MTCL அமைப்பினரால் நடாத்தப்பட்ட பதின்மூன்றாவது மாறன் மென்பந்து நினைவகத்தொடர்: B-Town Boys துடுப்பாட்ட அணியை வீழ்த்தி வெற்றிக்கிண்ணத்தை தட்டிச்சென்றது Black Cats துடுப்பாட்ட அணி
மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் இந்த வருட கோடைகால துடுப்பாட்ட போட்டிகளின் மூன்றாவது நொக் அவுட்(KNOCKOUT) துடுப்பாட்டப்போட்டிகள் கடந்த 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை(July 15th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் இடம்பெற்றது. இந்த நொக் அவுட்(KNOCKOUT) தொடரானது மாறனின்(In Memory of Maran) நினைவாக பதின்மூன்றாவது ஆண்டாக இம்முறை நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இத்தொடரை லெஜெண்ட்(legends CC) துடுப்பாட்ட அணியினரும், MTCL அமைப்பினரும் பொறுப்பேற்று சிறந்த முறையில் நடத்தி முடித்தனர்.
அமரர் மணிமாறன் சிவலிங்கம்(Manimaran Sivalingam) அவர்கள் லெஜெண்ட்(legends CC) துடுப்பாட்ட அணியில் 2003ம் ஆண்டில் தன்னை இணைத்துக்கொண்டு 2005ம் ஆண்டு இறைவன் திருவடி சேரும் வரை அவ்வணியில் விளையாடினார். அத்தருணத்தில் அவர் வளர்ந்து வரும் சிறந்த சகலதுறை(All Rounder) வீரராகத் திகழ்ந்தமை அவருடைய விளையாட்டுச் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். அவரின் நினைவுகளை சுமந்து வரும் லெஜெண்ட்(legends CC) துடுப்பாட்ட அணி மற்றும் MTCL அமைப்பினர் இத்தொடரை 2006ம் ஆண்டு முதல் அவரின் வாழ்க்கையைப் பெருமைப்படுத்தும் விதத்தில் நடாத்திவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்க வேண்டிய விடயமாகும்.
பதின்மூன்றாவது மாறன் நினைவகத்(13th MARAN Memorial Challenge Trophy)தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு Youngstars, Black Cats, NCC மற்றும் B-Town Boys ஆகிய நான்கு அணிகள் தகுதிபெற்றதுடன் B-Town Boys அணிக்கும் Youngstars அணிக்கும் இடையிலான போட்டியில் B-Town Boys அணியும், Black Cats அணிக்கும் NCC அணிக்கும் இடையிலான போட்டியில் Black Cats அணியும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இறுதிப்போட்டியானது சமூக வலைத்தளங்களிலும், KVM தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டமை அனைவரது பாராட்டுக்களை பெற்றதுடன் பலநூற்றுக்கணக்கான ரசிகர்களும் பார்த்து மகிழ்ந்தனர்.
இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Black Cats அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Black Cats அணி 12 ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் Black Cats அணியை சேர்ந்த ஷங்கர் கோபாலசுந்தரம்(Shankar Gopalasuntharam) வெறும் ஏழு பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் B-Town Boys அணியை சேர்ந்த சனா பத்மநாதன்(Sana Pathmanathan) 3 ஓவர்களில் வெறும் 5 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 1 விக்கெட்டினைக் கைப்பெற்றினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய B-Town Boys அணி 9.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 58 ஓட்டங்களைப் பெற்று 68 ஓட்டங்களினால் படுதோல்வியடைந்தனர். துடுப்பாட்டத்தில் B-Town Boys அணியை சேர்ந்த ஜுட் மாசிலாமணி(Jude Masilamani) 36 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் Black Cats அணியை சேர்ந்த வினோத் சண்முகலிங்கம்(Vinoth Shanmugalingam) சிறந்த முறையில் பந்து வீசி 1.4 ஓவர்களில் வெறும் 8 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றினார், போட்டியின் ஆட்டநாயகன் விருதினை சகல துறைகளிலும் தனது பங்களிப்பைச் செய்த ஷங்கர் கோபாலசுந்தரம்(Shankar Gopalasuntharam) தட்டிச்சென்றார். வெற்றிக்கேடயத்தை கைப்பற்றிய Black Cats அணிக்கும் இரண்டாம் இடம் வந்த B-Town Boys அணிக்கும் MTCL அமைப்பினர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.
இத்தொடரின் சிறந்த துடுப்பாட்டவீரராக மூன்று போட்டிகளில் 92 ஓட்டங்களைப் பெற்ற Black Cats அணியை சேர்ந்த ஜினோஷன் நாகேந்திரன்(Jinoshan Nagenthiran) தெரிவு செய்யப்பட்டதுடன் சிறந்த பந்துவீச்சாளராக நான்கு போட்டிகளில் 09 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய Black Cats அணியை சேர்ந்த வினோத் சண்முகலிங்கம்(Vinoth Shanmugalingam) தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக நான்கு போட்டிகளில் மொத்தமாக 56 ஓட்டங்களையும், 9 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய Black Cats அணியை சேர்ந்த தினுஷன் பத்மராஜா(Thinushan Pathmarajah) தெரிவுசெய்யப்பட்டார். அத்துடன் சிறந்த விளையாட்டுச் செயல்திறனுக்கான(Best Achievement) விருது 2 போட்டிகளில் 50 ஓட்டங்கள் மற்றும் 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய Blue Birds அணியை சேர்ந்த ராஜ் மரியதாஸ்(Dhanarajah Mariadas) அவர்களுக்கு வழங்கப்பட்டது. மற்றுமொரு சிறப்பம்சமாக Inuvil Boys அணிக்கு இந்தவருடத்தில் சிறந்த முறையில் போட்டிகளை நடாத்தி முடித்தமைக்காக ஒரு சிறப்புப்பரிசும் வழங்கப்பட்டது.
இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
1.ஜெயகாந்த் முருகன்(Jeyakanth Murugan) of NCC – 50* ஓட்டங்கள் Vs Blue Birds CC
2.ஜினோஷன் நாகேந்திரன்(Jinoshan Nagenthiran) of Black Cats CC – 49* ஓட்டங்கள் Vs Toronto Blues CC
3.தாயூரன் செல்வராசா(Thayuran Selvarasa) of Youngstars CC – 44 ஓட்டங்கள் Vs B-Town Boys CC
4.பிரதீப் வரதராஜா(Pradeep varatharaja) of Black Cats CC – 43* ஓட்டங்கள் Vs Cougars CC
5.நிதுசனன் சிவகுமார்(Nithushanan Sivakumar) of NCC – 43 ஓட்டங்கள் Vs Blue Birds CC
6.பிரஷாந்த் சந்திரன்(Prashanth Chandiran) of GPS CC – 41 ஓட்டங்கள் Vs B-Town Boys CC
7.ரகு ஞானசௌந்தரநாயகம்(Ragu Gnanasountharanayakam) of Youngstars CC – 40* ஓட்டங்கள் Vs Eelam Kings CC
சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
1.ராஜ் மரியதாஸ்(Dhanarajah Mariadas) of Blue Birds CC – 6 ஆட்டமிழப்புக்கள் Vs NCC (3-1-6-6)
2.மதி நாதன்(Mathivathanan Sithamparanathan) of Toronto Blues CC – 5 ஆட்டமிழப்புக்கள் Vs Atlas CC (3-0-17-5)
சிறந்த பிடியெடுப்புக்கள்(BEST CATCHES)
1.சிந்துகண் சண்முகலிங்கம்(Sinthughan Shanmugalingam) of Trimountain CC Vs United CC
2.அரவிந்தன் suntharalingam(Aravinthan Suntharalingam) of Youngstars CC Vs B-Town Boys CC
மேலதிக விபரங்களுக்கு: www.mtcl.info
Facebook: https://wwwfacebook.com/mtcl.cricket
Twitter: https://twitter.com/mtclcricket
Instagram: https://www.instagram.com/mtclcricket/