MTCL அமைப்பினரால் சிறப்பாக நடாத்தப்பட்ட மூன்றாவது கேப்டன் இசையரசன் நினைவகத்தொடரின் வெற்றிகிண்ணத்தை தட்டிச்சென்றது கூகர்ஸ்(Cougars) துடுப்பாட்டக் கழகம்

2,542

மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால துடுப்பாட்ட போட்டிகளின் இரண்டாவது சவால் கிண்ணத்(KNOCKOUT) துடுப்பாட்டப்போட்டிகள் கடந்த 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை(June 17th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் இடம்பெற்றது. இந்த சவால் கிண்ணத்(KNOCKOUT) தொடரானது கேப்டன் இசையரசன்(In Memory of Jeyharan Tharmalingam‬)அவர்களின் நினைவாக இந்த ஆண்டு மூன்றாவது வருடமாக மிகச்சிறந்த முறையில் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இத்தொடரை ஜார்விஸ்(Jarvis Sport Club) விளையாட்டுக் கழக உறுப்பினர் மகிந்தன்(Mahinthan Tharmalingam) அவர்களும் , MTCL அமைப்பினரும் பொறுப்பேற்று சிறந்த முறையில் நடத்தி முடித்தனர்.

அமரர் கேப்டன் இசையரசன்(Jeyharan Tharmalingam) அவர்கள் தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட சிறந்த மாவீரர்களில் ஒருவராவார். அன்னார் 1996ம் ஆண்டு இடம்பெற்ற முல்லைத்தீவு தாக்குதலில் வேவுபுலியாக கடமையாற்றி தன்மக்களின் உரிமைப்போராட்டத்திற்காக வீரமரணம் அடைந்தார். அன்னாரின் நினைவுகளை சுமந்து வரும் தர்மலிங்கம் குடும்பத்தினர், MTCL அமைப்பினருடன் சேர்ந்து இத்தொடரை மூன்றாவது வருடமாக இந்த வருடம் நடாத்தியமை இங்கு குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும்.

மூன்றாவது கேப்டன் இசையரசன் நினைவகத்(3rd Annual Captain ISAIYARASAN Memorial Challenge Trophy)தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு Cougars, Blackcats, Toronto Blues மற்றும் Atlas-A ஆகிய நான்கு அணிகள் தகுதிபெற்றதுடன் Cougars அணிக்கும் Blackcats அணிக்கும் இடையிலான போட்டியில் Cougars அணியும், Toronto Blues அணிக்கும் Atlas-A அணிக்கும் இடையிலான போட்டியில் Toronto Blues அணியும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இறுதிப்போட்டியானது சமூக வலைத்தளங்களிலும், KVM தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டமை அனைவரது பாராட்டுக்களை பெற்றதுடன் பலநூற்றுக்கணக்கான ரசிகர்களும் பார்த்து மகிழ்ந்தனர்.

இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Cougars அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Cougars அணி 12 ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 91 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் Cougars அணியை சேர்ந்த பரன்தாமன் செல்வரத்தினம்(Paranthaman Selvaratnam) 28 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் Toronto Blues அணியை சேர்ந்த மதி சிதம்பரநாதன்(Mathi Sithamparanathan) 3 ஓவர்கள் பந்து வீசி 22 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய Toronto Blues அணி 11.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 73 ஓட்டங்களைப் பெற்று 18 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவினார்கள். துடுப்பாட்டத்தில் Toronto Blues அணியை கமல்ராஜ் ராதாகிருஷ்ணன்(Kamalraj Rathakrishnan) 32 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் Cougars அணியை சேர்ந்த கோபிநாத் நவரத்தினம்(Gopinathah Navarathnam) சிறந்த முறையில் பந்து வீசி 3 ஓவர்களில் வெறும் 6 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு பெரும்பங்காற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக சகல துறைகளிலும் தனது பங்களிப்பை செய்த Cougars அணியை சேர்ந்த விதுஷன் அழகையா(Vithusan Alakaiah) தெரிவுசெய்யப்பட்டார். இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற Cougars துடுப்பாட்ட அணியினருக்கு வெற்றிக்(Winners)கேடயம் வழங்கப்பட்டதுடன், இரண்டாம் இடம் வந்தToronto Blues துடுப்பாட்ட அணியினருக்கு இரண்டாம்(Runners-Up)இடக்கேடயமும் வழங்கப்பட்டமை விசேட அம்சங்களில் சிலவாகும்.

இத்தொடரின் சிறந்த துடுப்பாட்டவீரராக Toronto Blues அணியை சேர்ந்த சயந்தன் தம்பிராஜா(Sajanthan Thambirajah) தெரிவுசெய்யப்பட்டதுடன், சிறந்த பந்துவீச்சாளராக Cougars அணியை சேர்ந்த கோபிநாத் நவரத்தினம்(Gopinathah Navarathnam) தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக Cougars அணியை சேர்ந்த கபிலாஷ் அழகையா(kapilash Alakaiah) தெரிவுசெய்யப்பட்டார்.

இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Best Performances) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
1.கபிலாஷ் அழகையா(kapilash Alakaiah) of Cougars CC- 90 ஓட்டங்கள் VS Blackcats CC
2.ஜதுர்ஷன் சந்நிதானந்தன்(Jathurshan Sanininathan) of Atlas CC – 61 ஓட்டங்கள் Vs Blackcats CC 3.ரகு ஞானசௌந்தரநாயகம்(Ragu Sountharanayakam) of Youngstars CC – 55 ஓட்டங்கள் VS GPS CC

சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
1.கோபிநாத் நவரத்தினம்(Gopinathah Navarathnam) of Cougars CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS Tamil Kings CC(3-1-9-5)

சிறந்த பிடியெடுப்புக்கள்(BEST CATCHES)
1.சுகந்தன் & அகில்(Suganthan & Ahil) of Youngstars CC VS Cougars CC
2.அருள் மேகரூபன்(Arudselvan Meharuban) of Trimountain CC VS Inuvil Boyz CC
3.பிரசாந்தன் பன்னீர்ச்செல்வம்(Prasanthan Panneerchelvam) of Trimountain CC VS Inuvil Boyz CC
4.திக்கிரி விஜேரட்ன(Tikiri Wijeratne) of Atlas-A CC VS NCC
5.தினேசன் வைத்தீஸ்வரன்(Thinesan Vaitheeswaran) of Blackcats CC VS B-Town Boys CC
6.முரளி பரமானந்தம்(Murali Paramanantham) of NCC VS BlueBirds CC

மேலதிக தொடர்புகளுக்கு: www.mtcl.info                Facebook: https://wwwfacebook.com/mtcl.cricket

Comments
Loading...