மிகப்பிரம்மாண்டமாக நடாத்தப்பட்ட JJ TEAMனால் அனுசரணை செய்யப்படும் MTCL அமைப்பின் சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடர்: வெற்றிக்கேடயத்தை முதல் முறையாக கைப்பற்றியது சாகாபோய்ஸ்(SaugaBoyz CC) துடுப்பாட்ட அணி.

மிகப்பிரம்மாண்டமாக நடாத்தப்பட்ட JJ TEAM னால் அனுசரணை செய்யப்படும் MTCL அமைப்பின் சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடர்: வெற்றிக்கேடயத்தை முதல் முறையாக கைப்பற்றியது சாகாபோய்ஸ்(SaugaBoyz CC) துடுப்பாட்ட அணி.

மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால மென்பந்து போட்டித்தொடரில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்ததும், ஜெய்சுரேஷ் ஜெகநாத(Jeysuresh Jeganthan)னின் JJ TEAMனால் அனுசரணை செய்யப்படுவதுமான MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடரின் PLAYOFF போட்டிகள் கடந்த சனி மற்றும் ஞாயிறு(September 2nd & 3rd) ஆகிய இரு தினங்களில் ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் இடம்பெற்றது. மொத்தமாக 15 அணிகள் இக்கேடயத்தை கைப்பற்றுவதற்காக களத்தில் இறங்கின. இவற்றுள் முதல் எட்டு இடங்களை பிடித்த அணிகள் PLAYOFFஇல் விளையாட தகுதி பெற்றன. இவ்வெட்டு அணிகளும் தரவரிசையின் அடிப்படையில் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, அவற்றுக்கிடையில் போட்டிகள் நடாத்தப்பட்டு இருகுழுக்களிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப்போட்டிகளுக்கு நுழைவதோடு, அரையிறுதிப்போட்டிகளின் வெற்றியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதுடன், இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணி ஜெய்சுரேஷ் ஜெகநாத(Jeysuresh Jeganthan)னின் JJ TEAMனால் அனுசரணை செய்யப்படும் MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடரை கைப்பற்றும் வண்ணம் இத்தொடர் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இவ்வருட MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடரின் அரையுறுதிப்போட்டிகளுக்கு கல்வியன்காடு GPS துடுப்பாட்ட அணி, Atlas துடுப்பாட்ட அணி, Youngstars துடுப்பாட்ட அணி, மற்றும் SaugaBoyz துடுப்பாட்ட அணி ஆகிய நான்கு அணிகள் தகுதிபெற்றதுடன் Youngstars துடுப்பாட்ட அணிக்கும், SaugaBoyz துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய SaugaBoyz துடுப்பாட்ட அணியும், Atlas துடுப்பாட்ட அணிக்கும், கல்வியன்காடு GPS துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய Atlas துடுப்பாட்ட அணியும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இறுதிப்போட்டியானது MTCL KVM TVயில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதுடன், சமூக வலைத்தளங்களில் போட்டி நிலவரங்கள் உடனுக்குடன் பதிவேற்றமும் செய்யப்பட்டது. எனினும் சீரற்ற காலநிலை காரணமாக போட்டியானது இடையில் நிறுத்தப்பட்டமையுடன், செப்டெம்பர் 17ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்தவகையில் கடந்த ஞாயிற்றுகிழமை முடிவடைந்த போட்டியில் SaugaBoyz CC அணியானது அமோக வெற்றி பெற்று சுப்பர் லீக் சவால்கிண்ணத்தை தமதாக்கிக்கொண்டனர். வெற்றிக்கேடயத்தை கைப்பற்றிய SaugaBoyz CC அணிக்கும் இரண்டாம் இடம் வந்த Atlas CC அணிக்கும் MTCL அமைப்பினர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.

மேலதிக தொடர்புகளுக்கு www.mtcl.info