JJ REAL TEAM ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படும் MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடரின் ஏழாவது வார நிலவரம்

2,311

JJ REAL TEAM ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் மதிப்புமிக்கதுமான MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடரின் ஏழாவது வார நிலவரம்

மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால மென்பந்து போட்டித்தொடரின் JJ REAL TEAM ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் மதிப்புமிக்கதுமான MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடரின் ஏழாவது வாரச்சுற்றுப்போட்டிகள் கடந்த 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (July 14th) அன்று MTCL மைதானத்தில் இடம்பெற்றது. இந்த வாரப்போட்டிகளை Cougars CC துடுப்பாட்ட அணியும், Youngstars CC துடுப்பாட்ட அணியும் பொறுப்பேற்று சிறந்த முறையில் நடாத்தி முடித்தனர். இந்த வாரப்போட்டிகள் உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் நேர அட்டவணையை கடைப்பிடித்து உரிய நேரத்தில் முடிக்கப்பட்டது. போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க உதவிய இரு அணியினருக்கும் MTCL அமைப்பினர் தமது நன்றிகளை தெரிவிக்கின்றனர். மற்றுமொரு சிறம்பம்சமாக Cougars அணியினர் அனைத்து வீரர்களுக்கும் ஆட்டுக்கறி அடங்கலாக மதியபோசனம் வழங்கியமையும் இங்கு குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும்.

MTCL Super League Challenge Trophy போட்டித்தொடரின் ஆறாவது வார நிறைவில் Cougars CC அணியை சேர்ந்த விதுஷன் அழகையா(Vithusan Alakaiah) தொடர்ந்தும் அதிக ஓட்டங்களைப் பெற்று முன்னிலை வகிப்பதுடன் செம்மஞ்சள் நிறத்(Orange Cap) தொப்பியை தன்வசம் வைத்துக்கொண்டது மட்டுமல்லாது ஆறு வாரங்கள் நிறைவில் தொடர்ந்தும் அதிக ஆட்டமிழப்புக்களை எடுத்து Youngstars CC அணியை சேர்ந்த நிலக்சன் சிவநாதன்(Nilaksan Sivanathan) இந்த வாரமும் முதலாம் இடத்தில் இருந்ததோடு ஊதா நிறத்(Purple Cap)தொப்பியை தன்வசம் தக்கவைத்துக் கொண்டமையும் இந்த வார சிறப்பம்சங்களில் சிலவாகும்.

இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
1.நந்தன் கந்தையா(Nandan Kandiyah) of Rockets CC – 74 ஓட்டங்கள் vs Eelam Kings CC
2.நிவேர்தன் சாந்தகுமாரன்(Niverthan Shanthakumaran) of United CC – 68 ஓட்டங்கள் vs Sauga Boys CC
3.நிலக்சன் கிருபாகரன்(Nilakshan Kirupakaran ) of Atlas CC – 66 ஓட்டங்கள் vs GPS CC
4.தனராஜ் மரியதாஸ்(Dhanarajah Mariadas) of BlueBirds CC – 62 ஓட்டங்கள் vs B-Town Boys CC
5.நிஷாந்தன் இலங்கேஸ்வரன்(Nisanthan Ilangeswaran) of Toronto Blues CC – 61 ஓட்டங்கள் vs B-Town Boys CC

சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
1.அர்ஜுன் தெய்வேந்திரன்(Arjun Theyventhiran) of United CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Eelam Kings CC(3-0-3-4)
2.சனா பத்மநாதன்(Sana Pathmanathan) of B-Town Boys CC – 4 ஆட்டமிழப்புக்கள் vs GPS CC(2.2-0-7-4)
3.மிதுலன் பஞ்சலிங்கம்(Mithalan Panchalingam) of GPS CC – 4 ஆட்டமிழப்புக்கள் vs Atlas CC(2-0-11-4)
4.மதி சிதம்பரநாதன்(Mathy Sithamparanathan) of Toronto Blues CC – 4 ஆட்டமிழப்புக்கள் vs B-Town Boys CC(3-0-14-4)
5.சுஜீவன் சிங்கம்(Sujee Singam) of BlueBirds CC – 4 ஆட்டமிழப்புக்கள் vs Atlas CC(3-0-18-4)
6.சசி சண்முகராஜா(Sasi Shanmugarajah) of GPS CC – 4 ஆட்டமிழப்புக்கள் vs B-Town Boys CC(3-0-23-4)
7.தர்ஷிகன் சிவநாதன்(Tharsigan Sivanathan) of Sunsea CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs United CC(3-0-27-4)
8.லட்சுமண் கிருபாகரன்(Luxman Kirupakaran ) of Atlas CC – 4 ஆட்டமிழப்புக்கள் vs GPS CC(3-0-34-4)

மேலதிக தொடர்புகளுக்கு www.mtcl.info
Facebook: https://wwwfacebook.com/mtcl.cricket

Comments
Loading...