கூகர்ஸ் துடுப்பாட்ட அணியை சேர்ந்த கபிலாஷ் தொடர்ந்து 4 பந்துகளில் 4 ஆட்டமிழப்புக்களைக் கைப்பற்றி மலிங்காவின் சாதனையைச் சமன் செய்து புதிய சாதனை

கூகர்ஸ் துடுப்பாட்ட அணியை சேர்ந்த கபிலாஷ் தொடர்ந்து 4 பந்துகளில் 4 ஆட்டமிழப்புக்களைக் கைப்பற்றி மலிங்காவின் சாதனையைச் சமன் செய்து புதிய சாதனை

3,191

கூகர்ஸ் துடுப்பாட்ட அணியை சேர்ந்த கபிலாஷ் தொடர்ந்து 4 பந்துகளில் 4 ஆட்டமிழப்புக்களைக் கைப்பற்றி மலிங்காவின் சாதனையைச் சமன் செய்து புதிய சாதனை

MTCL அமைப்பினரால் நடாத்தப்பட்ட பன்னிரண்டாவது மாறன் மென்பந்து சவால் கிண்ண நினைவகத்தொடரில் Cougars CC அணிக்கும் NCC அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் Cougars CC அணியை சேர்ந்த கபிலாஷ் அழகையா(kapilash Alakaiah) தொடர்ந்து 4 பந்துவீச்சுக்களில் 4 ஆட்டமிழப்புக்களைப் பெற்று புதிய சாதனை படைத்தார். இப்போட்டியில் 1.5 ஓவர்கள் பந்து வீசி வெறும் ஒரு ஓட்டத்தை மட்டும் கொடுத்து 5 ஆட்டமிழப்புக்களைக் கைப்பற்றியமை மேலுமொரு சிறப்பம்சமாகும். மிகக்குறுகிய காலத்தில் பெருவளர்ச்சியை கண்ட வீரர் கபிலாஷ் ஆவார். இவர் 2015ம் ஆண்டில் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக(Number One Bowler) தெரிவுசெய்யப்பட்டதோடு, 2016ம் ஆண்டில் மிகச்சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக(Number One All Rounder) தெரிவு செய்யப்பட்டமை அவரின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் விடயங்களாகும். இவ்வருடம் MVP கேடயத்தை கைப்பற்றும் வீரர்களில் இவரும் ஒருவராக உள்ளமை இவரின் அதீத திறமையை வெளிக்காட்டும் விடயமாகும். மேலும், Cougars அணி 2015ம் ஆண்டில் Super League சவால் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கும், 2016ம் ஆண்டில் முதலாம் அணி, மற்றும் Super League சவால் கிண்ணத்தை இரண்டாம் முறை கைப்பற்றுவதற்கும் பெரும்பங்காற்றிய வீரர் இவராவார். இவரின் வளர்ச்சியை கண்டு அனைவரும் ஆச்சரியப்படுவதோடு, இவர் மென்மேலும் துடுப்பாட்டத்தில் பல சாதனைகள் படைக்க MTCL அமைப்பினர் தமது வாழ்த்துக்களைத் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றனர்.

Comments
Loading...