இந்த வாரப்போட்டிகளை சோழர் துடுப்பாட்ட (CHOLA CC)அணியும், BNS துடுப்பாட்ட (BNS CC) அணியும் பொறுப்பேற்று நடத்தினர். இந்த வாரப்போட்டிகள் உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் நேர அட்டவணையை கடைப்பிடித்து உரிய நேரத்தில் முடிக்கப்பட்டது.
போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க உதவிய இரு அணியினருக்கும் MTCL அமைப்பினர் தமது நன்றிகளை தெரிவிக்கின்றனர்.
MTCL Super LeagueChallenge Trophy போட்டித்தொடரின் இரண்டாவது வார நிறைவில் அதிக ஓட்டங்களை பெற்று முன்னிலையில் இருந்த வீரரான YOUNGSTARS துடுப்பாட்ட அணியை சேர்ந்த அரவிந்தன் சுந்தரலிங்கம் (Aravinthan Suntharalingam) அவர்களுக்கு NAVA LAW நிறுவனத்தின் உரிமையாளர் குபேஸ் நவா (KubesNava) ஆரஞ்சு(ORANGE)CAPம், அதிக ஆடமிழப்புக்களை எடுத்து முன்னிலையில் இருந்த வீரரான CHEETAHS துடுப்பாட்ட அணியை சேர்ந்த ஆனந்த் மணிமாறன் (Ananth Manimaran) அவர்களுக்கு DOTOSTUDIOவின் உரிமையாளர் செந்து வேல்நாயகம் (Senthu Velnayagam) பெர்பில்(PURPLE )CAPம் வழங்கப்பட்டமை இந்த வார சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
மூன்றாவது வாரத்தின் பிரதான (PREMIUM GAME) போட்டிக்கு பரடைஸ் பிட்சா & பேகர்ஸ் (PARADISEPIZZA & BURGERS) நிறுவனத்தினர் பிரதான அனுசரணை வழங்கி இருந்தனர்.
இந்த வாரத்தின் பிரதான(PREMIUMGAME) போட்டியாக சென்ற ஆண்டின் MTCL Super League Challenge Trophy தொடரின் PLAY-OFF போட்டிகளுக்கு தெரிவான சீராஸ் (CHEETAHS CC) அணியும், அட்லஸ்-A (ATLAS-ACC) அணியும் மோதிக்கொண்ட போட்டி தெரிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் நேரடி போட்டிநிலவரங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் பார்த்து மகிழக்கூடிய சர்ந்தர்ப்பத்தையும் MTCL அமைப்பினர் ஏற்படுத்திக்கொடுத்தனர்.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற CHEETAHSCC களத்தடுப்பைத் தெரிவுசெய்தனர்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ATLAS-A அணி தமது 15 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 67 ஓட்டங்களைப் பெற்றனர். மிகவும் சிறந்த முறையில் பந்து வீசிய கார்த்திக் மணிமாறன் (Karthik Manimaran) 3 ஓவர்களில் வெறும் ஒன்பது ஓட்டங்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பெற்றினார்.
துடுப்பாட்டத்தில் ATLAS-A அணியை சேர்ந்த ஜேய் முனியன் (Jey Muniyan) 14 ஓட்டங்களை பெற்றார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய CHEETAHS அணி 13.4 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்து தமது வெற்றி இலக்கை அடைந்தனர்.
துடுப்பாட்டத்தில் CHEETAHS அணியை சேர்ந்த விஜி தர்மா (Viji Tharma) 21 ஓட்டங்களை பெற்றதுடன் பந்துவீச்சில் ATLAS-A அணியை சேர்ந்த ரகுரூபன் யோகராஜா (RagurubanJogarajah) சிறந்த முறையில் பந்து வீசி 3 ஓவர்களில் ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக வெறும் 11 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக சகலதுறைகளிலும் தனது பங்களிப்பை செய்த CHEETAHSCC அணியை சேர்ந்த கார்த்திக் மணிமாறன்(Karthik Manimaran) தெரிவுசெய்யப்பட்டார்.
இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance)கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
- குகதீபன் சதானந்தனேசன் (Kugatheepan Sathananthanesan) OFBLUEBIRDS SC – 63 ஓட்டங்கள் (NOT OUT) VS TORONTO BLUES CC
- பிரஷாந்த் ஷான் (Prashanth Shan) OF GPS CC – 53 ஓட்டங்கள் VS COUGARS CC
- தயூரன் செல்வராசா (Thayuran Selvarasa) OF YOUNGSTARS CC – 51 ஓட்டங்கள் (NOT OUT) VS WESTERN CC
- சுதேஷ் செல்வா (Suthes Selva) OF B-TOWN BOYZ CC – 51 ஓட்டங்கள் (NOT OUT) VSCHEETAHS CC
- ரகு ஞானசௌந்தரநாயகம் (Ragu Gnanasountharanayakam) OFYOUNGSTARS CC – 51 ஓட்டங்கள் VS WESTERN CC
- கபிலாஷ் அழகையா (kapilash Alakaiah) OF COUGARS CC – 49 ஓட்டங்கள் VS GPS CC
சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
- சுதா சிவசுப்ரமணியம் (Sutha Sivasubramaniyam) OF NCC -4 ஆட்டமிழப்புக்கள் VS CHEETAHSCC (3-0-6-4)
- கபிலாஷ் அழகையா (kapilashAlakaiah) OF COUGARS CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS INUVIL BOYZ CC (3-1-10-4)
- ஆனந்த் மணிமாறன் (AnanthManimaran) OF CHEETAHS CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS SAUGABOYZ CC (3-0-12-4)
- சுதா சிவசுப்ரமணியம் (SuthaSivasubramaniyam) OF NCC – 4 ஆட்டமிழப்புக்கள் VS B-TOWN BOYZ CC (2-0-12-4)
- ஜினோஷன் நாகேந்திரன் (JinoshanNagenthiran) OF SAUGABOYZ CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS WARRIORS CC (2.5-0-17-4)
- ஷியாம் ஜெயந்தன் (Shyam Jeyanthan) OF EELAM KINGS CC- 4 ஆட்டமிழப்புக்கள் VS BLUEBIRDS CC (3-0-19-4)
- சஞ்சய் மாயாண்டி (SanjeyMayandi) OF WARRIORS CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS SAUGABOYZ CC (3-0-20-4)
- அரவிந்தன் சுந்தரலிங்கம் (Aravinthan Suntharalingam) OFYOUNGSTARS CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS WESTERNCC (3-0-22-4)
சிறந்த பிடியெடுப்புக்கள்(BEST CATCHES)
- பிரதாபன் சிவகுமார் (Pirathaban Sivakumar) OF NCC VS B-TOWN BOYZ CC
- ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(JeysureshJeganthan) OF NCC VS CHEETAHS CC
- லக்க்ஷன் ஜெகதீசன் (Laxshan Jegatheesan) OF ALTAS-A CC VS CHEETAHS CC
- மயூரன் சண்முகதாசன் (MayooranShanmugathasan) OF CHEETAHS CC VS ALTAS-A CC
- சசிக்குமரன் சண்முகராஜா (Sasikumaran Shanmugarajah) OF GPSCC VS EELAM KINGS CC
மேலதிக தொடர்புகளுக்கு www.mtcl.info