(MTCL) அமைப்பினரால் நடாத்தப்பட்ட மண்வாசனை அமைப்புக்கு நிதியுதவி வழங்கும் தொண்டு(Charity) துடுப்பாட்டப் போட்டிகள்: வெற்றிக்கேடயத்தை அட்லஸ் அணி கைப்பற்றியது

மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பினரால் நடாத்தப்பட்ட மண்வாசனை அமைப்புக்கு நிதியுதவி வழங்கும் தொண்டு(Charity) துடுப்பாட்டப் போட்டிகள்: வெற்றிக்கேடயத்தை அட்லஸ் அணி கைப்பற்றியது

மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பு, தனது 23 வருடகால வரலாற்றில் பலவகையான நன்கொடைகளை பல்வேறுப்பட்ட தொண்டுநிறுவனங்களுக்கு வழங்கிவந்துள்ளமை நாம் யாவரும் அறிந்த விடயமாகும். அந்த வகையில் மண்வாசனை வேர்களுக்கான walkathon நிகழ்ச்சிக்கு நிதியுதவி வழங்கும் நோக்கில் நடாத்தப்பட்ட தொண்டுப்போட்டிகள் கடந்த 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (September 24th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் இடம்பெற்றது.

                                   

கனடியத் தமிழர் தேசிய அவையின் மண்வாசனைத் திட்டம் என்பது 2010 ஆம் ஆண்டிலிருந்து தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு வாழ்வாதாரம், மருத்துவம், கல்வி, சுயதொழில், வேலைவாய்ப்பு, சிறியோர் – முதியோர் காப்பகங்களுக்கான உதவி, இயற்கை அனர்த்த உதவி என்று பல வகையில் கனடாவாழ் ஈழத் தமிழ் உறவுகளின் பங்களிப்புடன் செயலாற்றி வருகிறது. அத்தொண்டு நிறுவனத்துக்கு நிதியுதவி வழங்கும் நோக்கில் MTCL அமைப்பின் சார்பாக இத்தொடரை நடாத்தியதை எண்ணி நாம் பெருமையும் மனமகிழ்ச்சியும் அடைகின்றோம்.

                    

இந்நிதியுதவி வழங்கும் தொடரில் கலந்து கொண்ட எமது அமைப்பைச் சேர்ந்த அனைத்து அணியினருக்கும் எமது நன்றிகளை நாம் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் இத்தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற Atlas CC துடுப்பாட்ட அணியினருக்கு வெற்றிக்(Winners)கேடயம் வழங்கப்பட்டதுடன், இரண்டாம் இடம் வந்த Mersal CC துடுப்பாட்ட அணியினருக்கு இரண்டாம்(Runners-Up)இடக்கேடயமும் வழங்கப்பட்டமை விசேட அம்சங்களில் சிலவாகும். மேலும் கேடயங்களை அனுசரணை செய்த Yaal Awards நிறுவனத்திற்க்கும் எமது நன்றிகளை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறோம். அதுமட்டுமல்லாது நாம் சேகரித்த நிதியுதவியை அன்றைய தினமே அனைத்து அணிவீரர்கள் முன்னிலையில் மண்வாசனை அமைப்பிடம் கையளித்தமை நாம் அனைவரும் பெருமைப்படவேண்டிய விடயமாகும்.

சிறந்த பெறுபேறுகள்(BEST PERFORMANCES)
1.மனோராஜ் தர்மராஜா(Manoraj Tharmarajah) of Mersal CC – 70(N.O) ஓட்டங்கள் VS 7 Chargers CC
2.லக்ஷ்மன் ஜோசப்(Laxman Joseph) of Team-X CC – 67(N.O) ஓட்டங்கள் VS NCC
3.ஜதுர்ஷன் சந்நிதானந்தன்(Jathurshan Sanininathan) of Atlas CC – 66 ஓட்டங்கள் VS Team-X CC
4.செந்தூரன் தேவராஜா(Senthuran Thevarasa) of NCC – 65 ஓட்டங்கள் VS GPS CC
5.கிறிஸ்டி இலங்கேஸ்வரன்(Christy Ilangeswaran) of Mersal CC- 59(N.O) ஓட்டங்கள் VS 7 Chargers CC
6.ஆனந்த் மணிமாறன்(Ananth Manimaran) of Atlas CC – 52(N.O) ஓட்டங்கள் VS Mersal CC