JJ REAL TEAM ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படும் MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடரின் ஐந்தாவது வார நிலவரம்

1,544

JJ REAL TEAM ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் மதிப்புமிக்கதுமான MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடரின் ஐந்தாவது வார நிலவரம்

மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால மென்பந்து போட்டித்தொடரின் JJ REAL TEAM ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் மதிப்புமிக்கதுமான MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடரின் ஐந்தாவது வாரச்சுற்றுப்போட்டிகள் கடந்த 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (June 30th) அன்று MTCL மைதானத்தில் இடம்பெற்றது. இந்த வாரப்போட்டிகளை Knights துடுப்பாட்ட அணியும், Inuvil Boys துடுப்பாட்ட அணியும் பொறுப்பேற்று சிறந்த முறையில் நடாத்தி முடித்தனர். இந்த வாரப்போட்டிகள் உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் நேர அட்டவணையை கடைப்பிடித்து உரிய நேரத்தில் முடிக்கப்பட்டது. போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க உதவிய இரு அணியினருக்கும் MTCL அமைப்பினர் தமது நன்றிகளை தெரிவிக்கின்றனர்.

MTCL Super League Challenge Trophy போட்டித்தொடரின் நான்காவது வார நிறைவில் தொடர்ந்து நான்கு வாரங்களாக அதிக ஓட்டங்களைப் பெற்று முன்னிலையில் இருக்கும் வீரரான NCC துடுப்பாட்ட அணியை சேர்ந்த ஜெயகாந்த் முருகன்(Jeyakanth Murugan) அவர்கள் செம்மஞ்சள் நிறத்(Orange Cap) தொப்பியைத் தன்வசம் தக்கவைத்துக்கொண்டதுடன், நான்கு வாரங்கள் நிறைவில் அதிக ஆட்டமிழப்புக்களை எடுத்து Youngstars CC அணியை சேர்ந்த நிலக்சன் சிவநாதன்(Nilaksan Sivanathan) முதலாமிடத்திக்கு முன்னேறியதுடன் ஊதா நிறத்(Purple Cap)தொப்பியை தன்வசமாக்கி கொண்டமையும் இந்த வார சிறப்பம்சங்களில் சிலவாகும்.

இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
1.சிவசிரோன் சதானந்தன்(Sivasiron Sathananthan) of Youngstars CC – 79 ஓட்டங்கள்(N.O) vs Blackcats CC
2.ஜினோஷன் நாகேந்திரன்(Jinoshan Nagenthiran) of Blackcats CC – 63 ஓட்டங்கள் vs Rockets CC
3.லஹீஷன் சத்தியநாதன்(Laheesan Saththiyanathan) of Inuvil Boys CC – 58 ஓட்டங்கள்(N.O) vs Sauga Boys CC
4.விதுஷன் அழகையா(Vithusan Alakaiah) of Cougars CC – 55 ஓட்டங்கள் vs Toronto Blues CC
5.பிரசன்னா தவகுலரத்னம்(Prasanna kularatnam) of Eelam Kings CC – 52(N.O) ஓட்டங்கள் vs Sauga Boys CC

சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
1.நேசன் அமிர்தலிங்கம்(Nesan Amirthalingam) of Toronto Blues CC – 6 ஆட்டமிழப்புக்கள் Vs Rockets CC(3-0-33-6)
2.ரகு நாயகம்(Ragu Gnanasountharanayakam) of Youngstars CC – 5 ஆட்டமிழப்புக்கள் vs B-Town Boys CC(3-0-21-5)

மேலதிக தொடர்புகளுக்கு www.mtcl.info
Facebook: https://wwwfacebook.com/mtcl.cricket

Comments
Loading...