ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படும் MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடரில் நான்காவது வார நிறைவில் Cougars துடுப்பாட்ட அணி ஒரு போட்டியிலும் தோல்வியடையாது முதலாம் இடத்திற்கு முன்னேறியது

1,947


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படும் MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடரில் நான்காவது வார நிறைவில் Cougars துடுப்பாட்ட அணி ஒரு போட்டியிலும் தோல்வியடையாது முதலாம் இடத்திற்கு முன்னேறியது

மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால மென்பந்து போட்டித்தொடரின் ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் சிறப்புமிக்கதும், பாரம்பரியதுமான MTCL Super League Challenge Trophy போட்டித்தொடரின் நான்காவது வாரச்சுற்றுப்போட்டிகள் கடந்த 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (July 9th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(IDEAL DEVELOPMENT PARK) மைதானத்தில் இடம்பெற்றது. இந்த வாரப்போட்டிகளை GPS துடுப்பாட்ட அணியும், Toronto Blues துடுப்பாட்ட அணியும் பொறுப்பேற்று நடத்தினர். இந்த வாரப்போட்டிகள் உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு உரிய நேரத்தில் முடிக்கப்பட்டது. போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க உதவிய இரு அணியினருக்கும் MTCL அமைப்பினர் தமது நன்றிகளை தெரிவிக்கின்றனர்.

MTCL Super League Challenge Trophy போட்டித்தொடரின் மூன்றாவது வார நிறைவில் அதிக ஓட்டங்களை பெற்று முன்னிலையில் இருந்த வீரரான B-Town Boys துடுப்பாட்ட அணியை சேர்ந்த பிரசன்னா பத்மநாதன்(Sana Pathmanathan) அவர்களுக்கு செம்மஞ்சள் நிறத்(Orange Cap) தொப்பி வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், அதிக ஆட்டமிழப்புக்களை எடுத்து, தொடர்ந்து மூன்றாவது வாரம் நிறைவிலும் முன்னிலையில் இருந்த வீரரான GPS துடுப்பாட்ட அணியை சேர்ந்த ஜூதர்ஷன் பரன்சோதி(Jutharsan Paransothy) அவர்கள் ஊதா நிறத்(Purple Cap)தொப்பியை தொடர்ந்து தன்வசம் வைத்துக்கொண்டுள்ளமை இந்த வார சிறப்பம்சங்களில் ஒன்றாகும். அணிகள் தரவரிசையில் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியது Cougars துடுப்பாட்ட அணி. Cougars துடுப்பாட்ட அணி இந்த வருட MTCL சுப்பர் லீக் சவால் கிண்ணத்தொடரில் ஒருபோட்டியிலும் தோல்வி அடையாமல் முன்னிலையில் உள்ளமை அவ்வணியின் திறமையை வெளிக்காட்டும் விடயமாகும்.

இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)
1.நிஷாந்தன் இலங்கேஸ்வரன்(Nisanthan Ilangeswaran) of BNS CC – 74 ஓட்டங்கள்(N.O) Vs Atlas CC
2.ஆதில் சனீர்(Aadhil Zaneer) of Atlas-A CC – 70 ஓட்டங்கள் Vs Youngstars CC
3.ஆனந்த் மணிமாறன்(Ananth Manimaran) of Atlas CC – 67 ஓட்டங்கள்(N.O) Vs Western CC
4.நந்தன் கந்தையா(Nanthan Kandiah) of BlueBirds CC – 55 ஓட்டங்கள் Vs Atlas-A CC
5.ரகு ஞானசௌந்தரநாயகம்(Ragu Gnanasountharanayakam) of Youngstars CC – 53 ஓட்டங்கள் Vs Atlas-A CC
6.கிறிஸ்டி இலங்கேஸ்வரன்(Christy Ilangeswaran) of BNS CC – 51 ஓட்டங்கள் Vs B-Town Boyz CC
7.ஜதுர்ஷன் சந்நிதானந்தன்(Jathurshan Sanininathan) of Atlas CC – 51 ஓட்டங்கள் Vs BNS CC

சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)
1.கிறிஸ்டி இலங்கேஸ்வரன்(Christy Ilangeswaran) of BNS CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Eelam Kings CC(2-1-3-4)
2.ரமணன் விஜயன்(Ramanan Vijayan) of BlueBirds SC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs BNS CC(2.5–9-4)
3.துசி திரைவியம்(Thushy Thiraiviyam) of Western CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Sauga Boyz CC(3-0-17-4)
4.ஜினோஷன் நாகேந்திரன்(Jinoshan Nagenthiran) of Sauga Boyz CC- 4 ஆட்டமிழப்புக்கள் Vs Youngstars CC(2.4-0-17-4)
5.சயந்தன்(Sajanthan) of Inuvil Boyz Toronto CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Sauga Boyz CC(3-0-21-4)
6.ஜெய் முனியன்(Jey Muniyan) of Atlas-A CC – 4 ஆட்டமிழப்புக்கள் Vs Youngstars CC(3-0-28-4)

சிறந்த பிடியெடுப்புக்கள்(BEST CATCHES)
1.நிதர்ஷன் ஸ்ரீசண்முகர்(Nitharshan Srishanmugar) of Inuvil Boyz Toronto CC Vs Sauga Boyz CC
2.சயந்தன்(Sajanthan) of Inuvil Boyz Toronto CC Vs Cougars CC
3.மில்டன் மைகேல்(Milton Michael) of BlueBirds SC Vs Eelam Kings CC
4.வினோத் சண்முகலிங்கம்(Vinoth Shanmugalingam) of BlueBirds SC CC Vs BNS CC
5.லக்சன் ஜெகதீசன்(Laxshan Jegatheesan) of Atlas-A CC Vs Youngstars CC

மேலதிக தொடர்புகளுக்கு www.mtcl.info

Comments
Loading...