சீனன் நினைவகச் சுற்றுக்கிண்ணத் தொடர்: கூகர்ஸ் துடுப்பாட்ட அணி, இவ்வருடத்தின் நான்காவது சுற்றுக்கிண்ண தொடரைக் கைப்பற்றியதுடன், இவருடத்தின் மிகச்சிறந்த அணி என்பதை மீண்டும் நிரூபித்தனர்.
சீனன் அவர்களின் நினைவாக மூன்றாவது ஆண்டாக கடந்த 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை(September 10th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் நடாத்தப்பட்ட சீனன் நினைவகச் சுற்றுக்கிண்ணத்(3rd Annual Seenan Memorial Challenge Trophy)தொடரை MTCL அமைப்பினரும், சீனன் அவர்களின் குடும்பத்தினரும் பொறுப்பேற்று சிறந்த முறையில் நடாத்தி முடித்தனர். இச்சுற்றுத்தொடரின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக அனைத்து அணி வீரர்களுக்கும் மதியபோசனம் சீனன் அவர்களின் குடும்பத்தினரால் வழங்கப்பட்டமையும் இங்கு பாராட்டப்படவேண்டிய விடயமாகும்.
மூன்றாவது சீனன் நினைவகச் சுற்றுக்கிண்ணத்(3rd Annual Seenan Memorial Challenge Trophy)தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு GPS CC, Cougars CC, Atlas A CC மற்றும் Toronto Blues CC ஆகிய நான்கு அணிகள் தகுதிபெற்றதுடன்GPS CC அணிக்கும் Atlas A CC அணிக்கும் இடையிலான போட்டியில் Atlas A CC அணியும், Toronto Blues CC அணிக்கும் Cougars CC அணிக்கும் இடையிலான போட்டியில் Cougars CC அணியும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. Cougars CC அணியானது கடந்த மூன்று வருடங்களாக MTCL அமைப்பின் மிகச்சிறந்த அணிகளில் ஒன்றாக வலம்வருவதோடு, இந்த வருடம் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலாமிட அணி என்ற பெருமையைப் பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும், Atlas A CC அணியினர் இவ்வருடத்தில் விளையாடும் முதலாவது சுற்றுக்கிண்ண இறுதிப்போட்டி இதுவாகும். இறுதிப்போட்டியானது சமூக வலைத்தளங்களிலும், KVM தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டமை அனைவரது பாராட்டுக்களை பெற்றதுடன் நூற்றுக்கணக்கான ரசிகர்களும் பார்த்து மகிழ்ந்தனர்.
இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Atlas A CC அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Atlas A CC அணி தமது 12 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் Atlas A CC அணியை சேர்ந்த அஞ்சலோ(Angelo) 16 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் Cougars CC அணியை சேர்ந்த கபிலாஷ் அழகையா(kapilash Alakaiah) 3 ஓவர்களில் 12 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுக்களைக் கைப்பெற்றினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Cougars CC அணி 9.5 ஓவர்கள் நிறைவில் ஐந்து விக்கெட்டுக்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கான 61 ஓட்டங்களைப் பெற்று ஐந்து விக்கெட்டுக்களால் வெற்றியை தமதாக்கிக் கொண்டனர். துடுப்பாட்டத்தில் Cougars CC அணியை சேர்ந்த பரன்தாமன் செல்வரத்தினம்(Paranthaman selvaratnam) ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் Atlas A CC அணியை சேர்ந்த ஜஸ்ப்ரீட்(Jashpreet) 3 ஓவர்களில் 18 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டத்தில் தனது பங்களிப்பை செய்த Cougars CC அணியை சேர்ந்த பரன்தாமன் செல்வரத்தினம்(Paranthaman selvaratnam) தெரிவுசெய்யப்பட்டார். வெற்றிக்கேடயத்தை கைப்பற்றிய Cougars CC அணிக்கும் இரண்டாம் இடம் வந்த Atlas A CC அணிக்கும் MTCL அமைப்பினர் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.
இத்தொடரின் சிறந்த துடுப்பாட்டவீரராக நான்கு போட்டிகளில் மொத்தமாக 78 ஓட்டங்களைப் பெற்ற Atlas A CC அணியை சேர்ந்த லட்சுமன்(Laxman) தெரிவுசெய்யப்பட்டதுடன் சிறந்த பந்துவீச்சாளராக நான்கு போட்டிகளில் 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய Atlas A CC அணியை சேர்ந்த ஜஸ்ப்ரீட்(Jashpreet) தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக மூன்று போட்டிகளில் மொத்தமாக 68 ஓட்டங்களையும், 10 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய GPS CC அணியை சேர்ந்த லவநீதன்(Lavaneethan) தெரிவுசெய்யப்பட்டார்.
இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
1.ஆனந்த் மணிமாறன்(Ananth Manimaran) of Atlas CC – 38(N.O) ஓட்டங்கள் VS Inuvil Boyz Toronto CC
3.குகதீபன் சதானந்தனேசன்(Kugatheepan Sathananthanesan) of Blue Birds SC – 34(N.O) ஓட்டங்கள் VS NCC
2.லட்சுமன்(Laxman) of Atlas-A CC – 34 ஓட்டங்கள் VS GPS CC
சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
1.ஆனந்த் மணிமாறன்(Ananth Manimaran) of Atlas CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS Inuvil Boys Toronto CC(3-0-07-5)
2.லவநீதன்(Lavaneethan) of GPS CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS Inuvil Boyz CC(3-0-08-5)
சிறந்த பிடியெடுப்புக்கள்(BEST CATCHES)
1.லக்சன் ஜெகதீசன்(Laxshan Jegatheesan) of Atlas-A CC VS Cougars CC
2.கோமேஷ் அன்னலிங்கம்(Komeswaran Annalingam) of SaugaBoyz CC VS B-Town Boyz CC
மேலதிக தொடர்புகளுக்கு www.mtcl.info