MTCL-ன் 2016 கோடைகால மென்பந்து போட்டித்தொடர்- முதல் வார நிலவரம்

528




மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால மென்பந்து போட்டித்தொடரின் ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் மதிப்புமிக்கதும், பாரம்பரியதுமான MTCL Super League Challenge Trophy கேடயத்தை கைப்பற்றும் நோக்கில் 16 அணிகளும் தமது போட்டிச்சமரை நேற்றைய தினம் 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை(JUNE 05TH) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(IDEAL DEVELOPMENT PARK) மைதானத்தில் தொடங்கினர்.

நேற்றைய முதலாவது வார போட்டிகளை ஈழம் கிங்ஸ்(EELAM KINGS CC)யும், கூகர்ஸ்(COUGARS CC)யும் பொறுப்பேற்று நடத்தினர்.

சீரற்ற காலநிலை காரணமாக நேற்றைய போட்டிகள் மூன்று சுற்றுக்கள் முடிவடைந்த நிலையில் நிறுத்தப்பட்டன.

நேற்றைய தினம் பிரதான(PREMIUM GAME) போட்டியாக கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கம் (GPS CC) அணியும் இணுவில் பாய்ஸ் ரொறொன்டோ (INUVIL BOYS TORONTO CC) அணியும் மோதிக்கொண்ட போட்டி தெரிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களின் நேரடி போட்டிநிலவரங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் பார்த்து மகிழக்கூடிய சர்ந்தர்ப்பத்தையும் MTCL அமைப்பினர் ஏற்படுத்திக் கொடுத்தனர்.

இப்போட்டியில் GPS CC மிகவும் அபாரமுறையில் விளையாடி 10 விக்கெட்டுகளால் அமோக வெற்றிபெற்றனர்.

இப்போட்டியில் GPS CC அணியை சேர்ந்த ரஞ்சித் ஸ்ரீதரன்(RANJITH SRITHARAN) சிறந்த முறையில் பந்து வீசி 3 ஓவர்களில் ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக வெறும் 4 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 3 ஆட்டமிழப்புக்களை எடுத்ததுடன், துடுப்பாட்டத்தில் GPS CC அணியை சேர்ந்த பிரஷாந்த் சான்(PRASHANTH SHAN) 7 ஆறு ஓட்டங்களை விளாசியதுடன் 59 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று போட்டி நாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.

இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.

துடுப்பாட்டம்
  • பிரஷாந்த் சான் (Prashanth Shan) OF GPS CC – 59 ஓட்டங்கள் VS INUVIL BOYS TORONTO CC
  • கோபிராஜ் சிவகுருநாதன் (Kobyraj Sivagurunathan) OF WARRIORS CC- 42 ஓட்டங்கள் VS WESTERN CC
  • ஜெயகாந்த் பொன்னம்பலம் (Jayakanth Ponnampalam) OF SAUGABOYZ CC- 36 ஓட்டங்கள் VS B-TOWN BOYZ CC
  • ராஜீப்குமார் நாகராஜா (Rajeefkumar Nagarajah) OF CHOLA CC- 36 ஓட்டங்கள் VS CHEETAHS CC
பந்துவீச்சு
  • ஆனந்த் மணிமாறன் (Ananth Manimaran) OF CHEETAHS CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS BLUEBIRDS CC
  • டிகிரி (Tickery) OF ATLAS-A CC-4 ஆட்டமிழப்புக்கள் VS YOUNGSTARS CC
  • ரஞ்சித் ஸ்ரீதரன் (Ranjith Sritharan) OF GPS CC- 5 ஆட்டமிழப்புக்கள் VS INUVIL BOYS TORONTO CC
  • கோகுல் ஜீரேஷ் (Gokul Gireesh) of Toronto Blues CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS Chola CC
  • மிதுலன் பஞ்சலிங்கம் (Mithulan Panchalingam) of GPS CC – 4 ஆட்டமிழப்புக்கள் VS Western CC
சிறந்த பிடியெடுப்புக்கள்
  • சசீபன் நாகராசன் (Saseepan Nagarajan) OF CHEETAHS CC VS CHOLA CC
  • ஜெயகரன் ஜெயக்குமார் (Jeyaharan Jeyakumar) OF BNS CC VS ATLAS-A CC
  • ஜெயராஜா நீதிராஜா (Jayaraja Neethiraja) OF CHEETAHS CC VS BLUEBIRDS CC
  • கஜன் ஏரம்பமூர்த்தி (Kajan Erampamoorthy) OF ATLAS-A CC VS BNS CC
  • லோரன்ஸ் ஸ்ரீகாந்தன் (Lorans Srikanthan) OF GPS CC VS WESTERN CC
  • முரளி பரமானந்தம் (Murali Paramanantham) of BNS CC VS ATLAS-A CC

மேலதிக தொடர்புகளுக்கு: www.mtcl.info
Facebook: https://wwwfacebook.com/mtcl.cricket
Twitter: https://twitter.com/mtclcricket
Instagram: https://www.instagram.com/mtclcricket/

Comments
Loading...