cc அணியை சேர்ந்த கிருபாதம்பிரத்னம் (KirupaThambiratnam) சிறந்த முறையில் பந்து வீசி 3 ஓவர்களில் ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக வெறும் 7 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 3 ஆட்டமிழப்புக்களை எடுத்ததுடன், துடுப்பாட்டத்தில் Cougars Cc அணியை சேர்ந்த பரன்தாமன் செல்வரத்தினம்(Paranthaman Selvaratnam) 4 ஆறு ஓட்டங்களை விளாசியதுடன் 32 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். போட்டி நாயகன் விருதை சிறந்த முறையில் பந்து வீசிய விதுசன் அழகையா(Vithusan Alakaiah) தட்டிச்சென்றார்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Toronto Blues Cc, தமது 15 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 54 ஓட்டங்களை மட்டுமே பெற்றனர். Toronto Blues Cc சார்பாக துடுப்பாட்டத்தில் கமல்ராஜ் ராதாகிருஷ்ணன்(Kamalraj Rathakrishnan) ஆட்டமிழக்காமல்28 ஓட்டங்களை பெற்றார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Cougars Cc 7 ஓவர்கள் நிறைவில் வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் பறிகொடுத்து தமதுவெற்றி இலக்கை மிகவும் இலகுவாகஅடைந்தனர்.

இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிறந்த துடுப்பாட்டம்(Best Batting)
  1. தர்ஷன் ரத்னசபாபதி(TharshanRatnasapapathy) Of Cougars Cc – 89 ஓட்டங்கள் Vs Bns Cc
  2. விமல் மாசிலாமணி(VimalMasilamani) Of Cougars Cc – 74 ஓட்டங்கள் Vs Cheetahs Cc
  3. ஜேய் முனியன்( Jey Muniyan) OfAtlas-A Cc – 60 ஓட்டங்கள்(NotOut) Vs Saugaboyz Cc
  4. அரவிந்தன் சுந்தரலிங்கம்(Aravinthan Suntharalingam) Of Youngstars Cc – 57 ஓட்டங்கள்(Not Out) Vs B-Town Boyz Cc
  5. செழி(Chelly K) Of Youngstars Cc – 51 ஓட்டங்கள்(NotOut) Vs Toronto Blues Cc
  6. ட்வைன் கம்மிங்க்ஸ்(Dwayne Cummings) Of Western Cc – 50 ஓட்டங்கள் Vs Atlas-A Cc
சிறந்த பந்துவீச்சு(Best Bowling)
  1. கபிலாஷ் அழகையா(Kapilash Alakaiah)Of Cougars Cc – 5 ஆட்டமிழப்புக்கள் Vs Warriors Cc (2.2-0-8-5)
  2. ரொபின் அந்தோனி(Nilesh Robin Anthony) Of Ncc – 5 ஆட்டமிழப்புக்கள் Vs Atlas-A Cc (3-0-21-5)
  3. விதுஷன் அழகையா(Vithusan Alakaiah)Of Cougars Cc- 4 ஆட்டமிழப்புக்கள் Vs Cheetahs Cc (2-0-10-4)
  4. நிதர்ஷன் ஸ்ரீசண்முகராஜா(Nitharshan Srishanmugarajah) Of Inuvil Boyz Cc – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Saugaboyz Cc (3-0-11-4)
  5. நேசன் அமிர்தலிங்கம்(Nesan Amirthalingam) Of Bns Cc- 4 ஆட்டமிழப்புக்கள் Vs Cougars Cc (3-0-27-4)
சிறந்த பிடியெடுப்புக்கள் (Best Catches)
  1. ஸ்ரீதர்ஷன் ஸ்ரீகாந்தன்(SridharshanSrikanthan) Of Cougars Cc Vs Bns Cc
  2. ராம்(தனுஷ்) அமிர்தலிங்கம் (Ram DhanushAmirthalingam) Of Bns Cc Vs Warriors Cc
  3. லஹீதன் சத்தியநாதன்(Laheethan Saththiyanathan) Chola Cc Vs Western Cc
  4. ஜதுர்ஷன் நாதன்(Jathursan Nathan) Cheetahs Cc Vs Cougars Cc

மேலதிக தொடர்புகளுக்கு www.mtcl.info