மிகவும் கோலாகலமாக நிறைவேறியது மார்க்கம் டொரோண்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் 23வது ஆண்டு கோடைகால துடுப்பாட்டப்போட்டிகள்: நட்சத்திர விழா போட்டியின் வெற்றிக்கேடயத்தை மாறன் மவெரிக்ஸ்(Maaran Mavericks) அணி தட்டிச்சென்றது

மார்க்கம் டொரோண்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் 2017ம் ஆண்டின் கோடைகால துடுப்பாட்டப்போட்டிகள் நட்சத்திர வீரர்களின்(ALL-STAR GAME) போட்டிகளுடன் கடந்த 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை(September 17th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நிறைவேறியது. கடந்த நான்கு மாதங்களாக மிகைத்திறமையான 15 அணிகள் பலதரப்பட்ட சவால் கிண்ணச்சுற்றுப்போட்டிகள்(Knock-Out Games) மற்றும் லீக்(Super League Games)போட்டிகளில் தமது முழுத்திறமைகளையும் வெளிப்படுத்தியதுடன், பல புதிய அணிகளின் எழுற்சியையும் கண்ட வருடமாக இவ்வருடம் அமைந்தமை மேலுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த வருடம் புதிதாக சுரேன் சுப்பர் சிக்ஸர்ஸ் அணி சுரேன் அவர்களின் நினைவாக ஆரம்பிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்க வேண்டிய விடயமாகும். இந்த வருடம் மொத்தமாக 28 நட்சத்திர வீரர்கள் 7 பேர் கொண்ட நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு 6 ஓவர்கள் கொண்ட தொடராக இப்போட்டிகள் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கவேண்டிய விடயமாகும். இந்த நான்கு அணிகளும் எம்மோடு விளையாடி, எம்மை விட்டு இறைவனடி சென்ற வீரர்களின் நினைவாக ஆரம்பிக்கப்பட்டமை விசேட அம்சமாகும். மாறன் அவர்களின் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட மாறன் மவெரிக்ஸ்(Maaran Mavericks) அணியின் உரிமையாளராக சாம் செல்வம்(Sam Selvam)மும், நிஷான் அவர்களின் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட நிஷான் நின்ஜாஸ்(Nishan Ninjas) அணியின் உரிமையாளராக கஜன் ஏரம்பமூர்த்தி(Kajan Erampamoorthy)யும், நாகு மற்றும் நேசன் ஆகிய இருவரின் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட N&N நைத்வாக்ஸ்(N&N Nighthawks) அணியின் உரிமையாளராக டியூட்டன் பெர்னாண்டோ(Duton Fernando)வும் செயல்பட்டு வருகின்றதோடு, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சுரேன் சுப்பர் சிக்ஸர்ஸ்(Suren Super Sixers) அணியின் உரிமையாளராக தர்ஷன் ரத்னசபாபதி(Tharshan Ratnasapapathy) அவர்கள் செயற்பட்டமையும் இங்கு குறிப்பிடவேண்டிய முக்கிய அம்சமாகும்.

முதலாவதாக நடந்த மாறன் மவெரிக்ஸ்(Maaran Mavericks) அணிக்கும் நிஷான் நின்ஜாஸ்(Nishan Ninjas) அணிக்கும் இடையிலான போட்டியில் மாறன் மவெரிக்ஸ்(Maaran Mavericks) அணி வெற்றிபெற்றது. அடுத்ததாக N&N நைத்வாக்ஸ்(N&N Nighthawks)அணிக்கும் சுரேன் சுப்பர் சிக்ஸர்ஸ்(Suren Super Sixers) அணிக்கும் இடையிலான போட்டியில் சுரேன் சுப்பர் சிக்ஸர்ஸ்(Suren Super Sixers) அணி வெற்றிபெற்றது, அதனைத்தொடர்ந்து நடந்த நிஷான் நின்ஜாஸ்(Nishan Ninjas) அணிக்கும் N&N நைத்வாக்ஸ்(N&N Nighthawks)அணிக்கும் இடையிலான போட்டியில் N&N நைத்வாக்ஸ்(N&N Nighthawks)அணி வெற்றிபெற்றது. பின்பு நடந்த சுரேன் சுப்பர் சிக்ஸர்ஸ்(Suren Super Sixers) அணிக்கும் மாறன் மவெரிக்ஸ்(Maaran Mavericks) அணிக்கும் இடையிலான போட்டியில் சுரேன் சுப்பர் சிக்ஸர்ஸ்(Suren Super Sixers) அணி வெற்றிபெற்றது. பின்பு நடந்த நிஷான் நின்ஜாஸ்(Nishan Ninjas) அணிக்கும் சுரேன் சுப்பர் சிக்ஸர்ஸ்(Suren Super Sixers) அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் சுரேன் சுப்பர் சிக்ஸர்ஸ்(Suren Super Sixers) அணி வெற்றிபெற்றது. மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்ற சுரேன் சுப்பர் சிக்ஸர்ஸ்(Suren Super Sixers) அணி இறுதிப்போட்டியில் விளையாட தகுதிபெற்றது, அதேபோன்று 3 மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்த நிஷான் நின்ஜாஸ்(Nishan Ninjas) அணி இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. அடுத்ததாக இடம்பெற்ற போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் விளையாட தகுதிபெறும் என்ற நிலையில் மோதிக்கொண்ட போட்டியில் N&N நைத்வாக்ஸ்(N&N Nighthawks) அணியை வீழ்த்தி மாறன் மவெரிக்ஸ்(Maaran Mavericks) அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சுரேன் சுப்பர் சிக்ஸர்ஸ்(Suren Super Sixers) அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சுரேன் சுப்பர் சிக்ஸர்ஸ்(Suren Super Sixers) அணி தமது 6 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 40 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் சுரேன் சுப்பர் சிக்ஸர்ஸ்(Suren Super Sixers) அணியை சேர்ந்த குகதீபன் சதானந்தனேசன் (Kugatheepan Sathananthanesan) 14 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் மாறன் மவெரிக்ஸ்(Maaran Mavericks) அணியை சேர்ந்த ரகு சௌந்தரநாயகம்(Ragu Gnanasountharanayakam) 2 ஓவர்கள் பந்து வீசி 12 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பெற்றினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மாறன் மவெரிக்ஸ்(Maaran Mavericks) அணி 3 ஓவர்கள் நிறைவில் விக்கெட் எதனையும் பறிகொடுக்காது தமது வெற்றியிலக்கான 41 ஓட்டங்களை மிகச்சசுலபமாக அடைந்து வெற்றிக்கேடயத்தை தாமதக்கிக்கொண்டனர். துடுப்பாட்டத்தில் மாறன் மவெரிக்ஸ்(Maaran Mavericks) அணியை சேர்ந்த மனோராஜ் தர்மராஜா(Manoraj Tharmarajah) ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களைப் பெற்றார். போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடரின் சிறந்த சகலதுறை வீரராக(MVP)வும் மாறன் மவெரிக்ஸ்(Maaran Mavericks) அணியை சேர்ந்த ரகு சௌந்தரநாயகம்(Ragu Gnanasountharanayakam) தெரிவுசெய்யப்பட்டார்.

ஊடக அமைப்புக்களான நினைவுகள்(Ninaivukal), மற்றும் SBA Photography ஆகியோரும் வருகைதந்து மிக அருமையான விதத்தில் படங்களை எடுத்து தமது இணையவலைத்தளங்களில் பதிவேற்றி உலகிலுள்ள அனைத்து ரசிகர்களும் பார்த்துமகிழக்கூடிய சர்ந்தர்ப்பத்தை ஏற்படுத்திதந்தனர். வருகைதந்திருந்த அனைவருக்கும் அறுசுவை உணவுகளை சமைத்துத்தந்த கல்வியங்காடு GPS CC அணியினருக்கு MTCL அமைப்பினர் தமது நன்றிகளை இத்தருணத்தில் தெரிவிக்கின்றனர். இவ்வருடம் இடம்பெற்ற அனைத்து போட்டிகளுக்கும் அனுசரணை வழங்கிய அனைத்து MTCL நலன்விரும்பிகளுக்கும், போட்டிகளை சிறப்பாக நடாத்திமுடிக்க உதவிய அனைத்து நல்லுள்ளங்களும் மார்க்கம் டொரோண்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பினர் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றனர்.

அடுத்த வருடம் மேலும் பல ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் உள்ளடக்கிய வருடமாக அமையப்போகின்றமை உறுதியாகும். இவ்வருடத்தின் பரிசளிப்பு(Awards Ceremony)விழா வருகின்ற கார்த்திகை(November) மாதம் 11ம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் சான்ட்டினி(Chandni Banquet Hall)மண்டபத்தில் இடம்பெறும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம்.