iConnect Mortgages MTCL 23rd Annual Awards Night – 2017

இந்நிகழ்வின் பெயர்(Title Sponsor) அனுசரணையாளராக iConnect Mortgages நிறுவனம் விழங்குவதோடு, Life100 Insurance Company இந்நிகழ்ச்சிக்கு பிரதான(Main Sponsor)அனுசரணை வழங்குகின்றது. மேலும் ஒலி ஒளிப்பதிவு(Exclusive Audio Visual Partner)அனுசரணையாளராக Untouchable Sound Crew விழங்குகின்றது

2,459

மார்க்கம் ரொறோண்டோ கிரிக்கெட் லீக்(Markham Toronto Cricket League)அமைப்பின் 23வது வருட மென்பந்து துடுப்பாட்ட போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்வு வரும் சனிக்கிழமை(November 11th) அன்று சாண்டினி கிரான்ட்(Chandni Grand Banquet Hall) மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது

மார்க்கம் ரொறோண்டோ கிரிக்கெட் லீக்(Markham Toronto Cricket League)கின் 23வது வருட மென்பந்து துடுப்பாட்ட போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்வு வரும் சனிக்கிழமை(November 11th) மாலை ஆறு மணிக்கு சாண்டினி கிரான்ட்(Chandni Grand Banquet Hall)மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த வருடத்தில் நடைபெறவுள்ள மிகவும் பிரம்மாண்டமான துடுப்பாட்ட போட்டிகளின் பரிசளிப்பு(Cricket Awards Night) நிகழ்வு இது என்பதை நாம் உங்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம். MTCL அமைப்பானது ஒவ்வொரு வருடமும் தமது லீக் சுற்றுப்போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடும் வீரர்களைக் கௌரவப்படுத்தி அவர்களுக்கு கேடயங்கள் மற்றும் பரிசில்கள் வழங்கிவருகின்றமை நாம் யாவரும் அறிந்த விடயமாகும். இவ்வருட நிகழ்வானது பல ஆச்சரியங்களையும், விசேட அம்சங்களையும் உள்ளடக்கியதாக அமையப்போகின்றமை மேலும் சிறப்புமிக்க விடயமாகும்.

இந்நிகழ்வின் பெயர்(Title Sponsor) அனுசரணையாளராக iConnect Mortgages நிறுவனம் விழங்குவதோடு, Life100 Insurance Company இந்நிகழ்ச்சிக்கு பிரதான(Main Sponsor)அனுசரணை வழங்குகின்றது. மேலும் ஒலி ஒளிப்பதிவு(Exclusive Audio Visual Partner)அனுசரணையாளராக Untouchable Sound Crew விழங்குகின்றது. அத்தோடு இணை(Co-Sponsor)அனுசரணையாளர்களாக Team Jay Realtors, Mortgage Agent Ragu B மற்றும் ToronTronics Circuit Technology Inc ஆகியோர் திகழ்கின்றமை இங்கு குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும். இந்நிகழ்வு சிறப்புற நடைபெற உதவும் அனைத்து அனுசரணையாளர்களுக்கும், நலன்விரும்பிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இந்நிகழ்ச்சியானது சமூகவலைத்தளங்களில் நேரடிப்பதிவேற்றம் செய்யப்படுவதோடு, KVM தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளமை இங்கு தெரிவிக்கவேண்டியவிடயமாகும். இந்நிகழ்வை கண்டு மகிழ அனைத்து MTCL வீரர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் அன்போடு வரவேற்கின்றோம்.

Comments
Loading...