ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படும் MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடரின் ஐந்தாவது வார நிறைவில் Atlas துடுப்பாட்டக் கழகம், அணிகள் தரவரிசையில் முதலாம் இடத்திற்கு முன்னேறியது
மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால மென்பந்து போட்டித்தொடரின் ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் சிறப்புமிக்கதும், பாரம்பரியதுமான MTCL Super League Challenge Trophy போட்டித்தொடரின் ஐந்தாவது வாரச்சுற்றுப்போட்டிகள் கடந்த 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (July 23rd) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(IDEAL DEVELOPMENT PARK) மைதானத்தில் இடம்பெற்றது. இந்த வாரப்போட்டிகளை MTCL அமைப்பினர் பொறுப்பேற்று நடத்தினர். இந்த வாரப்போட்டிகள் உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு உரிய நேரத்தில் முடிக்கப்பட்டது. போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க உதவிய அனைவருக்கும் MTCL அமைப்பினர் தமது நன்றிகளை தெரிவிக்கின்றனர்.
MTCL Super League Challenge Trophy போட்டித்தொடரின் நான்காவது வார நிறைவில் அதிக ஓட்டங்களை பெற்று முன்னிலையில் இருந்த வீரரான BNS துடுப்பாட்ட அணியை சேர்ந்த நிஷாந்தன் இலங்கேஸ்வரன்(Nisanthan Ilangeswaran) அவர்களுக்கு செம்மஞ்சள் நிறத்(Orange Cap) தொப்பி வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், அதிக ஆட்டமிழப்புக்களை எடுத்து, தொடர்ந்து நான்காவது வாரம் நிறைவிலும் முன்னிலையில் இருந்த வீரரான GPS துடுப்பாட்ட அணியை சேர்ந்த ஜூதர்ஷன் பரன்சோதி(Jutharsan Paransothy) அவர்கள் ஊதா நிறத்(Purple Cap)தொப்பியை தொடர்ந்து தன்வசம் வைத்துக்கொண்டுள்ளமை இந்த வார சிறப்பம்சங்களில் ஒன்றாகும். சென்ற வார நிறைவில் அணிகள் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியது Atlas துடுப்பாட்ட அணி. Atlas துடுப்பாட்ட அணி சிறந்த வளர்ந்துவரும் இளம் வீரர்களைக் கொண்ட அணியாகும். Atlas அணியினர் தாம் விளையாடிய 13 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றதோடு ஒரு போட்டியில் சமநிலை பெறுபேறு பெற்றதோடு 4 போட்டிகளில் தோல்வியடைந்து 17 புள்ளிகளைப் பெற்று சிறந்த சராசரியுடன் முதலாம் இடத்திற்கு முன்னேறினார்கள். அவ்வணியின் வெற்றிகளுக்கு பெரும்துணையாக இருந்த வீரர்களில் ஒருவர் ஜதுர்ஷன் சந்நிதானந்தன்(Jathurshan Sanininathan) ஆவார். இவ்வருடம் MVP கேடயத்தை கைப்பற்றும் வீரர்களில் இவரும் ஒருவராக உள்ளமை இவரின் அதீத திறமையை வெளிக்காட்டும் விடயமாகும்.
இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
1.ஜதுர்ஷன் சந்நிதானந்தன்(Jathurshan Sanininathan) of Atlas CC – 64 ஓட்டங்கள் Vs Inuvil Boyz Toronto CC
2.ஷங்கர் கோபாலசுந்தரம்(Shankar Gopalasuntharam) of SaugaBoyz CC – 44 ஓட்டங்கள் Vs BlueBirds SC
3.குகதீபன் சதானந்தனேசன்(Kugatheepan Sathananthanesan) of BlueBirds SC – 41 ஓட்டங்கள் Vs SaugaBoyz CC
4.மது சங்க(Madu Shanka) of Atlas CC – 40 ஓட்டங்கள் Vs Inuvil Boyz Toronto CC
சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
1.ஜதுர்ஷன் ராஜேந்திரன்(Jathursan Rajendran) of Atlas CC – 5 ஆட்டமிழப்புக்கள் Vs Toronto Blues CC(3-0-18-5)
2.ரஞ்சித் ஸ்ரீதரன்(Ranjith Sritharan) of GPS CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Atlas CC(3-0-7-4)
3.வினோத் சண்முகலிங்கம்(Vinoth Lingam) of BlueBirds SC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Western CC(3-1-10-4)
4.ஆனந்த் மணிமாறன்(Ananth Manimaran) of Atlas CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Inuvil Boyz Toronto CC(3-0-12-4)
5.ஜினோஷன் நாகேந்திரன்(Jinoshan Nagenthiran) of Sauga Boyz CC- 4 ஆட்டமிழப்புக்கள் Vs B-Town Boyz CC(3-0-19-4)
6.தர்ஷிகன் கனகசபாபதி(Tharsikan Kanagasapapathy) of Inuvil Boys CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs BlueBirds SC(3-0-20-4)
7.அஜித் கௌரிபாலன்(Ajith Gowripalan) of B-Town Boyz CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Sauga Boyz CC(3-0-30-4)
சிறந்த பிடியெடுப்புக்கள்(BEST CATCHES)
1.நிலேஷ்(Neelesh N) of Inuvil Boyz Toronto CC Vs B-Town Boyz CC
2.அருண் பரம்சோதி(Arun Paramsothy) of NCC Vs Inuvil Boyz CC
3.காலேஸ்வரன் மகேஸ்வரன்(Kaleswaran Maheswaran) of Sauga Boyz CC Vs GPS CC
4.செந்தூரன் தேவராசா(Senthuran Thevarasa) of NCC Vs Sauga Boyz CC
5.கார்த்திக் மணிமாறன்(Karthik Manimaran) of Atlas CC Vs Toronto Blues CC
6.திலீபன்(Thileepan) of Inuvil Boyz Toronto CC Vs B-Town Boyz CC
7.ஜதுர்ஷன் சந்நிதானந்தன்(Jathurshan Sanininathan) of Atlas CC Vs GPS CC
8.அருண் பாலா(Arun Bala) of GPS CC Vs Western CC
9.லோரன்ஸ் ஸ்ரீகாந்தன்(Lorans Srikanthan) of GPS CC Vs Atlas CC
10.மிராஜ் தேவானந்தன்(Mirajh Devanandan) of Sauga Boyz CC Vs NCC
11.ஷங்கர் கோபாலசுந்தரம்(Shankar Gopalasuntharam) of SaugaBoyz CC Vs B-Town Boyz CC
12.நிரஞ்சன் பஞ்சலிங்கம்(Niranjan Panchalingam) of GPS CC Vs Atlas CC
மேலதிக தொடர்புகளுக்கு www.mtcl.info