JJ REAL TEAM ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் மதிப்புமிக்கதுமான MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடர் கடந்த வாரம் ஆரம்பமாகியது
மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பானது 1994ம் ஆண்டு தொடங்கப்பட்டதோடு இந்த வருடம் தமது 25வது வருடத்தில் கால் பதித்துள்ளனர். 25வது ஆண்டின் சுப்பர் லீக் சவால் கிண்ணப்போட்டிகள் JJ REAL TEAM ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுகின்றமை மிகவும் சிறப்புக்குரிய விடையமாகும். ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan) அவர்கள் MTCL அமைப்பின் பழமைவாய்ந்த அணியான NCC அணியில் விளையாடுவதோடு கடந்த சில வருடங்களாக சுப்பர் லீக் போட்டிகளுக்கு பிரதான அனுசரணை வழங்கி வருகின்றமை இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும். MTCL அமைப்பின் சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடரானது மிகவும் மதிப்புமிக்கதும், பாரம்பரியதுமானதொரு தொடராகும். இத்தொடரானது கடந்த 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை(May 26th) MTCL மைதானத்தில் தொடங்கியது. இவ்வருடம் மொத்தமாக 18 அணிகள் இக்கேடயத்தை கைப்பற்றுவதற்காக போட்டிக்களத்தில்
இறங்கியுள்ளன. அவ்வணிகளின் பெயர் விபரங்கள் கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.
Atlas துடுப்பாட்ட கழகம்
Atlas-A துடுப்பாட்ட கழகம்
Bluebirds விளையாட்டு கழகம்
Blackcats துடுப்பாட்ட கழகம்
B-Town Boyz துடுப்பாட்ட கழகம்
Cougars துடுப்பாட்ட கழகம்
Eelam Kings துடுப்பாட்ட கழகம்
GPS துடுப்பாட்ட கழகம்
Inuvil Boyz துடுப்பாட்ட கழகம்
Knights துடுப்பாட்ட கழகம்
NCC துடுப்பாட்ட கழகம்
Rockets துடுப்பாட்ட கழகம்
Sauga Boyz துடுப்பாட்ட கழகம்
Sunsea துடுப்பாட்ட கழகம்
Toronto Blues துடுப்பாட்ட கழகம்
Trimountain துடுப்பாட்ட கழகம்
United துடுப்பாட்ட கழகம்
Young Stars துடுப்பாட்ட கழகம்
இந்த வாரப்போட்டிகளை United துடுப்பாட்ட அணியும், Toronto Blues துடுப்பாட்ட அணியும் பொறுப்பேற்று சிறந்த முறையில் நடாத்தி முடித்தனர். இந்த வாரப்போட்டிகள் உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் நேர அட்டவணையை கடைப்பிடித்து உரிய நேரத்தில் முடிக்கப்பட்டது. போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க உதவிய இரு அணியினருக்கும் MTCL அமைப்பினர் தமது நன்றிகளை தெரிவிக்கின்றனர்.
இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
1.ஜெயகாந்த் முருகன்(Jeyakanth Murugan) of NCC – 103 ஓட்டங்கள் vs Sauga Boys CC
2.கபிலன் சிவபாலன்(Kapilan Sivapalan) of Sauga Boys CC – 54 ஓட்டங்கள் vs NCC
3.ஜெயகாந்த் முருகன்(Jeyakanth Murugan) of NCC – 53 ஓட்டங்கள் vs B-Town Boys CC
4.மனோராஜ் தர்மராஜா(Manoraj Tharmarajah) of Atlas-A CC – 45 ஓட்டங்கள்(N.O) vs NCC
5.அல்பெஷ் வசயா(Alpesh Vasaya) of Knights CC – 42 ஓட்டங்கள் vs Inuvil Boys CC
6.ஆனந்த் மணிமாறன்(Ananth Manimaran) of Atlas CC – 40 ஓட்டங்கள்(N.O) vs Inuvil Boys CC
சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
1.சுஜீவன் சிங்கம்(Sujee Singam) of BlueBirds CC – 5 ஆட்டமிழப்புக்கள் vs Cougars CC(3-0-14-5)
2.சிவரூபன் ரத்னம்(Sivaruban Ratnam) of Blackcats CC – 4 ஆட்டமிழப்புக்கள் vs GPS CC(3-0-07-4)
3.கிருபா தம்பிரத்னம்(Kirupa Thambiratnam) of Cougars CC – 4 ஆட்டமிழப்புக்கள் vs Trimountain CC(3-0-08-4)
4.முரளிதரன் ஆறுமுகம்(Muraidaran Arumugam) of BlueBirds CC – 4 ஆட்டமிழப்புக்கள் vs Sunsea CC(3-0-09-4)
5.ஆனந்த் மணிமாறன்(Ananth Manimaran) of Atlas CC – 4 ஆட்டமிழப்புக்கள் vs Knights CC(3-0-13-4)
6.கோகுலன் சின்னையா(Kokulan Sinniyah) of Rockets CC – 4 ஆட்டமிழப்புக்கள் vs Inuvil Boys CC(3-0-20-4)
மேலதிக விபரங்களுக்கு: www.mtcl.info
Facebook:https://wwwfacebook.com/mtcl.cricket