MTCL அமைப்பின் சுப்பர் லீக் சவால் கிண்ணப்போட்டித்தொடரின் Play-Offs போட்டிகளுக்கு 8 அணிகள் தெரிவு
MTCL அமைப்பின் சுப்பர் லீக் சவால் கிண்ணப்போட்டித்தொடரின் Play-Off போட்டிகளுக்கு 8 அணிகள் தெரிவு
மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால மென்பந்து போட்டித்தொடரின் ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் சிறப்புமிக்கதும், பாரம்பரியதுமான MTCL Super League Challenge Trophy போட்டித்தொடரின் இறுதி வார லீக்(League) சுற்றுப்போட்டிகள் கடந்த 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (August 20th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் இடம்பெற்றது. கடந்த ஏழு வாரங்களில் மழையால் தடைப்பட்ட போட்டிகள் இந்த வாரம் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த வாரப்போட்டிகள் உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் நேர அட்டவணையை கடைப்பிடித்து உரிய நேரத்தில் முடிக்கப்பட்டது. போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க உதவிய அனைத்து அணியினருக்கும் MTCL அமைப்பினர் தமது நன்றிகளை தெரிவிக்கின்றனர்.
அனைத்து லீக் சுற்றுப்போட்டிகளும் முடிவடைந்த நிலையில் புரட்டாசி மாதம் 2ம், மற்றும் 3ம்(September 2nd and 3rd) திகதிகளில் இடம்பெறவுள்ள Play-Off சுற்றுப்போட்டிகளுக்கு எட்டு அணிகள் தெரிவாகியுள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக சுப்பர் லீக் சவால் கிண்ணத்தை வெற்றி கொண்ட Cougars துடுப்பாட்ட அணி ஒரு போட்டியிலும் தோல்வியடையாது Play-Off தொடரினுள் நுழைந்தமை அனைவரும் பாராட்டத்தக்க வேண்டிய விடயமாகும். Cougars துடுப்பாட்ட அணியுடன், Toronto Blues துடுப்பாட்ட அணி, கல்வியன்காடு GPS துடுப்பாட்ட அணி, Atlas துடுப்பாட்ட அணி, Youngstars துடுப்பாட்ட அணி, Atlas-A துடுப்பாட்ட அணி, Sauga Boyz துடுப்பாட்ட அணி, மற்றும் B-Town Boyz துடுப்பாட்ட அணி ஆகிய ஏழு அணிகளும் Play-Off போட்டிகளில் விளையாடத் தகுதிபெற்றன.
தரவரிசையின் அடிப்படையில் இவ்வெட்டு அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, அவற்றுக்கிடையில் போட்டிகள் நடாத்தப்பட்டு இருகுழுக்களிலும் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் அரையிறுதிப்போட்டிகளுக்கு நுழைவதோடு, அரையிறுதிப்போட்டிகளின் வெற்றியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதுடன், இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணி ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படும் MTCL Super League Challenge Trophyயை தமதாக்கிக்கொள்வார்கள்.
அணிகளின் தரப்படுத்தலும், குழு நிலவரங்களும் கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.
குழு A (Group A) குழு B (Group B)
Cougars CC(1) Toronto Blues CC(2)
Atlas CC(4) GPS CC(3)
Youngstars CC(5) Atlas A CC(6)
B-Town Boyz CC(8) Sauga Boyz CC(7)
இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
1.தர்ஷன் ரத்னசபாபதி(Tharshan Ratnasapapathy) of Cougars CC – 91 ஓட்டங்கள் VS Atlas-A CC
2.சயந்தன் தம்பிராஜா(Sajanthan Thambirajah) of Toronto Blues CC – 74 ஓட்டங்கள் VS Sauga Boys CC
3.பிரஷாந்த் ஷான் (Prashanth Shan) OF GPS CC – 70 ஓட்டங்கள் VS Eelam Kings CC
4.ஜினோஷன் நாகேந்திரன்(Jinoshan Nagenthiran) of Sauga Boys CC – 53 ஓட்டங்கள்(N.O) VS BNS CC
5.பிரஷாந்த் யோகநாதன்(Prashanth Yoganathan) of Toronto Blues CC – 52 ஓட்டங்கள் VS B-Town Boyz CC
சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
1.ஜூட் டென்னிஸ்(Jude Denneiex) of Sauga Boys CC – 6 ஆட்டமிழப்புக்கள் VS Toronto Blues CC(3-0-21-6)
2.நிரோசன் ரவீந்திரன்(Nirosan Ravindiran) of Youngstars CC – 5 ஆட்டமிழப்புக்கள் VS BNS CC(3-0-13-5)
சிறந்த பிடியெடுப்புக்கள்(BEST CATCHES)
1.சசீபன் நாகராசன்(Saseepan Nagarajan) of Atlas CC VS BlueBirds SC
2.பரன்தாமன் செல்வரத்தினம்(Paranthaman Selvaratnam) of Cougars CC VS B-Town Boyz CC
3.சுஜன் ஆறுமுகம்(Sujan Arumugam) of Cougars CC VS GPS CC
4.மயூரன்(Mayooran) of Inuvil Boys Toronto CC VS Atlas-A CC
மேலதிக தொடர்புகளுக்கு www.mtcl.info